அவசரத்துக்கு விக்கும்போது அதிக விலைக்கு போகனும்னு நினைக்குறீங்களா! அப்ப இந்த காருதான் பெஸ்ட்..
எம்ஜி ஹெக்டர் டீசல் காரை வச்சிருக்கீங்களா? இல்லைனா இந்த காரை வாங்கும் பிளானிலாவது இருக்கீங்களா? இந்த இரண்டில் எது இருந்தாலும் பெஸ்ட்தான் என்கின்றது லேட்டஸ்ட் சர்வே பதில்கள். அதாவது, எம்ஜி ஹெக்டர் டீசல் காரை வைத்திருந்தாலும் சரி, அல்லது இந்த காரை வாங்கும் பிளானில் இருந்தாலும் இரண்டுமே உங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் என்று புதிய ஸ்டடி தெரிவிக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும், சீன நிறுவத்திற்கு சொந்தமான ஓர் வாகன உற்பத்தி நிறுவனமே எம்ஜி ஆகும். இந்த தகவல் பலரும் அறிந்த ஒன்றே. ஆனால், நம்மில் பலரால் அறியப்படாத ஓர் தகவலே இந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட தயாரிப்பின் ஒன்றை பற்றி தற்போது வெளியாகி இருக்கின்றது.

எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி கார் மாடல்களில் ஹெக்டரும் ஒன்றாகும். இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலில் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரு மோட்டார் ஆப்ஷன்களையும் எம்ஜி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த இரண்டில் டீசல் மோட்டார் கொண்ட ஆப்ஷன் அதிக ரீ-சேல் வேல்யூக் கொண்டது என்கிற ஆச்சரியமளிக்கும் புதிய தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது. ட்ரூம் எனப்படும் இ-காமர்ஸ் தளமே இந்த தகவலை வெளியிட்டு இருக்கின்றது. அது, செகண்ட் ஹேண்டில் இந்த காரை விற்பனைச் செய்யும்போது அதிக வேல்யூக் கொண்டதாக விற்பனைக்குப் போகும் என ததகவல் வெளியிட்டு இருக்கின்றது.

ஏழுக்கும் மேற்பட்ட கார் மாடல்களை எம்ஜி ஹெக்டருடன் அந்நிறுவனம் ஒப்பீடு செய்திருக்கின்றது. அவை அனைத்தைக் காட்டிலும் அதிகம் பெஸ்ட்டான கார் மாடல் ஹெக்டர் என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. இந்த தகவல் எம்ஜி ஹெக்டர் கார் பிரியர்கள் மற்றும் பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
கிரெட்டா, செல்டோஸ் மற்றும் எக்ஸ்யூவி 700 உள்ளிட்ட டீசல் கார்களைக் காட்டிலும் அதிகம் ரீ-சேல் வேல்யூக் கொண்டதாக ஹெக்டர் டீசல் தேர்விற்கு இருக்கின்றது. இவற்றைக் காட்டிலும் சுமார் 85 சதவீதம் அதிகம் ரீசேல் வேல்யூவைக் ஹெக்டர் கொண்டிருப்பதாக ட்ரூம் தெரிவித்து இருக்கின்றது.
அந்த கார்கள் மட்டுமில்லைங்க இந்தியாவின் பிற பிரபலமான எஸ்யூவி கார் மாடல்களான ஹூண்டா அல்கஸார், டாடா ஹாரியர் ஆகிய மாடல்களைக் காட்டிலும் அதிக ரீ-சேல்யூவை ஹெக்டர் எஸ்யூவிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடலின் டீசல் வேரியண்ட் ரூ. 17.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கக் கிடைக்கின்றது.
அதேவேளையில், இதன் பெட்ரோல் தேர்வோ ரூ. 14.72 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். எஞ்ஜின், எரிபொருள் சிக்கனம், கம்ஃபோர்ட் மற்றும் சிறப்பம்சங்கள் என அனைத்திலும் எம்ஜி ஹெக்டர் டீசல் மிக சிறந்த தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது.
2.0 லிட்டர் டீசல் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 167.67 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளியேற்றும். இதன் மைலேஜ் திறன் ஒரு லிட்டருக்கு 21 கிமீ ஆகும்.
அதேவேளையில், இதன் போட்டியாளனாக இருக்கும் கிரெட்டா மற்றும் ஹாரியர் உள்ளிட்ட கார் மாடல்கள் வெறும் 18 கிமீ வரை மட்டுமே ஒரு லிட்டர் டீசலுக்கு மைலேஜ் தரும். இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகள் இந்த காரின் ரீசேல் மதிப்பை அதிகப்படுத்த காரணமாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் பெரும்பாலானோர் தாங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் மிகுந்த அதிக மதிப்புள்ளதாக இருக்க வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அத்தகையோருக்கு ஏற்ற தயாரிப்பாக எம்ஜி ஹெக்டர் டீசல் இருக்கும் என்பது தற்போது வெளியாகி இருக்கும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








