டேய் பரமா நீயுமாடா... வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கிய முன்னணி நிறுவனம்... அட போங்கயா!

இந்தியாவில் புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இது சோதனையான காலகட்டம். ஏனென்றால் பல்வேறு கார் நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன. இந்த வரிசையில் சிட்ரோன் (Citroen) நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது. ஆம், சிட்ரோன் நிறுவன கார்களின் விலையும் அதிரடியாக உயரவுள்ளது.

இந்த அதிரடி விலை உயர்வு, வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் அனைத்து கார்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும். ஆனால் விலை உயர்வானது, கார் மாடல்களை பொறுத்து மாறுபடும். இதன்படி 2.5-3 சதவீதம் வரை விலை உயர்த்தப்படவுள்ளது.

Citroen C3 Aircross

சிட்ரோன் நிறுவனம் தற்போதைய நிலையில், சிட்ரோன் சி3 (Citroen C3), சிட்ரோன் இசி3 (Citroen eC3), சி3 ஏர்க்ராஸ் (Citroen C3 Aircross) மற்றும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் (Citroen C5 Aircross) ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த கார்களை எல்லாம் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை தற்போதைய விலையிலேயே வாங்கி கொள்ள முடியும்.

ஆனால் அதற்கு பிறகு, அதாவது ஜனவரி 1ம் தேதியில் இருந்து, கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டு விடும். சிட்ரோன் நிறுவனத்தின் சி3 காரை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Citroen C3 Aircross Side Design

இதில் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆனது அதிகபட்சமாக 80 பிஹெச்பி பவரை உருவாக்க கூடிய வகையிலும், மறுபக்கம் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது அதிகபட்சமாக 109 பிஹெச்பி பவரை உருவாக்க கூடிய வகையிலும் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் காரில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 174 பிஹெச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் ஒரு சில நிறுவனங்களில் சிட்ரோனும் ஒன்றாகும்.

ஆம், நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளவற்றில் சிட்ரோன் இசி3, எலெக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த எலெக்ட்ரிக் காரில், பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், சுமார் 320 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யக்கூடிய பேட்டரி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து விலை உயரவுள்ளதால், அதற்கு முன்னதாக சிட்ரோன் காரை வாங்கி கொள்வது நல்லது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) உள்பட பல்வேறு கார் நிறுவனங்களும் ஏற்கனவே விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு விட்டன. இந்த வரிசையில் சிட்ரோன் நிறுவனத்தின் கார்களின் விலையும் உயரவுள்ளன. இது வாடிக்கையாளர்களுக்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, December 11, 2023, 23:56 [IST]
English summary
Citroen price hike 1 january 2024 all details here
மேலும்... #சிட்ரோன் #citroen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+