இந்த கார்கள் எல்லாம் விற்பனைக்கு வந்தா மார்க்கெட்டே ஒரு வழியாகிடும்! 2023ல் அணிவகுத்த கான்செப்ட் கார் மாடல்கள்

ஓர் வாகனத்தின் உற்பத்தி தொடங்கப்படுவதற்கு முன்னதாக தயார் செய்யப்படும் முன் மாதிரி மாடல்களையே ஆங்கிலத்தில் கான்செப்ட் மாடல் (Concept Model) என்பர். தாங்கள் இப்படி ஒரு வாகன மாடலை உங்களுக்காக தயார் செய்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை வெளிக்காட்டும் நோக்கிலும் இந்த கான்செப்ட் மாடல்களை வாகன உற்பத்தியாளர்கள் தயார் செய்கின்றனர்.

மேலும், அவற்றை வெளியீடு செய்து, அந்த வாகனத்தின்மீதான கவன ஈர்ப்பை செய்யும் வாகன உற்பத்தியாளர்கள் செய்வதுண்டு. அந்தவகையில், இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடப்பு 2023 ஆம் ஆண்டில் காட்சிப்படுத்த மிக சிறந்த கான்செப்ட் மாடல்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். முக்கியமாக, அந்த கான்செப்ட் மாடல்களின் தனி சிறப்புகள் என்ன? அவை விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பது பற்றிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

 Concept car

டாடா சீரா இவி கான்செப்ட் (Tata Sierra EV Concept): டாடா மோட்டார்ஸின் மிக மிக சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாக சீரா இருக்கின்றது. இது தற்போது விற்பனையில் இல்லை. ஆனால், இது வெகு விரைவில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

இதை உறுதிப்படுத்தக் கூடிய வகையிலான தகவல்களே தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. புத்தம் புதிய அவதாரத்திலேயே இந்த காரை டாடா தயார் செய்திருக்கின்றது. இதற்கு சான்றாக இதன் கான்செப்ட் மாடல் உள்ளது. இதனை 2023 ஆட்டோ எக்ஸ்போவின் வாயிலாக டாடா மோட்டார்ஸ் வெளியீடு செய்தது.

Maruti suzuki evx

இந்த நிகழ்வு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அரங்கேறியது. இதைப் பயன்படுத்தி காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் மாடல்களில் சீராவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா சீரா இந்தியாவில் எலெக்ட்ரிக் மற்றும் ஐசிஇ என அனைத்து விதமான வெர்ஷன்களிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் மாடலுடன் சேர்த்து டாடா இன்னும் சில கான்செப்ட் மாடல்களை காட்சிப்படுத்தியது.

டாடா அவின்யா இவி (Tata AVINYA Concept EV), டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) மற்றும் டாடா ஸ்டார் பஸ் இவி ஃப்யூவல் செல் (Tata Starbus EV Fuel Cell ) என பல தரப்பட்ட வாகனங்களை இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சி தளத்தில் வைத்து டாடா காட்சிப்படுத்தியது.

Mahindra thar e concept

லெவல் 2 அடாஸ், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, பவர்டு இருக்கை, மல்டி ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் என நவீன கால அம்சங்கள் பலவற்றைத் தாங்கிய கான்செப்ட் மாடல்களாகவே இவைக் காட்சிப்படுத்தப்பட்டன. சொல்லப் போனால் இந்த வாகனங்களில் சில தனித்துவமான அம்சங்களையும் வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்திராவின் காட்சிப்படுத்திய கான்செப்ட் மாடல்கள் (Mahindra Concept Models): டாடாவை போலவே நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திராவும் நடப்பாண்டில் பலதரப்பட்ட கான்செப்ட் மாடல்களைக் காட்சிப்படுத்தி இருக்கின்றது. அந்தவகையில், நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களான தார் இவி கான்செப்ட், ஸ்கார்பியோ பிக்-அப் கான்செப்ட் மற்றும் பிஇ.05 கான்செப்ட் ஆகியவற்றையே அது காட்சிப்படுத்தியது.

இந்த அனைத்தும் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக முக்கியமாக தார் இவி மற்றும் ஸ்கார்பியோவின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட பிக்-அப் டிரக் வகை வாகனங்கள் வாகன ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்தன. அந்த அளவிற்கு மிகவும் அட்டகாசமான தோற்றம் மற்றும் ஸ்டைலில் அவை உருவாக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX): 2023 ஆட்டோ எக்ஸ்போவை பயன்படுத்தி காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இது ஓர் எலெக்ட்ரிக் காராகும். மாருதி சுஸுகி இந்த காரை இந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இது ஓர் முழு சார்ஜில் 500 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என கூறப்படுகின்றது. இதில், அனைத்து வீல் இயக்கம் கொண்ட தேர்வும் வழங்கப்பட இருக்கின்றது. மேலும், இந்த இவிஎக்ஸ் விற்பனைக்கு வரும் எனில் அது டாடா நெக்ஸான் இவிக்கு மிகப் பெரிய போட்டியாளனாக அமையும். மாருதி சுஸுகி இந்த காரை 2025 லேயே விற்பனைக்குக் கொண்டு வரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வரிசைக் கட்டி புதுமுக வாகனங்கள் வரும் நாட்களில் விற்பனைக்கு வர இருக்கின்றன என்பதற்கு சான்றாகவே இந்த கான்செப்ட் கார் மாடல்களின் வெளியீட்டு நிகழ்வு அமைந்திருக்கின்றது. இந்த வாகனங்கள் நாட்டில் விற்பனைக்கு வரும் எனில் மிகப் பெரிய பெரிய வரவேற்பை அவை பெற வாய்ப்புகள் இருக்கின்றன.

மேலே பார்த்த கான்செப்ட் மாடல்கள் மட்டுமின்றி இன்னும் சில கான்செப்ட் மாடல்கள் இந்த உலகில் 2023ல் அறிமுகம் செய்யப்பட்டன. ஹோண்டா எலிவேட் ஃபீல்டு எக்ஸ்ப்ளோரர் (Honda Elevate Field Explorer Concept), டொயோட்டா அர்பன் கிராஸோவர் கான்செப்ட் (Toyota Urban Crossover Concept),

ரெனால்ட் ட்விங்கோ கான்செப்ட் (Renault Twingo Concept), ஹூண்டாய் கோனா ஜேடே கான்செப்ட் (Hyundai Kona Jayde Concept), நிஸான் ஹைப்பர் ஃபோர்ஸ் கான்செப்ட் (Nissan Hyper Force Concept Revealed), லெக்சஸ் எல்எஃப்-இசட்எல் கான்செப்ட் (Lexus LF-ZL Concept Revealed),

சுஸுகி ஸ்விஃப்ட் கான்செப்ட் (Suzuki Swift Concept), டொயோட்டா இபியூ கான்செப்ட் (Toyota EPU Concept), டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கான்செப்ட் எஸ்இ (Toyota Land Cruiser Concept Se), நிஸான் ஹைப்பர் பங்க் (Nissan Hyper Punk Concept), டொயோட்டா ஐஎம்வி ஓ கான்செப்ட் (Toyota IMV 0 concept) என இன்னும் பல கார் மாடல்கள் இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, December 29, 2023, 23:09 [IST]
English summary
Concept car models that showcased in 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X