நாடே எதிர்பார்த்த சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் கார் வெளியீடு!.. டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆபத்து உறுதி!

சிட்ரோன் நிறுவனம் அதன் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக உருவாக்கி இருக்கும் இ சி3 (Citroën e-C3)-யை வெளியீடு செய்து உள்ளது. இந்த காருக்கு ஏற்கனவே புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கிவிட்டன. இந்த நிலையிலேயே வெளியீட்டு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. இதன் வெளியீடு குறித்து மேலும் பல முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மின்சார வாகனங்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகின்றது. ஹைதராபாத் இ-மோட்டார் ஷோ 2023 (Hyderabad E-Motor Show 2023) எனும் பெயரில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் வாகன உற்பத்தியாளர்கள் பலர் தங்களின் புதுமுக மின்சார வாகனங்களைக் காட்சிப்படுத்தி வருகின்றனர். இது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரத்யேக கண்காட்சி ஆகும். இந்த ஷோவின் வாயிலாக சிட்ரோன் அதன் முதல் மின்சார காரை வெளியீடு செய்திருக்கின்றது.

எலெக்ட்ரிக் கார்

சிட்ரோன் இ-சி3 வெளியீடு

இ-சி3 எலெக்ட்ரிக் காரையே நிறுவனம் வெளியீடு செய்து உள்ளது. இந்தியாவில் இந்த காருக்கு எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. நிறுவனத்தின் மலிவு விலை கார் மாடலாக சி3 இருக்கின்றது. இதை தழுவியே சிட்ரோன் நிறுவனம் இ-சி3 மின்சார காரை உருவாக்கி இருக்கின்றது. எனவேதான் இதற்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே யாரும் எதிர்பார்த்திராத சம்பவத்தை சிட்ரோன் இன்று (பிப்ரவரி 8) செய்திருக்கின்றது.

கண்காட்சி

அதாவது வாகன கண்காட்சி வாயிலாக இ-சி3 மின்சார காரை வெளியீடு செய்து உள்ளது. இந்த காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 25 ஆயிரம் எனும் குறைவான கட்டணத்தில் முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. டீலர்ஷிப் அல்லது ஆன்லைன் வாயிலாக காருக்கான புக்கிங்கைச் செய்துக்கொள்ள முடியும். இந்த காரின் விலை இப்போது வரை அறிவிக்கப்படவில்லை. இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.

எலெக்ட்ரிக் கார்

320 கிமீ போகலாம்

இதன் விலை மிகவும் மலிவானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமான தகவல்களே இப்போது வரை வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுவும் அக்காரின்மீது பலமடங்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்பட ஓர் காரணமாக உள்ளது. சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் காரில் 29.2 kWh பேட்டரி பேக் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 320 கிமீட்டர்., தூரம் வரை பயணிக்க முடியும்.

டாடா நெக்ஸானுக்கு டஃப் கொடுக்கும் ரேஞ்ஜ்

இது டாடா நெக்ஸான் இவி பிரைம் மாடலுக்கு டஃப் கொடுக்கும் ரேஞ்ஜ் திறன் ஆகும். இதேபோல், இதன் பேட்டரி பேக்கை வெகு விரைவில் சார்ஜ் செய்து கொள்ளும் விதமான அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன. அந்தவகையில், டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டை பயன்படுத்தி சார்ஜ் செய்யும்போது வெறும் 57 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும்.

எலெக்ட்ரிக் கார்

அதேவேளையில் நிறுவனம் வழங்கும் வீட்டிற்கான சார்ஜிங் கருவியை வைத்து சார்ஜ் செய்யும்போது 10 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய அதிகபட்சமாக 10.5 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். இதன் உடன் சேர்த்து சிட்ரோன் நிறுவனம் மணிக்கு அதிகபட்சமாக 107 கிமீ பயணிக்கக் கூடிய மின் மோட்டாரை பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த மோட்டார் 57 எச்பி பவரையும், 143 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

சிறப்பம்சங்கள் மிக தாராளம்

இதுதவிர பல்வேறு தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய வாகனமாகவும் சிட்ரோன் இ-சி3 உருவாக்கப்பட்டு இருக்கின்றது. 10.2 அங்குலம் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சிட்ரோனின் சி பட்டி (C Buddy) இணைப்பு தொழில்நுட்பம், குரல் கட்டளை அம்சம், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகள் இடம் பெற இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுதவிர, 4 ஸ்பீக்கர்கள் அடங்கிய ஆடியோ சிஸ்டம், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய டிரைவர் இருக்கை, சிரி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களும் இந்த வாகனத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்ந்து, பாதுகாப்பு அம்சங்களாக சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் காரில் இரட்டை ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், எஞ்ஜின் இம்மொபிலைசர், ஹை ஸ்பீடு அலர்டு சிஸ்டம் மற்றும் ஸ்பீடு சென்சிடிவ் ஆட்டோ டூர் லாக் போன்ற அம்சங்களும் இ-சி3 எலெக்ட்ரிக் காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இவைமட்டுமின்றி, இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளும் சிட்ரோன் இ-சி3 மின்சார காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டிக்கு டாடாவோட மலிவு விலை இ-கார் இருக்கு

இந்த நிலையிலேயே காரை சிட்ரோன் நிறுவனம் வெளியீடு செய்து இந்திய வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் திக்குமுக்காட செய்திருக்கின்றது. இந்த மின்சார கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் டாடா நிறுவனத்தின் மலிவு விலை கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும். குறிப்பாக, இதன் வருகை டாடாவின் டியாகோ இவி-க்கே பெருத்த தலைவலியாக மாற இருக்கின்றது. இது நாட்டின் மிக குறைவான விலைக் கொண்ட எலெக்ட்ரிக் காராகும். இதன் ஆரம்ப விலை ரூ. 8.49 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் ஃபுல் சார்ஜில் 315 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 8, 2023, 15:17 [IST]
English summary
Citroen e c3 unveiled in hyderabad e motor show
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X