ஹூண்டாய் எக்ஸ்டர் Vs டாடா பஞ்ச் இந்த ரெண்டுல எது பெஸ்ட்? நீங்களே பாருங்க!
ஹூண்டாய் நிறுவனம் தனது சிறிய ரக எஸ்யூவி காரான எக்ஸ்டர் காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் மார்க்கெட்டில் டாடா பஞ்ச் காருக்கு நேரடி போட்டியாக களமிறங்குகிறது. இந்த இரு கார்களின் இஞ்ஜின், பெர்ஃபார்மன்ஸ்,அம்சங்கள்,விலை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஒப்பிட்டு காணலாம் வாருங்கள்.
இன்ஜின்: ஹூண்டாய் எக்ஸ்டர் காரை பொறுத்தவரை 1.2 லிட்டர் 4 லிண்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 82பிஎச்பி பவரையும் 114என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டாடா பஞ்ச் காரை பொறுத்தவரை 1.2லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 85பிஎச்பி பவரையும் 113 என்எம் டார்க் திறணையும் வெளிப்படுத்தும். இந்த இரு இன்ஜின்களும் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.

அம்சங்கள்: ஹூண்டாய் எக்ஸ்டர் காரை பொறுத்தவரை எலெக்ட்ரிக் சன் ரூஃப், ஸ்மார்ட் போன் கான்டிவிட்டி உடன்கூடிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டூயல் கேமரா கொண்ட டேஷ்கேம், ஆறு ஏர்பேக் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் இருக்கிறது.
டாடா பஞ்ச் காரில் 6 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ ஹெட்லாம்ப், 7இன்ச் டச் ஸ்கிரீன், எலெக்ட்ரானிக் ஃபோல்டிங் மிரர், கிளைமேட் கண்ட்ரோல், கூல்டு கிளவ் பாக்ஸ், ரியல் நியூ கேமரா ஆகிய அம்சங்கள் இருக்கிறது. ஆனால் இந்த அனைத்து அம்சங்களும் பேஸ் வேரியன்ட் முதல் டாப் வேரியன்ட் வரை இல்லை ஒவ்வொரு வேரியன்டிற்கும் அம்சங்கள் மாறுபடுகிறது. அம்சங்களை பொருத்தவரை எக்ஸ்டரில் தான் அதிகமான அம்சங்கள் உள்ளன.

அளவுகள்: ஹூண்டாய் எக்ஸ்டர் காரை பொருத்தவரை 3815மிமீ நீளம் 1710மிமீ அகலம் 1631 மிமீ உயரம், 2450 மிமீ வீல் பேஸ் ஆகியவற்றைக் கொண்டது. டாட்டா பஞ்ச் காரை பொறுத்த வரை 3827 மிமீ நீளம், 1742 மிமீ அகலம் மற்றும் 1615 மிமீ உயரம் கொண்டது இந்த கார் 2445 மிமீ வீல் பேஸை கொண்டது. அளவுகளை பொருத்தவரை இரண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே அளவில் தான் உள்ளன.
பாதுகாப்பு அம்சங்கள்: ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் பாதுகாப்பு அம்சமாக 6 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. டிரைவர் மற்றும் முன்பக்க பயணிக்கான முன்பக்கம் மற்றும் மற்றும் சைடு சைடு ஏர்பேக்குகள் மற்றும் பின் பக்கம் கர்டன் ஏர் பேக் ஆகியன வழங்கப்பட்டுள்ளன. இதுபோக பின்பக்க சீட்டிற்கு 3 பாயிண்ட் சீட்பெல்ட் வழங்கப்பட்டுள்ளது. இது போக டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டமும் உள்ளது.

டாட்டா பஞ்ச் காரை பொறுத்தவரை குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த காரில் டிரைவர் மற்றும் முன்பக்க பயணிக்கான 2 ஏர் பேக்குகள் மட்டுமே உள்ளன. எக்ஸ்டர் கார் இதுவரை குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட் செய்யப்படவில்லை என்பதால் அதன் ரேட்டிங் குறித்த விபரங்கள் இல்லை.
விலை: புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி காரின் விலையை பொருத்தவரை ரூ 5,99, 900 என்ற ஆரம்ப விலை முதல் அதிகபட்சமாக ரூபாய் 9,31,990 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதன் சிஎன்ஜி காரின் விலை ரூ 8,23,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையெல்லாம் எக்ஸ்-ஷோரூம் விலை தான் ஆன்-ரோடு விலை மாறுபடும்.
டாடா நிறுவனத்தின் பஞ்ச் காரை பொறுத்தவரை ரூபாய் 5,92,900 என்ற விலையில் ஆரம்பமாகிறது. அதிகபட்சமாக ரூ 10,14,000 என்ற விலையில் விற்பனை ஆகிறது. சிஎன்ஜி வெர்ஷன் தான் அதிகமான விலையில் விற்பனையாகிறது. இந்த கார்களின் விலையைப் பொறுத்தவரை இந்த இரு கார்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விலையில் தான் மார்க்கெட்டில் விற்பனையாகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாயின் எக்ஸ்டர் கார் மார்க்கெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. டாடாவின் பஞ்ச் கார் ஏற்கனவே மார்க்கெட்டில் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. இதனால் இந்த இரு காரர்களுக்கும் இடையே மார்க்கெட்டில் மிகப்பெரிய போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கலாம். விற்பனையில் ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் டாடா பஞ்ச் காரைவிட ஹுண்டாய் எக்ஸ்டர் கார் அதிகமாக விற்பனையாகுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









