டாடாவுக்கு செக்! இவ்ளோ கம்மி விலைக்கு பிரான்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரா! இன்னும் ஒரு சில நாட்களில் லான்ச்
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் (Electric Car) ஒன்று சிட்ரோன் இசி3 (Citroen eC3). இது இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் சிட்ரோன் சி3 (Citroen C3) காரின் எலெக்ட்ரிக் அவதாரம் ஆகும்.
சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு விட்டன. 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்துவதன் மூலம், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்து கொள்ள முடியும். ஆனால் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் விலை (Price) எவ்வளவு? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதை தெரிந்து கொள்வதற்காகதான் வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

இந்த கேள்விக்கு இன்னும் ஒரு சில நாட்களில் நமக்கு விடை கிடைத்து விடும் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதை தொடர்ந்து ஒரு சில நாட்களிலேயே முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இசி3 எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்யும் பணிகளையும் சிட்ரோன் நிறுவனம் தொடங்கவுள்ளது. இந்த தகவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் மொத்தம் 13 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். அதே சமயம் லைவ் (Live) மற்றும் ஃபீல் (Feel) என மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும். செயல்திறனை பொறுத்தவரையில் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் பவர் அவுட்புட் 56 பிஹெச்பி மற்றும் 143 என்எம் டார்க் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரில் 29.2 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 320 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) ஆகும். சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரை நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து விட்டோம். இந்த எலெக்ட்ரிக் காரின் பல்வேறு அம்சங்கள் வாடிக்கையாளர்களை நிச்சயமாக கவரும் என்பதை அந்த டெஸ்ட் டிரைவ் நிகழ்ச்சியின்போது நாங்கள் கண்டறிந்தோம்.
இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு (Tata Tiago EV) மிகவும் கடுமையான நெருக்கடியை சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 8.69 லட்ச ரூபாயாக உள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் விலையும் கிட்டத்தட்ட இதே அளவில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் மட்டுமல்லாது, விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மற்றொரு எலெக்ட்ரிக் காரான எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் காருக்கும் (MG Air EV) சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸை சேர்ந்த சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் இதுதான். தனது முதல் எலெக்ட்ரிக் காரின் மூலமே, போட்டி நிறுவனங்களுக்கு 'செக்' வைக்க சிட்ரோன் திட்டமிட்டுள்ளது.
டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார், எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் கார் ஆகியவற்றுக்கு மட்டுமல்லாது, டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் மற்றும் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் ஆகியவற்றுக்கும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் மற்றும் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் ஆகியவை இன்னும் விற்பனைக்கு வரவில்லை. கூடிய விரைவில் அவை விற்பனைக்கு வரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








