உலகின் தலை சிறந்த விருதை வென்ற மேட்-இன் இந்தியா கார்... ஒட்டுமொத்த உலகமே வாயடைச்சு நிக்குது!
உலகின் தலை சிறந்த விருதுகளில் ஒன்றை மேட்-இன் இந்திய தயாரிப்பு கார் ஒன்று பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்படும் கார் மாடல்களில் சிட்ரோன் சி3 (Citroen C3)-ம் ஒன்று. இந்த கார் மாடலே அரிய விருதை வென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
'2023 வேர்ல்டு அர்பன் கார்' (2023 World Urban Car Award) எனும் விருதையே சிட்ரோன் சி3 வென்றிருக்கின்றது. இது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. அண்மைக் காலங்களாக இந்திய தயாரிப்புகளுக்கு உலக அரங்கில் நல்ல மதிப்பும், வரவேற்பும் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.

இந்த நிலையிலேயே இந்த சூப்பரான விருது மேட்-இன் இந்திய தயாரிப்பு காருக்குக் கிடைத்து இருக்கின்றது. நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை குறைவான கார் மாடல்களில் சிட்ரோன் சி3-ம் ஒன்று. இத்தகைய காருக்கு 2023 வேர்ல்டு அர்பன் கார் விருதுக் கிடைத்திருப்பது நம் மக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.
இதன் ஆரம்ப விலை 6.16 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த கார் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோது ரூ. 5.60 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆகையால், டாடா பஞ்ச் மற்றும் ரெனால்ட் கைகர் உள்ளிட்ட கார்களுக்கு மிக சிறந்த போட்டியாளனாக அது கருதப்பட்டது.

இந்த நிலையிலேயே வாகன கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் காரணம் காட்டி இந்த வாகனத்தின் விலையை தற்போது ரூ. 6 லட்சத்தையும் தாண்டும் வகையில் சிட்ரோன் நிறுவனம் உயர்த்தி இருக்கின்றது. ஆமாங்க இப்போதைய நிலவரப்படி சற்று காஸ்ட்லியான கார் மாடலாக சிட்ரோன் சி3 காட்சி அளிக்கின்றது.
நேற்றைய (ஏப்ரல் 5) தினம், நியூயார்க் ஆட்டோ ஷோ, நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த ஷோ வாயிலாகவே சிட்ரோன் சி3-க்கான விருது வழங்கப்பட்டு இருக்கின்றது. 32 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100க்கும் அதிகமான வாகனத்துறைச் சார்ந்த செய்தியாளர்கள் சிட்ரோன் சி3க்கு வாக்களித்த நிலையில் இந்த விருது அக்காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

அனைத்து செய்தியாளர்களும் சர்வதேச ஊடகங்களைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. 4.25 மீட்டர் கார்களுக்கான பிரிவிலேயே இந்த விருதை சி3 வென்றிருக்கின்றது. இதுபோன்று இந்தியாவிலும் பல்வேறு விருதுகளை இந்த கார் வென்றிருக்கின்றது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டிற்கான மிக சிறந்த ஹேட்ச்பேக் கார் எனும் விருதை அது வென்றிருக்கின்றது.
இதுபோன்று இன்னும் பல விருதுகளை சிட்ரோன் சி3 வென்றிருக்கின்றது. இதுவரை பத்துக்கும் அதிகமான விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. சிட்ரோன் சி3 ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் காராகும். இந்த காரில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிக் கொண்ட 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, ரிமோட் லாக்கிங் சிஸ்டம், ரியர் வியூ கேமிரா, எலெக்ட்ரானிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட ஓஆர்விஎம், ரியர் விண்ட் ஸ்கிரீனுக்கான டிமிஸ்டர், காரின் பின் பகுதியில் வாஷர் மற்றும் வைப்பர் உள்ளிட்ட எக்கச்சக்க அம்சங்களும் சிட்ரோன் சி3 காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதே போல் பாதுகாப்பு கருவிகளும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ஆறு ஏர் பேக்குகள், மும்முனை சீட் பெல்டுகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் அம்சம், ஏபிஎஸ் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை சி3-இல் கொடுக்கப்பட்டு உள்ளன.
இரு விதமான மோட்டார் தேர்வில் சி3 விற்பனைக்குக் கிடைக்கிறு. 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மற்றும் 1.2 லிட்டர் டர்போ சார்ஜட் பெட்ரோல் ஆகியவையே அவை ஆகும். இவற்றுடன், 5 ஸ்பீடு மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகிறது. ஆனால் எந்த மோட்டாரிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
புதிய விருதான சிட்ரோன் சி3 காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியர்கள் மத்தியில் பிரீமியம் தர கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சி3 பிரீமியம் தர அம்சங்களையும், அதேவேளையில், மதிப்பு கூட்டப்பட்ட விருதுகளையும் தாங்கி இருப்பதால் நல்ல டிமாண்டை வரும் காலங்களில் பெறலாம் என யூகிக்க முடிகின்றது.


Click it and Unblock the Notifications









