லிட்டருக்கு 19.3 கிமீ மைலேஜ் தரும் சிட்ரோன் சி3 ஷைன் அறிமுகம்.. விலை இவ்ளோ கம்மியா சொல்லுவாங்கனு எதிர்பாக்கல!
சிட்ரோன் சி3 (Citroen C3) கார் மாடலில் புதிய தேர்வை நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. அதிக திறன் வெளிப்பாடுக் கொண்டதாகவும், அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாகவும் இந்த தேர்வு உள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் மலிவு விலை கார் மாடல்களில் சிட்ரோன் சி3 (Citroen C3)-ம் ஒன்று. இந்த கார் இந்தியாவில் ரூ. 6.16 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த மாடலிலேயே சற்று அதிக சிறப்பு வசதிகள் மற்றும் அதிக பவர்ஃபுல் மோட்டார் கொண்ட தேர்வை சிட்ரோன் நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

சிட்ரோன் சி3 ஷைன் (Citroen C3 Shine) எனும் பெயரில் புதிய தேர்வு விற்பனைக்குக் கிடைக்கும். இந்த புதிய தேர்விற்கு அறிமுக விலையாக ரூ. 8.28 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. பிஎஸ் 6 கட்டம் 2 விதிக்கு உட்பட்ட டர்போ பெட்ரோல் மோட்டாரே சி3-இன் புதிய தேர்வில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19.3 கிலோ மீட்டர் வரையில் மைலேஜ் தரும். அராய் (ARAI)-ம் இந்த மைலேஜ் திறனை உறுதி செய்திருக்கின்றது. இந்த மோட்டாரை ப்யூர் டெக் (Puretech) தொழில்நுட்பத்தைக் கொண்டு சிட்ரோன் தயார் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுவே புதிய தேர்வின் அதிக மைலேஜ் திறனுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. இதுதவிர ஏற்கனவே கூறியதை போல 13 புதிய சிறப்பம்சங்களை இந்த காரில் சிட்ரோன் சேர்த்திருக்கின்றது. குறிப்பாக, 'மை சிட்ரோன் கன்னெக்ட்' (My Citroen Connect application) அம்சம் இந்த காரில் சேர்க்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த அம்சத்தின் வாயிலாக 35 க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் இணைப்பு வசதிகளை கஸ்டமர்களால் பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிர, பாதுகாப்பு அம்சங்களாக எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் ஆட்டோ எஞ்ஜின் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் என எக்கசக்க அம்சங்கள் புதிய சிட்ரோன் சி3 ஷைன் தேர்வில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் சைடு மிர்ரர்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, டே மற்றும் நைட் விஷன் திறன் கொண்ட ஐஆர்விஎம், ரியர் ஸ்கிட் பிளேட், ரியர் டிஃபாக்கர், ரியர் வைப்பர் மற்றும் வாஷர் ஆகியவையும் சிட்ரோனின் சி3 ஷைன் தேர்வில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
மேலும், சி3 ஷைன் டூயல் டோன் மற்றும் டூயல் டோன் வைப் பேக் என ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கும். டூயல் டோன் வைப் பேக் அதிக பிரீமியம் லுக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இதற்கு ரூ. 8.92 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

புதிய சிட்ரோன் சி3 ஷைன் தேர்வில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் டர்போ பெட்ரோல் மோட்டார் 109 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வே இதில் வழங்கப்படுகின்றது. இந்த மோட்டார் தினசரி நகர பயன்பாடு மற்றும் ஹை-வே பயன்பாடு என அனைத்திற்கும் உகந்தது என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய சிட்ரோன் சி3 ஷைன் டர்போ இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. மைலேஜ், தொழில்நுட்பம், எஞ்ஜின் திறன் என அனைத்திலும் இந்த தேர்வு மிக சிறந்த தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது. ஆகையால், இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









