டாடாவுக்கு சங்கு! இந்த எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! ஷோரூம்களில் திருவிழாவை விஞ்சிய மக்கள் கூட்டம்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் (Electric Car) ஒன்று சிட்ரோன் இசி3 (Citroen eC3). இது இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள சிட்ரோன் சி3 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி நெருங்கி கொண்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் விலை (Price) எவ்வளவு? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் டெஸ்ட் டிரைவ் (Test Drive) பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காருக்காக வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். அவர்களில் பலரும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரை ஓட்டி பார்ப்பதற்காக ஷோரூம்களுக்கு படையெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாங்கள் இந்த எலெக்ட்ரிக் காரை ஏற்கனவே ஓட்டி பார்த்து விட்டோம்.
அப்போது பல்வேறு விஷயங்களிலும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் எங்களை வெகுவாக கவர்ந்தது. எனவே எதிர்பார்க்கப்படுவதை போலவே மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில் 29.2 kWh பேட்டரி (Battery) வழங்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 320 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் காரின் பவர் அவுட்புட் 56 பிஹெச்பி மற்றும் 143 என்எம் ஆகும். சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காருக்கு 3 வருடங்கள்/1.25 லட்சம் கிலோ மீட்டர் வாரண்டி (Warranty) வழங்கப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரிக்கு 7 வருடங்கள்/1.40 லட்சம் கிலோ மீட்டர்கள் வாரண்டி கொடுக்கப்பட்டுள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், சிட்ரோன் சி3 காரை போலவேதான், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரும் கிட்டத்தட்ட உள்ளது. ஆனால் இது எலெக்ட்ரிக் கார் என்பதால், ஒரு சில மாற்றங்களை நம்மால் காண முடிகிறது.
இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு (Tata Tiago EV), சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டாடா பன்ச் எலெக்ட்ரிக் காருக்கும் (Tata Punch EV) சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் விற்பனையில் கடுமையான சவாலை வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 8 லட்ச ரூபாய் அல்லது 9 லட்ச ரூபாய் என்ற அளவில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இவ்வளவு குறைவான விலைக்கு ஒரு முறையான எலெக்ட்ரிக் கார் கிடைப்பது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயமாகவே உள்ளது. எனவேதான் இந்த எலெக்ட்ரிக் கார் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications








