மாருதி கார்களை வாங்கவே ஒரு கூட்டம் இருக்கும் போல!! டாடா நெக்ஸானின் விற்பனை அதள பாதாளத்தில்!

காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கான தேவை நாடு முழுவதும் அதிகரித்துவரும் நிலையில், கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில், அவற்றின் விற்பனை எண்ணிக்கைகளுடன் பார்க்கலாம்.

உயரம் குறைவான செடான் கார்களையும், ஹேட்ச்பேக் கார்களையும் அதிகளவில் வாங்கிக் கொண்டிருந்த மக்களின் கவனம் கடந்த சில வருடங்களில் எஸ்யூவி கார்களின் பக்கம் சாய்ந்துள்ளது. ஏனெனில், எஸ்யூவி ரக கார்கள் கம்பீரமான தோற்றத்தை கொண்டிருப்பது மட்டுமின்றி, உள்ளேயும் நன்கு விசாலமான இடவசதியை வழங்குகின்றன.

compact suv cars sales august

எஸ்யூவி கார்களில் நம் மக்கள் அதிகம் தேர்வு செய்வது, 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களை ஆகும். ஏனெனில் அவை தான் பெரும்பாலான மக்கள் வாங்கக்கூடிய வகையில் குறைவான விலைகளை கொண்டிருக்கின்றன. இதனாலேயே, இந்தியாவின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவு பலத்த போட்டி மிகுந்ததாக உள்ளது.

இந்த பிரிவில் இருந்து கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தை மாருதி சுஸுகியின் பிரெஸ்ஸா பெற்றுள்ளது. முன்பு விற்பனையில் இருந்த மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு மாற்றாக, கடந்த 2022 ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிரெஸ்ஸா கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 14,572 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

compact suv cars sales august

அதுவே, 2022 ஆகஸ்ட் மாதத்தில் 15,193 பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், பிரெஸ்ஸா கார்களின் விற்பனை ஆனது 4% குறைந்துள்ளது. இதற்கடுத்து 2வது இடத்தில் பிரெஸ்ஸாவை மிக நெருக்கமாக பின் தொடர்ந்தவாறு டாடா மோட்டார்ஸின் பஞ்ச் மாடல் உள்ளது. ஏனெனில் பிரெஸ்ஸாவை விட வெறும் 49 கார்கள் மட்டுமே குறைவாக, கடந்த மாதத்தில் மொத்தம் 14,523 டாடா பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பஞ்ச் எஸ்யூவி கார்களின் விற்பனை கடந்த 1 ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. 2022 ஆகஸ்ட் மாதத்தில் 12,006 பஞ்ச் கார்களை மட்டுமே உள்நாட்டு சந்தையில் டாடா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. பெரும்பாலும், நெக்ஸான் காருக்கு அடுத்தே டாடாவின் சிறந்த விற்பனை எஸ்யூவி காராக விளங்கிவந்த பஞ்ச், கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையில் நெக்ஸானை முந்தியுள்ளது.

compact suv cars sales august

டாடா பஞ்ச் காருக்கு அடுத்து 3வது இடத்தில் மாருதி சுஸுகியின் புத்தம் புதிய காரான ஃப்ரான்க்ஸ் 12,164 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. கடந்த 2023 ஜனவரி மாதத்தில் ஆட்டோ எக்ஸ்போவில் ஃப்ரான்க்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 4வது இடத்தை ஹூண்டாய் மோட்டார்ஸின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான வென்யூ பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட வென்யூ கார்களின் எண்ணிக்கை 10,948 ஆகும்.

2022 ஆகஸ்ட் மாதத்திலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான வென்யூ கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டாடா நெக்ஸான் இந்த முறை 5வது இடத்தை தனதாக்கி உள்ளது. 2022 ஆகஸ்ட் (15,085) உடன் ஒப்பிடுகையில், நெக்ஸான் கார்களின் விற்பனை பாதியாக குறைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் கடந்த ஆகஸ்ட்டில் வெறும் 8,049 டாடா நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

compact suv cars sales august

இந்த வரிசையில் 6வது இடத்தை புத்தம் புதிய ஹூண்டாய் காரான எக்ஸ்டர் 7,430 யூனிட்களின் விற்பனை உடனும், 7வது மற்றும் 8வது இடங்களை முறையே மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் கியா சொனெட் கார்கள் பெற்றுள்ளன. எக்ஸ்யூவி300 மற்றும் சொனெட் கார்கள் கடந்த மாதத்தில் முறையே 4,992 மற்றும் 4,120 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடைசி 9வது மற்றும் 10வது இடங்களில் நிஸான் மேக்னைட் (2,258) மற்றும் ரெனால்ட் கைகர் (929) உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அவ்வப்போது மாற்றங்களை கண்டுவரும் அட்டவணை இந்த சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் அட்டவணை ஆகும். டாடா நெக்ஸானின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சமீபத்தில்தான் இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விற்பனை போக, போக அதிகரிக்கும் என்பது உறுதி. ஆதலால், அடுத்த சில மாதங்களில் இந்த அட்டவணையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை காணலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, September 8, 2023, 23:59 [IST]
English summary
Compact suv cars sales august maruti brezza at top
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X