இன்னும் மூனே மாசத்துல டாடா டியாகோ இவிக்கு ஆப்பு வைக்க வருகிறது சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார்...

சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்கிற தகவல் வெளியாகி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலகப் புகழ்பெற்ற சிட்ரோன் (Citroen) நிறுவனம் இந்தியாவில் இரு கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. சி5 ஏர்கிராஸ் மற்றும் சி3 ஆகிய கார் மாடல்களையே நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் மலிவு விலை கார் மாடலாக சி3 இருக்கின்றது. ரூ. 6 லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்த கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

எலெக்ட்ரிக் கார்

இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையே நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது. இதன் வருகை எப்போது என்கிற தகவலையே நிறுவனம் தற்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது. நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி இந்த ஆண்டின் முதல் காலாண்டிலேயே அது களமிறக்கப்பட்டுவிடும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

நிறுவனம் தனது ஸ்மார்ட் கார் திட்டத்தின்கீழே இந்த காரை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டு இருக்கின்றது. இந்தியாவிற்கு மட்டுமின்றி இந்த காரை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. சிஎம்பி பிளாட்பாரத்தில் வைத்தே சி3 காரை நிறுவனம் வடிவமைக்க இருக்கின்றது. இதனை மலிவு விலையில் விற்பனைக்குக் கொண்டு வரவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் கார்

இந்த எலெக்ட்ரிக் கார் இ-சி3 (Citroen e-C3) எனும் பெயரில் விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் இ-சி3 எலெக்ட்ரிக் கார் ரூ. 10 லட்சம் தொடங்கி ரூ. 12 லட்சம் வரையிலான குறைவான விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைவிட குறைவான விலையில் இந்த கார் விற்பனைக்கு வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஏனெனில் இந்த காரில் 90 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரில் வழக்கமான சி3 இல் இருக்கும் சிறப்பம்சங்கள சில இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், 26 செமீ அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சி பட்டி இணைப்பு தொழில்நுட்பம், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் குரல் கட்டளை அம்சம் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.

எலெக்ட்ரிக் கார்

இதுதவிர சிரி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களும் இந்த வாகனத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், எஞ்ஜின் இம்மொபிலைசர், ஹை ஸ்பீடு அலர்டு சிஸ்டம் மற்றும் ஸ்பீடு சென்சிடிவ் ஆட்டோ டூர் லாக் போன்ற அம்சங்களும் இ-சி3 எலெக்ட்ரிக் காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளும் இந்த காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி சிட்ரோன் நிறுவனம் தற்போது ஜியோ-பிபி உடன் கூட்டு சேர்ந்திருக்கின்றது. இந்த கூட்டணியின் வாயிலாக நிறுவனம் சார்ஜிங் நெட்வொர்க்கை உருவாக்க இருக்கின்றது.

நாடு முழுவதும் உள்ள முக்கிய பகுதிகளில் சார்ஜிங் வலையமைப்பை உருவாக்குவதன் வாயிலாக தங்களின் எலெக்ட்ரிக் காருக்கு கூடுதல் வரவேற்பைப் பெற முடியும் என நிறுவனம் நம்புகின்றது. இந்த சார்ஜிங் நெட்வொர்க்கை மை சிட்ரோன் கன்னெக்ட் செயலி வாயிலாக கண்டறிந்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Sunday, January 15, 2023, 6:30 [IST]
English summary
Citroen e c3 launch details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+