எதிரிங்க கதையை காலியாக்க போகும் சி3 ஏர்கிராஸ் கார்! விலை இவ்வளவு கம்மியா?

சிட்ரோன் நிறுவனம் தனது சி3 ஏர்கிராஸ் என்ற எஸ்யூவி காரை பொது பார்வைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் இந்தாண்டு இரண்டாம் பாதியில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கார் இந்திய மார்கெட்டில் அதிக கார்கள் விற்பனையாகும் எஸ்யூவி செக்மெண்டில் விற்பனைக்கு வருகிறது. இதில் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன் இருப்பதால் இந்த கார் எஸ்யூவி கார்களுக்கு மட்டுமல்லாமல் எம்பிவி கார்களுக்கு கூட போட்டியாகக் களம் இறங்குகிறது. தற்போதைய நிலையில் இந்த கார் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது. இந்த கார்களின் ஒப்பீட்டைத் தான் இங்கே காணப்போகிறோம்.

C3 Aircross Vs Creta Vs Seltos

அளவுகள்: சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரில் ஏர்கிராஸ் கார் 4300 மிமீ நீளம், 2671 மிமீ வீல் பேஸ், 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 444 லிட்டர் மற்றும் 511 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஆகியன உள்ளது. இதுவே ஹூண்டாய் கிரெட்டா காரை பொருத்தவரை 4300 மிமீ நீளம், 1790 மிமீ அகலம், 1,635 மிமீ உயரம், 2610 மிமீ வீல்பேஸ் 190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் 433 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருக்கிறது.

கியா செல்டோஸ் காரை பொருத்தவரை 4315 மிமீ நீளம், 1800 மிமீ அகலம், 1620 மிமீ உயரம், 2610 மிமீ வீல்பேஸ், 190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது. அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் வீல் பேஸ் கொண்ட காராக சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் கார் தான் இருக்கிறது.

இன்ஜின்: சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரில் தற்போது ஒரே இன்ஜின் மட்டும் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் கிரெட்டா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல், மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. கியா செல்டோஸ் காரை பொருத்தவரை 1.5 லிட்டர் ஸ்மார்ட் ஸ்டீம் ஜி1.5 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மைலேஜ்: சிட்ரோன் சி3 ஏர் கிராஸ் காரை பொருத்தவரை லிட்டருக்கு 15-20 கி.மீ வரை மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் கிரெட்டா காரை பொறுத்தவரையில் ஹைவேயில் 21 கி.மீ மற்றும் சிட்டியில் 16 கி.மீ மைலேஜை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியா செல்டோஸ் காரை பொருத்தவரை 17-21 கி.மீ வரை மைலேஜை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைலேஜில் கிரெட்டா மற்றும் செல்டோஸ் தான் சிறப்பாக இருக்கிறது.

உட்புற கட்டமைப்பு: சிட்ரோன் சி3 காரில் 5+2 சீட்டர் லேஅவுட் இருக்கிறது. இந்த காரில் 10.0 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ஸ்ட் கிளஸ்டர், லேதர் சீட்கள், சாஃப்ட் பேடிங் டோர் ஆர்ம் செட் ஆகியன உள்ளன.

ஹூண்டாய் கிரெட்டா காரை பொருத்தவரை 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், பானரோமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன்பக்க சீட்கள், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், மல்டி ஃபங்சனல் ஸ்டியரிங் வீல் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

கியா செல்டோஸ் காரை பொருத்தவரை பின்பக்க சீட்டை மடக்கும் வசதி, பின் பக்க சீட்டில் உள்ள பணிகளுக்கு ஹெட்ரெஸ்ட், இன்டர்னலி அட்ஜெஸ்டபிள் ஓஆர்விஎம், எலெக்ட்ரிக் டெயில் கேட் ரிலீஸ், பின்பக்க கதவுகளிலும் பவர் விண்டோஸ் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்: சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரை பொருத்தவரை இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், 6 ஏர்பேக்குகள், சென்சாருடன் கூடிய ரியர் பார்க்கிங் கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

ஹூண்டாய் கிரெட்டா காரை பொருத்தவரை இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், 6 பேக் பேக்குகள், ரியர் பா்ர்கிங் சென்சார், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வெஹிகில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

கியா செல்டோஸ் காரை பொருத்தவரை 6 ஏர்பேக்குகள், பின் வரிசை நடு சீட்டில் இருப்பவருக்கு 3 பாயிண்ட் சிட் பெல்ட், டயர் பிளஷர் மானிட்டரிங் சிஸ்டம், சீட் பெல்ட் வார்னிங் உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் இருக்கிறது.

விலை: ஹூண்டாய் கிரெட்டா காரின் விலையைப் பொருத்தவரை ரூ11.14 லட்சம் முதல் ரூ21.68 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது. அதே நேரம் கியா செல்டோஸ் காரை பொருத்தவரை ரூ10.89 லட்சம் முதல் ரூ19.65 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரின் விலையை விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த காரின் அதிகாரப்பூர்வ அறிமுகத்தின் போது தான் விலை விபரம் வெளியாகும். இருந்தாலும் இந்த கார் ரூ7.5 லட்சம் என்ற விலையிலேயே விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரின் விலை வெளியாகவில்லை என்றாலும் போட்டியாளர்களின் விலையை விடக் குறைவான விலையிலும், அதே நேரம் அதிகமான வேரியன்டிலும் இந்த கார் விற்பனைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. அப்படி வந்தால் போட்டியாளர்களுக்கு இந்த காரின் விற்பனை சற்று தலைசுற்ற வைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

More from DriveSpark

Article Published On: Friday, April 28, 2023, 11:00 [IST]
English summary
Citroen c3 aircross vs hyundai creta vs kia seltos price engine features comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+