இன்னும் 1 நாள் தான்! இந்த காரின் விலை ரூ32 ஆயிரம் ஏறப்போகுது!
சிட்ரோன் நிறுவனம் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் தனது அனைத்து கார்களுக்கான விலையை அதிகரிக்கப் போவதாக தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது நிறுவனத்தின் கார்களில் விலை ரூபாய் 31800 வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் தனது கால்அடி தடத்தை பதித்து வைத்து வரிசையாக தரமான தயாரிப்புகளை களம் இறக்கி வருகின்றன. அந்நிறுவனத்தின் தயாரிப்பில் தரமான தயாரிப்புகளாக இருப்பதால் மக்கள் மெல்ல மெல்ல சிட்ரோன் நிறுவனத்தை நோக்கி தங்கள் பார்வையை திருப்பி வருகின்றனர். பல விரும்பி சிட்ரோன் கார்களை வாங்கி வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் சிற்றோன் கார்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது.

இந்நிலையில் சிட்ரோன் நிறுவனம் வரும் ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் தனது தயாரிப்புகளுக்கான விலையை அதிகரிக்க போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பல நிறுவனங்கள் வரிசையாக தங்கள் தயாரிப்புகளின் விலையை அதிகரிக்க போவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது சிட்ரோன் நிறுவனமும் அத்துடன் சேர்ந்துள்ளது. இதன்படி ஒவ்வொரு வாகனங்களுக்கும் எவ்வளவு விலை அதிகரிக்கப் போகிறது என்ற தகவலை காணலாம்.
சிட்ரோன் நிறுவனத்தின் இசி3 கார் தான் தான் இருப்பதிலேயே அதிகமான விளைவு வியர்வை சந்தித்துள்ளது. இந்த காரின் என்ட்ரி லெவல் லைவ் வேரியண்டை தவிர மற்ற அனைத்து வேரியண்டுகளும் ரூபாய் 31800 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே நிலைமைதான் c3 ஏர்கிராஸ் காருக்கும் இருக்கிறது. 1.2 5 எஸ் என்ற பேஸ் காருக்கு மட்டும் ரூபாய் 20,800 விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக சி3 காரை பொருத்தவரை பொருத்தவரை சைன் வேரியன்டை நீங்கள் தேர்வு செய்தால் கூடுதலாக ரூபாய் 15,800 செலவு செய்ய வேண்டியது இருக்கும். இதுபோக மற்ற அனைத்து வேறுயன்களுக்கும் ரூபாய் 18 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு சிட்ரோன் காரின் விலை தற்போது ரூபாய் 5.98 லட்சம் முதல் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது.
சிட்ரோன் நிறுவனம் தனது கார்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது புதிய சி3எக்ஸ் கிராஸ் ஓவர் செடான் கார் விரைவில் சிட்ரோன் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மார்க்கெட்டில் செடான் கார்களுக்கான மார்க்கெட் குறைவாக இருக்கும் நிலையில் துணிந்து சிட்ரோன் நிறுவனம் தனது செடான் காரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
தற்போது இந்தியாவில் செடான் மார்க்கெட்டில் மாருதி டிசையர், ஹூண்டாய்ஆரா, ஹூண்டாய் வெர்னா, டாடா டியாகோ, மற்றும் சொகுசு போக்ஸ்வேகன் செடான் கார்கள் இந்தியாவில் விற்பனையில் உள்ளன. இந்நிலையில் சிட்ரோன் நிறுவனம் தனது புதிய சி3 எக்ஸ் என்ற கிராஸ் ஓவர் செடான் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதற்காக இந்தியாவில் இந்த காரை நிறுவனம் டெஸ்ட் செய்து வருகிறது.
இந்த கார் நோட்ச்பேக் ஸ்டைல் வடிவமைப்பை கொண்டதாக இருக்கிறது. விரைவில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் கீழாக லிஸ்ட் செய்யப்படும் என தெரிகிறது. சிட்ரோன் சிஎக்ஸ் காரை பொருத்தவரை பாடி ஸ்டைல் மட்டுமே நோட்ச்பேக் ஸ்டைலில் இருக்கிறது. முன்பக்கம் மஸ்குலரான போனட் பம்பரில் ஹெட்லைட் பொருத்தப்பட்டிருக்கிறது. டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளன. சிலிகான கிரில் சிட்ரோட் பேட்ஜிங் உடன் வழங்கப்பட்டுள்ளது.
இதில் முன்பக்கம் ஏர் டேம் மற்றும் பாக் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன சுற்றிலும் குரோம் ஃபினிஷ் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக ஓஆர்விஎம் பகுதியில் இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் அலாய் வீல் பொருத்தப்பட்ட காராக இருக்கிறது. பின்பக்கம் விராப் செய்யப்பட்ட டெயில் லைட் மற்றும் விண்டோ வைப்பர்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் இன்ஜினை பொருதத்வரை 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுபோக கூடுதலாக டார்க் கன்வெர்ட்டர் கியர் பாக்ஸும் ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ளது. இதுபோக இந்நிறுவனம் ஹைபிரிட் இன்ஜின் ஆப்ஷனையும் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் அதிகபட்சமாக 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிட்ரோன் நிறுவனம் தற்போது தான் மெல்ல மெல்ல தனது தயாரிப்புகளை அதிகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்று வரும் நிலையில் அனைத்து கார் நிறுவனங்களை போல சிட்ரோன் நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கான விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது தவிர்க்க முடியாத ஒரு விலை ஏற்றம் தான்.


Click it and Unblock the Notifications








