சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரை பற்றிய இந்த வீடியோவை பாத்தீங்களா? மிஸ் பண்ணீடாதீங்க!
சிட்ரோன் நிறுவனம் தனது சி3 ஏர்கிராஸ் என்ற மிட் சைஸ் எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டு வரப் போகிறது. இந்த கார் மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகவும் செக்மெண்டில் விற்பனைக்கு வர உள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த கார் மீது ஏற்பட்டுள்ளது. சிட்ரோன் நிறுவனம் தொடர்ந்து நல்ல தயாரிப்புகளை வெளியிடுவதால் இந்த கார் குறித்து மக்கள் அதிக ஆர்வமாக இருந்து வருகின்றனர்.
இந்த கார் சிட்ரோன் நிறுவனத்தின் சி3 ஹேட்ச்பேக் காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காராகும். இந்த காரின் வெளிப்புறம் மற்றும் உட்புற டிசைன் கட்டமைப்புகள் எல்லாம் ஹேட்ச்பேக் காரில் உள்ள பெரும்பான்மையான அம்சங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு காருக்கும் வித்தியாசம் தெரியும் படியான மாற்றங்கள் உள்ளன.
இந்த கார் ஒரே ஒரு வேரியண்டில் தான் விற்பனைக்கு வருகிறது. அதன் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 108.4 பிஎச்பி பவரையும் 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது இந்த இன்ஜின் 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் லிட்டருக்கு 18.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது. இந்த கார் குறித்த வீடியோவை உங்களுக்காக வழங்கியுள்ளோம். இந்த வீடியோவில் இந்த கார் குறித்த முழுமையான தகவல்கள் மற்றும் இந்த கார் ஓட்டி பார்க்க எப்படி இருக்கிறது என்ற விபரங்களை காணலாம்.


Click it and Unblock the Notifications








