நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! சந்தோஷத்துல திக்கு முக்காடி போக வெச்சுட்டாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த எலெக்ட்ரிக் கார்களில் (Electric Car) ஒன்று சிட்ரோன் இசி3 (Citroen eC3). மிகவும் குறைவான விலையில் வரும் என வெளியான தகவல்கள்தான், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்தன.
இந்த எதிர்பார்ப்புகளை பொய்யாக்காமல், ஓரளவிற்கு குறைவான விலையில் (Price) சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இசி3 எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச், வசதிகள், டிசைன் ஆகியவற்றை எல்லாம் வைத்து பார்க்கையில், சிட்ரோன் நிறுவனம் சிறப்பான விலை நிர்ணயத்தை செய்துள்ளதாகவே கருதப்படுகிறது.

சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டிருப்பது 29.2 kWh திறனுடைய பேட்டரி (Battery) ஆகும். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டார், அதிகபட்சமாக 56 பிஹெச்பி பவரையும், 143 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் (Range) 320 கிலோ மீட்டர்கள் ஆகும். இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் ஆகும்.
பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணம் செய்ய கூடிய தொலைவுதான் ரேஞ்ச் என அழைக்கப்படுகிறது. சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 320 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், தொலைதூர பயணங்களையும் எளிதாக மேற்கொள்ள முடியும். சிறப்பான ரேஞ்ச் பல்வேறு அதிநவீன வசதிகளையும் (Features) சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.

இதில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதியுடன் கூடிய 10.2 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கியமானது. இதுதவிர உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுனர் இருக்கையை சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. மேலும் 4 ஸ்பீக்கர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஸ்பிளிட் ஹெட்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், கருப்பு நிற ஓஆர்விஎம்கள் ஆகிய அம்சங்களும் இந்த எலெக்ட்ரிக் காரில் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில், 9 ட்யூயல் டோன் கலர் ஆப்ஷன்களும், 4 மோனோ டோன் ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளன. லைவ் மற்றும் ஃபீல் என மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும்.
ஏராளமான சிறப்பம்சங்கள் நிரம்பிய சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 11.50 லட்ச ரூபாய் மட்டுமே. இது லைவ் வேரியண்ட்டின் விலையாகும். அதே சமயம் ஃபீல் வேரியண்ட்டின் விலை 12.13 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஃபீல் வைப் பேக் மாடலின் விலை 12.28 லட்ச ரூபாய் ஆகவும், ஃபீல் ட்யூயல் டோன் வைப் பேக் மாடலின் விலை 12.43 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago EV) எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் களமிறக்கப்பட்டுள்ளது. இதுதவிர எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் காருக்கும் (MG Air EV) சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சவால் அளிக்கவுள்ளது. இதில், எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் கார் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








