குக் வித் கோமாளிகளுக்கு ஜாக்பாட் அடிச்சிருச்சா! சுனிதா வாங்கிய லக்சூரி காரோட விலை இவ்ளோ அதிகமா!..
பிரபல தனியார் தொலைக்காட்சியில் வரும் உலக புகழ்பெற்ற ஷோ-வே 'குக் வித் கோமாளி' (Cooku with Comali). சினிமா திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே இந்த ஷோ-வுக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது.
குறிப்பாக, இந்த ஷோவில் கோமாளிகளாக வந்த பாலா, புகழ், குரோஷி, மணி மேகலை, சிவாங்கி மற்றும் சுனிதா போன்றவர்களுக்கு என தனி ரசிக பட்டாளமே உண்டு. இவர்களில் சிலரே தற்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக சொகுசு கார்களை வாங்கத் தொடங்கி இருக்கின்றனர்.

அந்தவகையில், சமீபத்தில் மணி மேகலை பிஎம்டபிள்யூ ஆடம்பர காரை வாங்கினார். இவரைப் போலவே பாலா, புகழ் உள்ளிட்டோரும் மிக மிக விலையுயர்ந்த ஆடம்பர காரை வாங்கி ஒட்டுமொத்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என அனைத்து திரை உலகினரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்தனர்.
இந்த நிலையிலேயே சுனிதாவும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி அசத்தி இருக்கின்றார். அவர் வாங்கி இருப்பது லெக்சஸ் நிறுவனத்தின் என்எக்ஸ் 300எச் லக்சூரி கார் மாடல் ஆகும். இதன் இந்திய விலை 63 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய மிக மிக விலை உயர்ந்த காரையே சுனிதா தற்போது வாங்கி இருக்கின்றார். இதனை சிறுக சிறுக பணத்தைச் சேர்த்து வைத்து வாங்கியதாக அவர் கூறி இருக்கின்றார். சுனிதாவின் இந்த கொள்முதலுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
என்எக்ஸ் 300எச் ஓர் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த லக்சூரி காராகும். இந்த காரில் அல்ட்ரா ஸ்மூத் வசதிக் கொண்ட 2.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் ஹைபிரிட் அம்சம் செல்ஃப் சார்ஜிங் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதாவது, காரின் இயக்கத்திலேயே தானாக சார்ஜ் ஆகிக் கொள்ளும். இதன் பெட்ரோல் மோட்டார் 194 பிஎச்பி பவரையும், 210 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதேபோல், இந்த காரில் ஹைபிரிட் தொழில்நுட்பத்தின்கீழ் பிஎம்எஸ்எம் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 105 கிலோவாட் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது.
இது முன் வீலுக்கு வழங்கும் திறன் ஆகும். பின் வீலில் 50 கிலோவாட் திறனை வெளியேற்றும் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆமாங்க, லெக்சஸ் என்எக்ஸ் 300எச் ஓர் நான்கு வீல்கள் இயக்கம் கொண்ட சொகுசு காராகும். இந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் இயங்குவதற்கு ஏதுவாக என்ஐஎம்எச் (NiMH) மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய சொகுசு காராகவோ லெக்சஸ் என்எக்ஸ் 300எச் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

குறிப்பாக, இந்த காரில் எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் ஸ்டியரிங் வீல், ஆட்டோ ரெட்ரேக்டபிள் விங் மிர்ரர்கள், எலெக்ட்ரோ குரோமிக் இன்சைடு ரியர் வியூ மிர்ரர், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், முன்-பின் பக்கங்களில் சூடேற்றும் வசதிக் கொண்ட இருக்கைகள், பனோரமிக் ரூஃப், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், கிக் சென்சார் வசதிக் கொண்ட பவர் டெயில்கேட், பேடில் ஷிஃப்டர் என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, சாவியில்லாமல் நுழையும் ஸ்மார்ட் கோ வசதி, ஸ்டார்ட்-ஸ்டாப் டெக்னாலஜி, ஆட்டோ லெவல்லிங், ஹெட்லேம்ப் க்ளீனர், அடாப்டீவ் வேரியபிள் சஸ்பென்ஷன், க்ரூஸ் கன்ட்ரோல், லெக்சஸ் ரிமோட் டச் பேட், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆட்டோ ரெயின் சென்சார், நேவிகேஷன் வசதிக் கொண்ட 10.3 அங்குல திரை போன்ற நவீன கால அம்சங்களும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதேபோல், இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் பஞ்சமின்றி வழங்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், 8 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆன்டி லாக் பிரேக் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்சன் கன்ட்ரோல் கன்ட்ரோல் சிஸ்டம், 360 டிகிரி பனோரமிக் வியூ மோட்டார், பின் பக்கத்தின் வாகன நடமாட்டத்திற்கு ஏற்ப வழி நடத்தும் வசதி உள்ளிட்டவையும் சுனிதா வாங்கி இருக்கும் என்எக்ஸ் 300எச் சொகுசு காரில் இடம் பெற்றிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குக் வித் கோமாளி புகழ் சுனிதா, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்றிருக்கின்றார். ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் என பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றிருக்கின்றார். இதேபோல், சில சினிமா திரைப்படங்களிலும் அவர் தோன்றி இருக்கின்றார். ஆனால், அவருக்கு பெயர் பெற்றுக் கொடுத்த ஷோவாக குக் வித் கோமாளி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









