Citroen C3 Shine விற்பனைக்கு அறிமுகம்... குறைவான விலையில் அதிக பிரீமியம் அம்சங்கள் வேணுமா? இத கொஞ்சம் பாருங்க!

இந்தியாவின் மலிவு விலை கார் மாடல்களில் சிட்ரோன் சி3-ம் ஒன்று. இந்த கார் மாடலிலேயே சிட்ரோன் நிறுவனம் புதிய ட்ரிம்மை இப்போது இந்தியா சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. சிட்ரோன் சி3 ஷைன் எனும் வேரியண்டையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இது ஓர் உயர்நிலை வேரியண்டாகும். அதாவது, இப்போது விற்பனையில் இருக்கும் பிற சிட்ரோன் சி3 மாடலின் தேர்வுகளைக் காட்டிலும் அதிக விலைக் கொண்டதாக புதிய ஷைன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்ட தேர்வாக சி3 ஷைன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

Citroen c3 front beauty

அட்ஜெஸ்டபிள் விங் மிர்ரர்கள், ரியர் பார்க்கிங் கேமிரா, மேனுவல் டே/நைட் ரியர் வியூவ் மிர்ரர் மற்றும் முன் பக்கத்தில் ஃபாக் லேம்ப்புகள் என எக்கசக்க அம்சங்கள் இந்த தேர்வில் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. சில சூப்பரான அம்சங்கள் சி3 இல் வழங்கப்படாமல் இருந்தது.

பின் பக்கத்தில் வைப்பர், வாஷர் மற்றும் டிஃபாக்கர் ஆகிய அம்சங்களையே அது வழங்காமல் தவிர்த்திருந்தது. ஆனால், இப்போது அவற்றை சி3 ஷைனில் அறிமுகம் செய்திருக்கின்றது. இதுதவிர இன்னும் பல அம்சங்கள் இந்த காரில் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், சிட்ரோன் சி3 ஷைன் வேரியண்டில் மை சிட்ரோன் இணைப்பு ஆப் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.

Citroen c3

இந்த ஆப் வாயிலாக காரில் 35 விதமான கன்ட்ரோல்களை செய்துக் கொள்ள முடியும். இதுபோன்ற இன்னும் பல நவீன வசதிகளையே சிட்ரோன் அதன் புதிய ஷைன் ட்ரிம்மில் வழங்கி இருக்கின்றது. புதிய ட்ரிம்மில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 82 எச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது. அதேவேளையில், இன்னும் சில மாதங்களில் இந்த தேர்வில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் தேர்வும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Citroen c3 running shot

இதன் அறிமுகம் அடுத்த மாதம் அல்லது இன்னும் சில நாட்களில் அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரின் வருகை டாடா பஞ்ச், மாருதி சுஸுகி இக்னிஸ் உள்ளிட்டவற்றிற்கு கூடுதல் போட்டியை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையிலேயே சி3 இல் புதிய ஆப்ஷனை சிட்ரோன் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

இதன் வருகையால் இரு போட்டி கார் மாடல்களுக்கும் விற்பனையில் பாதிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் பிரீமியம் தர கார் என்பதால் ஏற்கனவே அதன் போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையிலேயே கூடுதல் மிக அதிக பிரீமியம் அம்சங்களைக் கொண்டதாக சி3 ஷைன் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இதனுடன் சிறப்பு வசதியாக சிட்ரோன் நிறுவனம் சி3 ஷைன் தேர்விற்கு வைப் எனும் பேக்கை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த பேக்கின் விலை ரூ. 12 ஆயிரம் ஆகும். இதை செலுத்தும் பட்சத்தில் கூடுதல் சிறப்பு வசதிக் கொண்டதாக சி3 ஷைனை சிட்ரோன் மாற்றிவிடும். அதாவது, கூடுதல் அலங்கரிப்பை இந்த கட்டணத்தின்கீழ் சிட்ரோன் செய்து தரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

இந்தியாவில் விலை உயர்ந்த மற்றும் அதிக பீரிமியம் வசதிகள் கொண்ட கார்களுக்கு வரவேற்பு தற்போது பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே பிரீமியம் தர வசதிகளை விரும்புவோர்களைக் கவரும் பொருட்டு சிட்ரோன் நிறுவனம் சி3 கார் மாடலில் புதிதாக ஷைன் ட்ரிம்மை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 13, 2023, 20:25 [IST]
English summary
Citroen c3 shine top trim launched at rs 7 60 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X