ஷோரூமுக்கே வந்திருச்சு... டாடாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரின் சாம்ராஜ்யத்தை ஆட்டி பார்க்க இ-சி3 தயார்!

விற்பனையாளர்களின் ஷோரூம்களுக்கு சிட்ரோன் இ-சி3 (Citroen eC3) எலெக்ட்ரிக் கார் வர தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக சிட்ரோன் கார் ஷோரூமில் இ-சி3 கம்பீரமாக நிற்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த தகவல் எலெக்ட்ரிக் காரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த மின் வாகன ஆர்வலர்களை குஷியில் ஆழ்த்தி இருக்கின்றது.

இந்தியர்கள் பலர் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் மாடலாக சிட்ரோன் இ-சி3 இருக்கின்றது. டாடா மோட்டார்ஸின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் மாடல்களான டியாகோ இவி மற்றும் டிகோர் இவி-க்கு போட்டியாக இந்த வாகனத்தை சிட்ரோன் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. குறிப்பாக டியாகோ இவி-க்கே போட்டியாகவே அதனை தயார் செய்திருக்கின்றது.

சிட்ரோன்

ஆமாங்க, சிட்ரோன் இ-சி3 ஓர் ஹேட்ச்பேக் ரக எலெக்ட்ரிக் காராகும். ஏற்கனவே இந்த காரை சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் வைத்து வெளியீடு செய்துவிட்டது. இன்னும் ஒரு சில தினங்களில் இக்காருக்கான விற்பனை பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட இருக்கின்றன. இதற்கான பணிகளிலேயே சிட்ரோன் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

புக்கிங்குகளை ஏற்கும் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் ரூ. 25 ஆயிரம் செலுத்தி இ-சி3 எலெக்ட்ரிக் காரை புக் செய்து கொள்ளலாம். இந்தமாதிரியான சூழலிலேயே விற்பனையாளர்களின் ஷோரூம்களுக்கு சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் கார்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இதை அடுத்து எலெக்ட்ரிக் காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் பணிகளையும் சிட்ரோன் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த காரின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. டாடாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரான டியாகோ இவி-க்கு சவால் கொடுக்கும் குறைவான விலையே அதற்கு நிர்ணயிக்கப்பட இருக்கின்றது.

ரூ. 11 லட்சம் என்கிற ஆரம்ப விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் இரு விதமான ட்ரிம்களில் விற்பனைக்கு கிடைக்கு இருக்கின்றது. ஃபீல் (Feel) மற்றும் லைவ் (Live) எனும் இரு விதமான தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும்.

எலெக்ட்ரிக் காரில் 57 பிஎஸ் திறனை வெளியேற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டாருக்கான மின்சார திறனை வழங்க 29.2 kWh ஏர் கூல்டு பேட்டரி பேக்கே உபயோகம் செய்யப்பட்டு உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 320 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், நிஜ வாழ்க்கை பயன்பாட்டிற்கு வரும்போது இதைவிட சற்று குறைவான ரேஞ்ஜையே இ-சி3 வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டிராஃபிக் மற்றும் பிற காரணங்களினால் இதன் ரேஞ்ஜ் திறன் சற்று குறைய வாய்ப்புகள் உள்ளன. தொழில்நுட்ப விஷயத்தில், பெட்ரோல் வெர்ஷனைப் போலவே மிக சிறந்ததாக இ-சி3 உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட 10அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மேனுவல் ஏசி, பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் மற்றும் ரிமோட் லாக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை இ-சி3 எலெக்ட்ரிக் காரில் இடம் பெற்றிருக்கும். இதேபோல் பாதுகாப்பு வசதிகளும் தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றது. மிக முக்கியமாக இரு ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் போன்ற அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.

சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் காரை வீட்டு சார்ஜிங் பாயிண்டில் வைத்தும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஆனால், இதை பயன்படுத்தி சார்ஜ் செய்யும்போது அதிக நேரத்த இ-சி3 முழுமையாக சார்ஜாக எடுத்துக் கொள்ளும். உதாரணமாக, 15A சாக்கெட்டைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யும்பட்சத்தில் 10 மணி நேரத்திற்கும் அதிகமான நேரங்களையே முழுமையாக சார்ஜாக அந்த வாகனம் எடுத்துக் கொள்ளும்.

அதுவே, டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டை பயன்படுத்தும்போது வெறும் 57 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜை ஏற்றிவிட முடியும். இந்த முறையை பயன்படுத்தி சார்ஜ் செய்யும்போது எலெக்ட்ரிக் காரின் பேட்டரி பேக்கின் ஆயுட்காலத்தை பாதுகாக்க முடியும் என நிறுவனத்தின் பிராண்ட் ஹெட்டான சௌரப் வத்சா தெரிவித்தார். எலெக்ட்ரிக் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு மணிக்கு 107 கிமீ என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 25, 2023, 8:34 [IST]
English summary
Citroen e c3 reaches dealership showroom
மேலும்... #சிட்ரோன் #citroen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X