கம்மி ரேட்ல விட்ற மாதிரி விட்டு இப்ப சி3 காரின் விலையை எக்கு தப்பா ஏற்றிய சிட்ரோன் நிறுவனம்! புதிய விலை என்ன?
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் சிட்ரோன், இந்நிறுவனம் இந்தியாவிற்குள் தனது பிஸ்னஸை துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்நிறுவனம் முதலில் சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் என்ற காரை அறிமுகப்படுத்தியது. அது பிரிமியம் செக்மெண்ட் எம்பிவி காராக அறிமுகமானது. இந்த காருக்கு மா்ாகெட்டில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் சிட்ரோன் நிறுவனம் தனது சி3 என்ற எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் அறிமுகமாகும் போது ரூ5.70 லட்சம் என்ற ஆரம்ப விலையில் துவங்கி டாப் வேரியின்ட் ரூ8.05 லட்சம் என்ற விலையில் விற்பனையானது. இந்த விலை வெறும் 6 மாதம் வரை தான் நீடித்தது.

கடந்த ஜனவரி மாதம் சிட்ரோன் நிறுவனம் தனது சி3 காரின் விலையை அதிரடியாக உயர்த்தியது. அப்பொழுது முதல் சிட்ரோன் காரின் ஆரம்ப விலை ரூ5.98 லட்சம் என ஆனது. டாப் வேரியன்டின் விலை ரூ8.25 லட்சம் வரை விற்பனையானது. இந்த காரை பொருத்தவரை மொத்தம் 6 விதமான வேரியனட்களில் விற்பனையாகிறது.
லைவ், ஃபீல், ஃபீல் வைப், ஃபீல் டூயல் டோன், ஃபில் வைப் டூயல் டோன், ஃபீல் வைப் டூயல் டோன் டர்போ ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தான்விலை உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டே மாதத்தில் இந்த காரின் விலையை மீண்டும் சிட்ரோன் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

தற்போது சிட்ரோன் சி3 காரின் ஆரம்ப விலை ரூ6.16 லட்சமாக மாறிவிட்டது. ஆனால் இந்த விலை உயர்வில் டாப் வேரியன்ட்டின் விலையில் மாற்றம் இல்லை டாப் வேரியன்ட் அதே ரூ8.25 லட்சம் என்ற விலையில் தான் விற்பனையாகி வருகிறது. மற்ற வேரியன்ட்கள் எல்லாம் ரூ18 ஆயிரம் என்ற ரீதியில் விலை உயர்ந்துள்ளது.
இந்த சிட்ரோன் சி3 கார் இந்நிறுவனத்தின் இரண்டாவது கார் தான். இது சப் 4 மீட்டர் செக்மெண்டில் மார்கெட்டில் டாடா பஞ்ச், மாருதி பாலேனோ ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது. இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் சமீபத்தில் அறிமுகமானது. தற்போது அந்த கார் ரூ11.50 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனையாகி வருகிறது.

சிட்ரோன் சி3 காரை பொருத்தவரை இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது. முதல் ஆப்ஷனைபொருத்தவரை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜினை கொண்டது. இது 81 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அடுத்ததாக 1.2 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 109 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்படுகிறது.
சிட்ரோன் சி3 காரை பொருத்தவரை வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே சப்போர்ட் செய்யக்கூடிய 10.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், ஸ்டிரிங் மவுண்ட் கண்ட்ரோல் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியன பொருத்தப்பட்டுள்ளது.
இந்த சிட்ரோன் சி3 காரின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை முன்பக்கம் டூயல் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. சீட் பெல்ட் ரிமைன்டர்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், இபிடியுடன் ஏபிஎஸ் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








