குக் வித் கோமாளி நடிகர் வாங்கிய கார் இவ்வளவு காஸ்ட்லியா? எப்படி இப்படி சம்பாதிச்சாரு?
பேட்டை, சார்பட்டா பரம்பரை, மகான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் முத்துக்குமார் புதிதாக இன்னோவா கிரைஸ்டா காரை சொந்தமாக வாங்கியுள்ளார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் விலை மற்றும் மற்ற தகவல்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நடிகர் ரஜினிகாந்துடன் பேட்டை திரைப்படத்திலும், சார்பட்டா பரம்பரை படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும், மகான் திரைப்படத்திலும் நெகட்டிவ் ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகர் முத்துக்குமார். இதையெல்லாம் விட அவர் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதிக பிரபலமானார்.

இவர் சமீபத்தில் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கிரைஸ்டா காரை சொந்தமாக வாங்கியுள்ளார். இதை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்தக் காரின் புகைப்படங்கள் மற்றும் இந்த காரின் துணியை அகற்றும் போது எடுக்கப்பட்ட ரீல் என அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
டொயோட்டா இன்னோவா கிரைஸ்டா காரை பொறுத்தவரை மொத்தம் 10 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆகிய ஆப்ஷன்களில், ஜிஎக்ஸ், விஎக்ஸ் மற்றும் இசட் எக்ஸ் ஆகிய வேரியன்ட்கள் இருக்கிறது. இதில் ஒவ்வொரு வேரியண்டிற்கும் காரின் அம்சங்கள் மற்றும் தொழிற்நுட்பங்கள் மாறுபடும்.

நடிகர் முத்துக்குமார் வாங்கிய கார் இசட்எக்ஸ் வேரியண்ட் மேனுவல் கியர் காராகும். இந்த காரின் இன்ஜினை பொறுத்தவரை 2393 சிசி 4 சிலிண்டர் இன்லைன் 4 வால்வு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும் 343 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் முழுமையாக டீசலில் மட்டுமே இயங்கும்.
இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4735 மிமீ நீளமும், 1830 மிமீ அகலமும், 1795 மிமீ உயரமும், 2750 மிமீ வீல் பேஸூம் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 1730 கிலோ எடை கொண்டது. இந்த காரில் மொத்தம் ஏழு பேர் அமர்ந்து செல்லும்படி மூன்று வரிசையில் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக பின்பக்கம் 300 லிட்டர் அளவிலான பூட் ஸ்பேஸ் வசதியும் இருக்கிறது.

இந்த காரில் பாதுகாப்பு வசதிக்காக 7 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக இபிடி-யுடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது. இதுபோக ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், மூன்றாவது வரிசை சீட்டர்களுக்கான ரூஃப் மவுண்டெட் ஏசி வென்ட் உள்ளிட்ட வசதிகளும் இந்த காரில் இருக்கிறது.
இந்த கார் மார்க்கெட்டில் ரூ 25 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது. சென்னையில் இந்த காரை வாங்கும்போது ஆன்-ரோடு விலையாக ரூ 30.95 லட்சம் வரை வந்துவிடும். நடிகர் முத்துக்குமார் இவ்வளவு காஸ்ட்லியான காரை சொந்தமாக வாங்கி உள்ளது இவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்னோவா கிரைஸ்டா கார் குடும்பத்துடன் செல்ல ஒரு சிறந்த காராக இருக்கும். அதிக இடவசதி இந்த காரில் இருக்கிறது. இதனால் நடிகர்கள் போன்ற பிரபலங்கள் இது போன்ற காரை பயன்படுத்துவது அவர்களுக்கு சுலபமாக இருக்கும். அவர்கள் பயண நேரத்தில் அதிகமான பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டியது இருக்கும் நீண்ட தூர பயணம் செய்ய வேண்டியிருக்கும் இதற்கெல்லாம் இந்த கார் சிறப்பான கார் தான்.


Click it and Unblock the Notifications









