இந்தியாவே தவம் கிடக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் விலை இவ்ளோதானா! டாடாக்கு இப்பவே தொடை நடுங்க ஆரம்பிச்சிருக்கும்
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக வேகமாக பிரபலம் அடைந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்றாக சிட்ரோன் (Citroen) உள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிட்ரோன் நிறுவனம், இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மொத்தம் 4 அட்டகாசமான கார்களை விற்பனை செய்து வருகிறது.
அவை சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் (Citroen C5 Aircross), சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் (Citroen C3 Aircross), சிட்ரோன் சி3 (Citroen C3) மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) ஆகியவை ஆகும். இதில், சிட்ரோன் இசி3-ஆனது, எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும்.

சிட்ரோன் சி3 காரின் அடிப்படையில், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதே பாணியில் இந்திய சந்தையில் தனது 2வது எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு சிட்ரோன் நிறுவனம் தற்போது முழு வீச்சில் தயாராகி வருகிறது. இது சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் அடிப்படையில் உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் கார் ஆகும்.
எனவே சிட்ரோன் இசி3 ஏர்க்ராஸ் (Citroen eC3 Aircross) என்ற பெயரில், இந்த எலெக்ட்ரிக் கார் அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சிட்ரோன் இசி3 ஏர்க்ராஸ் எலெக்ட்ரிக் கார், 2024ம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில், 29.2 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 320 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிட்ரோன் இசி3 ஏர்க்ராஸ் எலெக்ட்ரிக் காரில், இதைக்காட்டிலும் பெரிய பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இதன் டிரைவிங் ரேஞ்சும் அதிகமாக இருக்கும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price), 11.61 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12.79 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
ஆனால் பெரிய பேட்டரி பொருத்தப்பட்டிருந்தாலும் கூட, சிட்ரோன் இசி3 ஏர்க்ராஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 13 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 17 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai), டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார்களுடன், சிட்ரோன் இசி3 ஏர்க்ராஸ் எலெக்ட்ரிக் கார் போட்டியிடும்.


Click it and Unblock the Notifications








