டாடா நெக்ஸானின் விற்பனையை எந்த காராலும் நெருங்க கூட முடியல!! இந்தியாவின் டாப்-10 காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்!

இந்தியாவில் காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கான தேவை அதிகரித்துவரும் சூழலில் கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்கள் அவற்றின் விற்பனை எண்ணிக்கைகளுடன் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியர்கள் சமீப காலமாக எஸ்யூவி கார்களையே அதிக எண்ணிக்கையில் வாங்குகின்றன. அதிலிலும் குறிப்பாக, அளவில் சிறியதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கக்கூடிய காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனை வருடந்தோறும் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதை கூறியே ஆக வேண்டும். எந்த அளவிற்கு என்றால், கடந்த ஜூன் மாதத்தில் 4 காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் தலா 10,000 யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

compact suv cars june sales

அந்த 4 காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் முதலிடத்தை வழக்கம்போல் டாடா நெக்ஸான் பிடித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட நெக்ஸான் கார்களின் எண்ணிக்கை 13,827 ஆகும். கடந்த மாத காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனையில் முதலிடத்தை பிடித்தாலும், 2022 ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட நெக்ஸான் கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் 3% குறைவாகும்.

ஏனெனில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 14,295 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனையை பொறுத்தவரையில் மட்டுமே டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் முதலிடத்தை பிடித்துள்ளதே தவிர்த்து, ஒட்டுமொத்த எஸ்யூவி கார்கள் விற்பனையில் ஹூண்டாய் க்ரெட்டா மிட்-சைஸ் எஸ்யூவி கார் தான் முதலிடத்தை தனதாக்கி உள்ளது.

compact suv cars june sales

காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனையில் நெக்ஸான் முதலிடத்தை பிடித்திருக்க, 2வது இடத்தை ஹூண்டாய் வென்யூ பெற்றுள்ளது. வென்யூ கார்கள் கடந்த மாதத்தில் 11,606 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2022 ஜூன் மாதத்தில் வெறும் 10,321 வென்யூ கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. இந்த வகையில், வென்யூ கார்களின் விற்பனை ஆனது 12% முன்னேற்றம் கண்டுள்ளது.

டாடா மோட்டார்ஸின் மற்றொரு அளவில்-சிறிய காம்பெக்ட் எஸ்யூவி காரான பஞ்ச் இந்த வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ளது. 2022 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், டாடா பஞ்ச் கார்களின் விற்பனை 6% அதிகரித்துள்ளது. ஏனெனில், 2022 ஜூன் மாதத்தில் 10,414 பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் 10,990 பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

compact suv cars june sales

4வது இடத்தில் மாருதி சுஸுகியின் காம்பெக்ட் எஸ்யூவி காரான பிரெஸ்ஸா 2022 ஜூன் மாதத்தை காட்டிலும் சுமார் 140% விற்பனை வளர்ச்சி உடன் உள்ளது. இத்தகைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம், அந்த சமயத்தில் தற்போதைய பிரெஸ்ஸா மாடலின் முந்தைய தலைமுறை மாடல் விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் இருந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெறும் 4,404 விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 10,578 பிரெஸ்ஸா கார்கள் விற்கப்பட்டுள்ளன.

பிரெஸ்ஸாவிற்கு அடுத்து 5வது இடத்தில் மற்றொரு புதிய மாருதி சுஸுகி காம்பெக்ட் எஸ்யூவி காரான ஃப்ரான்க்ஸ் 7,991 கார்கள் விற்பனை உடன் உள்ளது. இதற்கடுத்து 6வது மற்றும் 7வது இடங்களில் கியா சொனெட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த ஜூன் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 7,722 மற்றும் 5,094 ஆகும். இவற்றிற்கு அடுத்து கடைசி இரு இடங்களில் நிஸான் மேக்னைட் (2,552) மற்றும் ரெனால்ட் டிரைபர் (2,257) உள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனையில் டாடா நெக்ஸான் மீண்டும் தனது ஆதிக்கத்தை காட்டியுள்ளது. முதலிடத்தில் உள்ள நெக்ஸானுக்கும், 2வது இடத்தில் உள்ள வென்யூவுக்கும் இடையே 2,000 யூனிட்களுக்கும் அதிகமாக வித்தியாசம் உள்ளது. அதேபோல், மாருதி சுஸுகியின் புதிய தயாரிப்பான ஃப்ரான்க்ஸ் காரின் விற்பனையும் எதிர்பார்த்ததை போல் வேகமாக அதிகரித்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, July 14, 2023, 22:28 [IST]
English summary
Compact suv cars sales 2023 june
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X