நிறைய பேரு போகலாம்.. சிட்ரோனின் விலை குறைவான சி3 ஏர்கிராஸ் அறிமுகம்.. இதோட விலையை கேட்டீங்க ஆடி போயிருவீங்க!

சிட்ரோன் நிறுவனத்தின் மலிவு விலை கார் மாடலாக சி3 இருக்கின்றது. இதனை தழுவி உருவாக்கப்பட்ட ஓர் கார் மாடலே சி3 ஏர்கிராஸ் (Citroen C3 Aircross) ஆகும். இந்த காருக்கு இந்தியாவில் எதிர்பார்ப்பு அதிகம். இந்த நிலையிலேயே சிட்ரோன் நிறுவனம் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி-யை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இதற்கு அறிமுக விலையாக ரூ. 9.99 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான வேரியண்டுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். 5 சீட்டர் மற்றும் 5+2 சீட்டர் ஆகிய தேர்வுகளும் அதில் வழங்கப்படுகின்றன.

Citroen c3 aircross 5 seater

ஏர்கிராஸ் யு 1.2டி 5சீட்டர் (C3 Aircross You 1.2T 5STR), ஏர்கிராஸ் பிளஸ் 1.2டி 5சீட்டர் (C3 Aircross Plus 1.2T 5STR), ஏர்கிராஸ் மேக்ஸ் 1.2டி 5சீட்டர் (C3 Aircross Max 1.2T 5STR), ஏர்கிராஸ் பிளஸ் 1.2டி 5+2சீட்டர் (C3 Aircross Plus 1.2T 5+2STR) மற்றும் ஏர்கிராஸ் மேக்ஸ் 1.2டி 5+2சீட்டர் (C3 Aircross Max 1.2T 5+2STR) ஆகியவையே அவை ஆகும்.

இந்த வேரியண்டுகளில் குறிப்பிட்ட சிலவற்றில் டூயல் டோன் ஆப்ஷன் வழங்கப்பட இருக்கின்றது. பிளஸ் மற்றும் மேக்ஸ் ஆகிய வேரியண்டுகளிலேயே டூயல் டோன் தேர்வு வழங்கப்பட இருக்கின்றது. ஆனால், அதற்கு வழக்கமான விலைகளைக் காட்டிலும் டூயல் டோன் தேர்விற்கு ரூ. 20 ஆயிரம் கூடுதலாக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

Citroen c3 aircross launched

இதுதவிர, கூடுதல் சிறப்பம்சங்களை வழங்கும் விதமாக இந்த தேர்வுகளுக்கு 'வைப்' எனும் பிரத்யேக பேக்கையும் அது அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த பேக்கை பிளஸ் வேரியண்டுகளுக்கு ரூ. 25 ஆயிரம் கட்டணத்திலும், மேக்ஸ் வேரியண்டிற்கு ரூ. 22 ஆயிரம் கட்டணத்திலும் வழங்க இருப்பதாக சிட்ரோன் தெரிவித்து இருக்கின்றது.

இந்த மிட் சைஸ் எஸ்யூவி-யின் உருவாக்கத்தில் 90 சதவீதம் உள்ளூர் உற்பத்தி பொருட்களே இடம்பிடித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு பல்வேறு சிறப்பு திட்டங்களை சிட்ரோன் அறிவித்து இருக்கின்றது. அந்தவகையில், காரை இப்போது வாங்கிக் கொண்டு 2024 ஆம் ஆண்டில் இருந்து காருக்கான கட்டணத்தைச் செலுத்தும் திட்டத்தை அது அறிவித்து இருக்கின்றது.

இத்துடன், பார்ட்னர் நிறுவனங்களுடன் சேர்ந்து சில இஎம்ஐ ஆஃபர்களையும் அது அறிவித்து இருக்கின்றது. அத்துடன், மருத்துவ செலவு கவர் மற்றும் இஎம்ஐ புரடெக்ட் கவர் ஆகிய திட்டங்களையும் சிட்ரோன் வழங்க இருக்கின்றது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களுக்கு போட்டியாகவே சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

இதன் 7 சீட்டர் வெர்ஷன் மூன்று வரிசை இருக்கை அமைப்பைக் கொண்டிருக்கும். இந்த மூன்றாவது வரிசை இருக்கையை எளிதில் கழட்டிவிட முடியும். அவ்வாறு செய்யும்பட்சத்தில் பின்பக்க ஸ்டோரேஜை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். எஞ்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

108 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க் வரை வெளியேற்றும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இந்த மோட்டாருடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. அறிமுகத்தைத் தொடர்ந்து காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. ரூ. 25 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றது. இதன் டெலிவரி பணிகள் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் இருக்கைகள் கொண்ட கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே சிட்ரோன் அதன் சி3 ஏர்கிராஸ் காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. பெரிய குடும்பத்தினர் மத்தியில் சூப்பரான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 5, 2023, 17:15 [IST]
English summary
Citroen launches c3 aircross here is spec and price detail
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+