35கிமீ மைலேஜ் தரும் ஸ்விஃப்ட் தொடங்கி குட்டியான கோமெட் வரையில்! சீக்கிரமே இந்தியா வரஇருக்கும் கார்களின் லிஸ்ட்

இந்தியாவில் இன்னும் ஒரு சில மாதங்களிலேயே புதுமுக ஹைபிரிட் மற்றும் மின்சார கார்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அவற்றில் மிக சிறந்தவை சிலவற்றை தேர்ந்தெடுத்து அதுகுறித்த தகவல்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் அவை குறித்த தகவலைக் காணலாம்.

இந்தியாவில் இன்னும் ஒரு சில மாதங்களில் சூப்பர் சூப்பரான புதிய கார்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. நீண்ட நாட்கள் தாராளமாக காத்திருந்து வாங்கலாம் என கூறுமளிவற்கு மிகவும் ஒர்த்தான கார்களே விரைவில் விற்பனைக்கு வர உள்ளன. அவை என்ன?, அவற்றின் சிறப்புகள் என்ன?, என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, மின்சாரம் மற்றும் ஹைபிரிட் வசதிகளுடன் விற்பனைக்கு வர இருக்கும் டாப் 4 வாகனங்கள் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

கோமெட்

மாருதி சுஸுகி டிசையர் மற்றும் ஸ்விஃப்ட்

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக நீண்ட நாட்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், சமீபத்தில் வெளியாகிய தகவல்களோ இந்த காரின் வருகை 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கு முன் அல்லது முடிவடைவதற்குள் இவ்விரு கார்களும் விற்பனைக்கு வரும் என கூறுகின்றன.

இந்த கார்களுக்காக இன்னும் சில ஆண்டுகள்கூட காத்திருப்பது ஒர்த்தானதாக இருக்கும். ஏனெனில், இப்போது விற்பனையில் இருப்பவற்றைக் காட்டிலும் மிக மிக அதிக பாதுகாப்பு மற்றும் மைலேஜ் வசதி உடன் டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் கார்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35 கிமீ முதல் 40 கிமீ வரையில் இந்த நெக்ஸ்ட் ஜென் ஸ்விஃப்டும், டிசையரும் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது.

ஸ்விஃப்ட்

இதேபோல், பாதுகாப்பு கருவிகள் விஷயத்திலும் இந்த மாடல்கள் இப்போது விற்பனையில் இருப்பவற்றைக் காட்டிலும் தலை சிறந்ததாக இருக்கும் என கூறப்படுகின்றது. இதுதவிர தொழில்நுட்ப வசதிகளிலும் இந்த கார் நம்மை பிரம்மிக்க வைக்க போகின்றன என இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் கூறுகின்றன. இந்த கார்களில் அதிக மைலேஜ் திறனுக்காக ஸ்ட்ராங் ஹைபிரிட் வசதி வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி சுஸுகி சி-எம்பிவி

டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் இன்னோவா ஹைகிராஸ் எனும் புதிய மாடலை இன்னோவா வரிசையில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. வழக்கமான இன்னோவா க்ரிஸ்டாவைக் காட்டிலும் அதிக இட வசதி மற்றும் மைலேஜ் திறன் கொண்டதாக இந்த கார் உருவாக்கப்பட்டது. இந்த கார் மாடலை தழுவிய புதிய எம்பிவி ரக காரை உருவாக்கும் பணியிலேயே மாருதி சுஸுகி ஈடுபட்டு வருகின்றது.

எம்பிவி

அதுவே மாருதி சுஸுகியின் சி-செக்மெண்ட் எம்பிவி காராகும். கிராண்ட் விட்டாராவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே மோட்டாருடன் இந்த புதுமுக கார் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்ட்ராங் ஹைபிரிட் மற்றும் மைல்டு ஹைபிரிட் என இரு விதமான ஹைபிரிட் தேர்வுகளில் கிராண்ட் விட்டாரா விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வருகை பற்றிய தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் இதன் அறிமுகம் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹோண்டா மிட்சைஸ் எஸ்யூவி:

ஹோண்டா நிறுவனம் வெகு விரைவில் மிட்சைஸ் அளவிலான ஓர் புதுமுக எஸ்யூவி ரக காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதனை ஹைபிரிட் தொழில்நுட்ப வசதி உடன் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல் அமேஸ், தயாரிக்கப்படும் அந்த பிளாட்பாரத்தில் வைத்தே தயாரிக்கப்பட இருக்கின்றது. இதன் வருகை டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா ஆகியவற்றிற்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்த இருக்கின்றது.

ஹோண்டா கார்

குறிப்பு: படங்கள் சில உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை

எம்ஜி கோமெட்

இந்தியர்களின் நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பாக இந்த கார் இருக்கின்றது. பல மாதங்களாக இந்திய சாலைகளில் இந்த கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் இப்போதே இது விற்பனைக்கு தயார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இதன் வருகையை எம்ஜி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. ஆனால், துள்ளியமான நாள் இதுதான் என நிறுவனம் அறிவிக்கவில்லை.

இருப்பினும், இந்த வாகனம்மீது ஆர்வம் குறைந்ததாக இல்லை. எம்ஜி கோமெட் ஓர் எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த மைக்ரோ சைஸிலான எலெக்ட்ரிக் கார் ஏற்கனவே உலக சந்தை சிலவற்றில் விற்பனையில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. உல்லிங் ஏர் இவி எனும் பெயரில் இந்தோனேசியாவில் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுவே கோமெட் எனும் பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இது ஓர் எலெக்ட்ரிக் காராகும். இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இரண்டு கதவுகளை மட்டுமே கொண்ட மின்சார கார் இதுவாகும். நகர்புற பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக இதனை எம்ஜி உருவாக்கி இருக்கின்றது. குறிப்பாக, நெரிசல் மற்றும் அகலம் குறைவான குட்டி சாலைகளிலும் சுலபமாக பயணிக்கும் வகையில் கோமெட் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, March 6, 2023, 8:51 [IST]
English summary
Comet to swift top upcoming ev and hybrid cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X