சரியா வண்டி ஓட்ட தெரியாதவங்க ஓட்டினாலும் ஆக்ஸிடென்ட் ஆகாது! இந்த ஒரு சிஸ்டம் போதும் இந்தியாவுக்கு!
அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டென்ஸ் சிஸ்டம் (அடாஸ்) இந்த தொழிற்நுட்பம் தற்போது இந்தியாவில் விற்பனையாகி வரும் உயர் ரக கார்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. பல்வேறு செக்மெண்டில் விற்பனையாகும் கார்களில் இந்த புதிய தொழிற்நுட்பத்தை கார் தயாரிப்பாளர்கள் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இது கார்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்பை குறைக்கும் மிக முக்கியமான தொழிற்நுட்பமாகும்.
காண்டினென்டல், இது ஒரு ஜெர்மன் நிறுவனம். இந்நிறுவனம் ஆட்டோமொபைலுக்கான உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனம் தற்போது லெவல் 2 அடாஸ் தொழிற்நுட்பத்தை கமர்ஷியலாக தயாரிக்க முடிவு செய்துள்ளது. தற்போது அந்நிறுவனம் தயாரிக்கும் அடாஸ் தொழிற்நுட்பத்தை கார்களில் பொருத்த கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இந்திய கார் தயாரிப்பாளர்கள் விரைவில் கான்டினென்டல் நிறுவனம் தயாரிக்கும் அடாஸ் தொழிற்நுட்பத்தை தங்கள் காரில் பொருத்தி விற்பனைக்கு அறிமுகம் செய்வார்கள் எனத் தெரிகிறது. இந்நிலையில் கான்டினென்டல் நிறுவனம் தங்களது அடாஸ் தொழிநுட்பம் எப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் கார்களில் செயல்படுகிறது என்பதைக் காட்ட எங்களை அழைத்தது.
இந்த அடாஸ் தொழிற்நுட்பத்தை டெஸ்ட் செய்யும் அழைப்பு வந்தவுடன் நாங்கள் எங்கள் குழுவினருடன் பெங்களூரு வெளிப்புற பகுதியில் ஓசூர் அருகே உள்ள தனேஜா ஏரோஸ்பேஸ் மற்றும் ஏவியேஷன் மையத்திற்குச் சென்றோம். அங்கு தான் கான்டினென்டல் நிறுவனம் டெஸ்ட் ரைடிங்கிற்காக ஏற்பாட்டைச் செய்திருந்தது. அங்கு கான்டினென்டல் நிறுவனம் தனது லெவல் 2 அடாஸ் சிஸ்ட்தை எங்களுக்குக் காட்டியது அதைப் பற்றிக் காணலாம்.

1. அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்
இந்த தொழிற்நுட்பத்தில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் வேலை செய்கிறது. இதற்காக காரின் முன்புறம் மற்றும் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள ரேடார் சென்சார் தகவல்களை எடுத்துக்கொள்கிறது. அதை வைத்து காரை குறிப்பிட்ட வேகத்தில் முன்புறம் செல்லும் காருக்கு குறிப்பிட்ட தொலைவில் அதே லேனில் பயணிக்க வைக்கிறது.
தேவைப்பட்டால் எலெக்ட்ரானிக் பிரேக் சிஸ்டம் மூலம் காரை தானாக கண்ட்ரோலும் செய்யும். முன்புறம் உள்ள கார் மெதுனாலோ அல்லது நின்று விட்டாலோ இந்த தொழிற்நுட்பம் உள்ள காரையும் இது நிறுத்திவிடும். பின்னர் முன்புறம் உள்ள கார் செல்லும் போது இந்த காரும் தானாகச் செல்லும்.
2. பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன்
ஒரு காரின் பிளைன்ட் ஸ்பாட்டை மானிட்டர் செய்யவும் இந்த தொழிற்நுட்பம் உதவுகிறது. இதற்காக பிளைன்ட் ஸ்பாட் பகுதியில் உள்ள ரோடர் மூலம் தகவல்களைச் சேமித்து காரின் சைடு மிரரில் பிளைன்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்கள் குறித்த சிக்னலை கொடுக்கிறது.
3. எமர்ஜென்ஸி பிரேக் அசிஸ்ட்
எமர்ஜென்ஸி பிரேக் அசிஸ்ட் என்பது உங்கள் கார் நேராகப் போய் எதிலும் மோதாத வகையில் தானாக பிரேக் பிடிக்கும் தொழிற்நுட்பம் தான். ஒரு வேலை டிரைவரால் கார் வேகமாகப் போய்க் கொண்டிருக்கும் போது பிரேக் பிடிக்க முடியவில்லை என்றால் இந்த காரில் உள்ள இந்த தொழிற்நுட்பம் ரேடார் மற்றும் காரின் வேகத்தைக் கணக்கிட்டுத் தானாக வேகத்தைக் குறைக்கவோ அல்லது மொத்தமாகக் காரை நிறுத்தவோ செய்யும் இதனால் காரின் உள்ளே இருப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

4. பானட் வழியான பார்வை!
இந்த காரில் உள்ள சிஸ்டம் காரில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை கனெக்ட் செய்து காரை பானட் முன்பு என இருக்கிறது என டிரைவர் சீட்டிலிருந்து அவருக்குத் தெரியாத விஷயங்களை எல்லாம் எடுத்து டேஷ்போர்டு ஸ்கிரீனில் காட்டும். இது குறிப்பாக ஆஃப்ரோடு பாதைகள், மற்றும் குண்டு குழியுமான சாலைகளைக் கவனிக்க உதவும்.
5. லேன் கீப் அசிஸ்ட்
கான்டினென்டல் அடாஸ் தொழிற்நுட்பத்தில் முக்கியமான அம்சம். இந்த சிஸ்டம் ஒரு கார் தான் செல்லும் லேனில் சென்று கொண்டிருக்கும் போது டிரைவர் சரியாக லேனிற்கு நடுவில் செல்லவில்லை என்றால் தானாக லேனிற்கு நடுவே காரை கொண்டு செல்ல உதவும். இந்த சிஸ்டம் டிரைவரின் கை ஸ்டிரிங்கில் இருந்தால் மட்டுமே வேலை செய்யும்.
6. ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட்
இதை ஆர்சிஏ எனச் சுருக்கமாக அழைப்பார்கள். உங்கள் காருக்கு பின்னே வேறு கார் அல்லது யாராவது நடந்த சென்றால் அது குறித்து டிரைவருக்கு அலர்ட் செய்யும். இதனால் மூலம் கார் ரிவர்ஸ் எடுக்கும் போது ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்க முடியும்.
இது போக கான்டினென்டல் நிறுவனம் இந்த டெஸ்ட் ரைடின் போது தனது கன ரக வாகனங்களுக்கென தயாரிக்கப்பட்ட அடாஸ் தொழிற்நுட்ப கருவியான ஏஆர்எஸ் 540 ரேடார் மாடியூல் காட்சிப்படுத்தியது. இதில் பெடஸ்ட்ரியன் கிராஸிங் அலர்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், டிரைலர் மேனேஜ்மென்ட், மற்றும் பல அம்சங்கள் இருக்கிறது. இதெல்லாம் கம்ப்யூட்டர் சிமலேனஷன்படி செட் செய்ய முடியும்.
இந்த நிகழ்ச்சியில் அந்நிறுவனம் காட்சிப்படுத்தியதிலேயே முக்கியமான விஷயம் எச்எம்ஐ ஸ்கிரீன் தொழிற்நுட்பம் தான். இந்த தொழிற்நுட்பம் ஸ்கிரீன் அதிக ரெசல்யூசன் கொண்ட இமேஜை கொண்டு வருவதுதான். இதில் சப்ஜெக்ட்ர கலர் கேம்களில் உள்ளது போல புராசஸ் செய்து 3டி இமேஜ் ஸ்டெச்சிங்காக இமேஜ் மேப்பிங் மூலம் கிடைக்கிறது.
கான்டினென்டல் நிறுவனம் காட்சிப்படுத்திய அவர்களது அடாஸ் தொழிற்நுட்பம் பல வாகன தயாரிப்பார்களை நிச்சயம் ஈர்கும். இந்த தொழிற்நுட்பம் கொண்ட வாகனங்கள் அதிகம் வரும். தற்போது கான்டினென்டல் நிறுவனம் அடாஸ் தொழிற்நுட்பத்தை இந்தியாவிற்குத் தகுந்தார் போல அலர்ட் அடிப்படையிலான ஒரு சிஸ்டமாக தயாரித்துள்ளது. வருங்காலத்தில் இதற்குத் தகுந்தார் இந்த தொழிற்நுட்பம் மேம்படும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








