விலை குறைவான இந்த சிட்ரோன் காரின் உண்மை தன்மை தெரியாமா வாங்காதீங்க!! பாதுகாப்பில் மொத்தமாக 0
சிட்ரோன் சி3 (Citroen C3) கார் லத்தீன் என்சிஏபி மோதல் சோதனையில் முற்றிலுமாக சொதப்பி, பூஜ்ஜிய மதிப்பெண்களை பெற்று அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. எதன் காரணமாக சி3 கார் இவ்வாறு மோசமான மதிப்பெண்களை பெற்றுள்ளது? சி3 காருக்கு அப்படி என்ன மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன? என்ற விபரங்களை இனி பார்க்கலாம்.
பிரெஞ்சு கார் நிறுவனமான சிட்ரோனின் விலை குறைவான கார் சி3 ஆகும். இந்திய சந்தையில் சி5 ஏர்கிராஸ் மூலம் நுழைந்த சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தைக்கு ஏற்ப ஒரு காரை அறிமுகம் செய்யும் முயற்சியில் சி3 ஹேட்ச்பேக் காரை களமிறக்கியது. இந்த கார் லத்தீன் அமெரிக்க நாட்டு சந்தைகளிலும் விற்பனையில் உள்ளது.

லத்தீன் அமெரிக்க நாட்டு சந்தைகளுக்கான சிட்ரோன் சி3 கார்கள் பிரேசில் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு பிரேசிலில் உற்பத்தி செய்யப்படும் சி3 கார் தான் சமீபத்தில் லத்தீன் என்சிஏபி பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஐரோப்பிய பிராண்ட்டின் தயாரிப்பு என்பதால் கார் நல்ல மதிப்பெண்ணை பெறும் அல்லது குறைந்தப்பட்சம் சுமாரான மதிப்பெண்ணை ஆவது பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சிட்ரோன் சி3 கார் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக லத்தீன் என்சிஏபி மோதல் சோதனையில் 5க்கு 0 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. பெரியவர்கள் பாதுகாப்பில், பிரேசில் உருவாக்கப்பட்ட சி3 கார் 12.21 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளது. இது பெரியவர்கள் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் மொத்த மதிப்பெண்ணில் வெறும் 31% மட்டுமே ஆகும்.

குழந்தைகள் பாதுகாப்பில் வெறும் 5.93 மதிப்பெண்களை மட்டுமே இந்த கார் பதிவு செய்துள்ளது. மொத்த மதிப்பெண்ணில் இது 12% மட்டுமே ஆகும். பாதசாரிகளுக்கு அளிக்கும் பாதுகாப்பில் மட்டும் ஒரளவிற்கு சுமாராக 23.88 மதிப்பெண்களை சி3 கார் பெற்றுள்ளது. பாதசாரி பாதுகாப்புக்கான மொத்த மதிப்பெண்ணில் இது 50% ஆகும்.
இந்த காரில் உள்ள பாதுகாப்பு உதவி அமைப்புகளை ஆராய்ந்த லத்தீன் என்சிஏபி குழுவினர் 15 புள்ளிகளை வழங்கியுள்ளனர். என்சிஏபி குழு நிர்ணயித்துள்ள மொத்த மதிப்பெண்களில் இது 35% ஆகும். சிட்ரோன் சி3 காரில் அப்படி என்ன போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை என்று பார்த்தால், இந்த காரில் முன் இருக்கை பயணிகளுக்கு 2 ஏர்பேக்குகளை மட்டுமே சிட்ரோன் நிறுவனம் வழங்குகிறது.

சீட்பெல்ட்களில் லோடு லிமிடெர்கள் உள்ளன, ஆனால் ப்ரீடென்சனர்கள் போதுமான அளவில் இல்லை. மோதலின்போது, காரின் முன்பக்க உடற்கூடு நிலையானதாக இல்லை என லத்தீன் என்சிஏபி கூறியுள்ளது. ஓட்டுனர் தலைக்கான பாதுகாப்பில் ஆர்32 விதிமுறைகளை சி3 கார் பூர்த்தி செய்யவில்லை என கூறும் லத்தீன் என்சிஏபி குழு பின்பக்க மோதலுக்கான யுஎன் ஆர்32 விதிமுறைகளையும் பூர்த்தி செய்யவில்லை என கூறியுள்ளது.
சில இயந்திர பாகங்களின் மாற்றங்களை தவிர்த்து, பிரேசிலில் உருவாக்கப்படும் சி3 காரும் இந்திய சி3 காரும் கிட்டத்தட்ட ஒன்றே. இரண்டு காரையும் ஒரே மாதிரியான சேசிஸில் சிட்ரோன் உருவாக்குகிறதா என்பது தெரியவில்லை. ஆனால், சிசி21 என்ற குறியீட்டால் பெயரால் இரு கார்களும் அழைக்கப்படுக்கின்றன. அதுமட்டுமின்றி, இரண்டும் சிஎம்பி பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்திய மக்களுக்கு ஏற்ற விலை குறைவான கார் சிட்ரோன் சி3 ஆகும். விலை குறைவான கார்கள் பெரும்பாலும் பாதுகாப்பானதாக இருப்பதில்லை என்கிற கருத்தை ஆம் என்பதுபோல் சி3 காரின் லத்தீன் என்சிஏபி சோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. இது உலகளவில் முன்னணி ஆட்டோமொபைல் குழுவான ஸ்டெல்லாண்டிஸிற்கு மற்றுமொரு சறுக்கல் ஆகும்.


Click it and Unblock the Notifications









