போட்டியை சமாளிக்க முடியல!! கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகிக்கு தண்ணிக் காட்டும் ஹூண்டாய் & கியா!!

பட்ஜெட் போட்டு கணக்காக, மிக அத்தியாவசியத்திற்காக கார் வாங்குபவர்களே இந்தியாவில் அதிகம். அளவில் சிறிய கார்களுக்கு தான் இந்தியாவில் மார்க்கெட் நன்கு பெரியதாக உள்ளது. இதன் காரணமாகவே, எஸ்யூவி கார்களிலேயே 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் அதிகமாக மக்களால் வாங்கப்படுகின்றன.

சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு அடுத்து, ஏறக்குறைய 4 மீட்டர் நீளம் கொண்ட காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் அதிகமாக விற்பனையாகுகின்றன. அவ்வாறான காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் இந்தியாவில் கடந்த 2023 நவம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மாடல்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

compact suv cars november sales

கடந்த சில வருடங்களாகவே ஒவ்வொரு மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் காம்பெக்ட் எஸ்யூவி காராக ஹூண்டாய் கிரெட்டா முதலிடத்தில் விளங்குகிறது. கடந்த 2023 நவம்பர் மாதத்திலும் சுமார் 11,814 ஹூண்டாய் கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் உண்மையில், 2022 நவம்பர் மாதத்தை காட்டிலும் கடந்த நவம்பர் மாதத்தில் 1,507 கிரெட்டா கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஏனெனில் அந்த மாதத்தில் 13,321 கிரெட்டா கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இருப்பினும், 2020ஆம் ஆண்டில் பெரிய அளவில் அப்டேட் செய்யப்பட்ட பிறகு இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக கிரெட்டா விளங்கி வருகிறது. அதேபோல், கிரெட்டாவின் விற்பனையை பார்த்து கியா நிறுவனம் அறிமுகப்படுத்திய செல்டோஸ் கார்களின் விற்பனையும் கடந்த சில வருடங்களாகவே சிறப்பாக இருந்து வருகிறது.

compact suv cars november sales

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு அடுத்து 2வது இடத்தில் கியா செல்டோஸ் தான் உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 11,684 செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹூண்டாய் கிரெட்டாவை காட்டிலும் கடந்த மாதத்தில் வெறும் 130 கிரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, இந்த இரு கொரியன்-ஸ்டைல் எஸ்யூவி கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைகளுக்கு இடையே இவ்வளவுதான் வித்தியாசம் உள்ளது.

ஆனால், 2022 நவம்பர் மாதத்தில் கிரெட்டாவை காட்டிலும் சுமார் 4 ஆயிரம் செல்டோஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஏனெனில், அந்த மாதத்தில் வெறும் 9,284 செல்டோஸ் கார்களை மட்டுமே கியா நிறுவனம் விற்பனை செய்து இருந்தது. இந்த வகையில், கடந்த 2023 நவம்பர் மாதத்தில் செல்டோஸ் கார்களின் விற்பனை ஆனது 25.85% அதிகரித்துள்ளது.

compact suv cars november sales

மாருதி கிராண்ட் விட்டாரா இந்த வரிசையில் 3வது இடத்தை தனதாக்கி உள்ளது. ஆனால், 2022 நவம்பர் மாதத்தில் வெறும் 4,433 கிராண்ட் விட்டாரா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2022 நவம்பர் சமயத்தில் விற்பனையில் இல்லாத ஹோண்டா எலெவேட் கார் இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2023 நவம்பர் மாதத்தில் மொத்தம் 4,755 ஹோண்டா எலெவேட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பொதுவாக ஜப்பான் ஸ்டைலில் உருவாக்கப்பட்ட கார்களுக்கே வரவேற்பு அதிகமாக இருக்கும். இப்போது வரையிலும் அவ்வாறுதான் இருந்து வருகிறது. ஆனால், இந்த குறிப்பிட்ட காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை லிஸ்ட்டில் தென்கொரிய கார் நிறுவனங்களின் தயாரிப்புகள் முதல் 2 இடங்களை பிடித்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Sunday, December 10, 2023, 16:11 [IST]
English summary
Compact suv cars sales in november 2023 top 10 models here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X