டாடா காரோட ஜோடி போட்டு பார்த்தா இந்த கார் தான் செம பெஸ்ட்! ரேட்டும் கம்மி தான்!
இந்திய மக்கள் பலர் தற்போது எலெக்ட்ரிக் காரை வாங்க விரும்பி வருகின்றனர். அதனால் பல நிறுவனங்கள் போட்டிப்போட்டு எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்கி வருகின்றனர். தற்போது குறைந்த பட்ஜெட்டில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் சிட்ரோன் நிறுவனம் தனது இசி3 காரை ரூ11.5 லட்சத்திற் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ரூ12 லட்சம் பிராக்கெட்டில் வரும் 3வது எலெக்ட்ரிக் காராகும். இதற்கு முன்னர் டாடாவின் டிகோர் இவி மற்றும் டியாகோ இவி ஆகிய கார்கள் மட்டுமே இருந்தது. இதில் டியாகோ இவி கார் தான் இந்தியாவின் குறைந்த விலை இவி காராக இருக்கிறது. டிகோர்இவி மற்றும் சிட்ரோன் இவி கிட்டதட்ட ஒரே விலையில் இருக்கிறது. இந்த மூன்று கார்களின் ஒப்பீட்டை காணலாம் வாருங்கள்.

விலை - Price
சிட்ரோன் இ-சி3 காரை பொருத்தவரை ரூ11.50 என்ற ஆரம்ப விலையில் துவங்கி ரூ12.43 லட்சம் என்ற விலையில் டாப் வேரியன்ட் கார் விற்பனையாகிறது. டாடா டியாகோ இவி காரை பொருத்தவரை ரூ8.69 லட்சம் என்ற விலையில் துவங்கி டாப் வேரியன்ட் ரூ11.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.
டாடா டிகோர் இவி கார் ரூ12.49 லட்சம் என்ற விலையில் துவங்கி ரூ13.75 லட்சம் என்ற விலையில் டாப் வேரியன்ட்கார் விற்பனையாகிறது. இதில் குறைந்த விலை காராக டியாகோ இவி கார் இருக்கிறது. அதிக விலையில் டிகோர் இவி கார் இருக்கிறது. சிட்ரோன் சி3 கார் டிகோர் இவி காரை ஒட்டிய விலையில் விற்பனையாகிறது.
வேரியன்ட் - Variant
சிட்ரோன் சி3 காரை பொருத்தவரை மொத்தம் 4 விதமான வேரியன்ட்கள் உள்ளன. லைவ், ஃபீல், ஃபீல் வைப் பேக் ஆகிய வேரியன்ட்கள் விற்பனையாகிறது. டாப் எண்ட் மாடல் டூயல் டோன் ஆப்ஷனிலும் இருக்கிறது. டாடா டிகோர் இவி காரை பொருத்தவரை எக்ஸ்இ, எக்ஸ்டி, எக்ஸ் இசட்+ மற்றும் எக்ஸ் இசட் + லக்ஸ் ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகிறது.
வேரியன்ட்களை ஒப்பிட்டால் சிட்ரோன் இ-சி3 கார் தான் டிகோர் இவி காரைவிட சற்று விலை குறைவாக இருக்கிறது. டாடா டிகோர் இவி கார் ரூ12.49 லட்சம் பேஸ் வேரியன்ட் விற்பனையாகிறது. இது சிட்ரோன் இ-சி3 காரை விட ரூ1 லட்சம் அதிகம். டிகோர் டாப் வேரியன்ட் ரூ13.75 லட்சத்தில் விற்பனையாகிறது. இது ரூ1.32 லட்சம் அதிகம்.
டிகோர் இவி காரின் பேட்டரி பேக் சிட்ரோன் இ-சி3 காரின் பேட்டரி பேக்கை ஒப்பிடும் போது சிறியது தான். ஆனால் ரேஞ்ச் இரண்டு கார்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ரேஞ்சை வழங்குகிறது. இந்த சிட்ரோன் இ-சி3 மற்றும் டிகோர் இவி கார் ஆகிய இரண்டும் 3.3 கிலோ வாட் டிசி ஃபாஸ்ட் சா்ரஜ் ஆப்ஷன் உடன் வருகிறது. இரண்டும் காரை வெறும் 1 மணி நேரத்தில் சார்ஜ் ஏற்றிவிடும்.


Click it and Unblock the Notifications








