அஜித், விஜய் பட வசூல் எல்லாம் கம்மி தான்! ஒரு எஃப்1 ரேஸ் காரை தயாரிக்க எவ்வளவு செலவாகும் தெரியுமா?
கார் ரேஸ்களில் எஃப்1 கார் ரேஸ் தான் மிகவும் பிரபலம். அந்த ரேஸில்தான் கார்கள் அதிகமான வேகத்தில் பயணிக்க முடியும். அதனாலேயே அந்த ரேஸ் ஒழுங்கான டிராக்கில் நடத்தப்படுகிறது. அந்த ரேஸை பார்க்க ஆட்டோமொபைல் காதலர்கள் அதிகம் விரும்புவார்கள். இந்த எஃப்1 ரேஸில் பயன்படுத்தப்படும் கார்கள் முற்றிலும் வித்தியாசமானவை
அதிவேகமாகப் பயணிக்க வேண்டும் என்பதற்காகச் சாதாரண ஒரு காரிலிருந்து இந்த எஃப்1 கார் முற்றிலும் வித்தியாசப்படுகிறது. உயரம் குறைவாக ஏரோடைனமிக்ஸ் விதியின்படி இந்த கார்கள் டிசைன் செய்யப்படுகிறது. இது நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த காரின் விலையைப் பற்றித் தெரியுமா? ஒரு காரை தயாரிக்க இந்த பண மதிப்பில் ரூ100 கோடி வரை செலவாகும் எனச் சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆம் ! எஃப் ரேஸ்க் பயன்படுத்தப்படும் கார்கள் ஒவ்வொரு காரும் கஸ்டைமஸ் செய்யப்படுபவை ஒரு காரை போல மற்றொரு கார் இருக்காது. இது மட்டுமல்ல இது முழுவதும் கைகளாலேயே செய்யப்பட்ட காராக இருக்கும். மிஷின் தயாரிப்பு எதுவும் இதில் இருக்காது. காரின் லுக் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும் காருக்குள் இருக்கும் மற்ற விஷயங்கள் ஒரே மாதிரியாக இருக்காது.
இது மட்டுமல்ல காரில் அதிக வேகத்தில் செல்லும் பவர்ஃபுல் காராக இருக்கும். அதே நேரம் இந்த காரின் எடையும் குறைவாக இருக்க வேண்டும். இதனால் காரில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு விஷயமும் பார்த்துப் பார்த்து செய்யப்படும். இந்த கார் முழுமையாக கஸ்டமைஸ்டு கார் என்பதால் இந்த காரை தயாரிக்கும் போது ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியாக டெஸ்ட் செய்வார்கள்.
செலவு - Expense
இப்படியாக ஒவ்வொரு காருக்கும் தனித்தனி டெஸ்ட், தனித்தனி டிசைன், தனித்தனியாக ஆய்வுகள், உதிரிப்பாகங்கள் என இந்த காரின் விலை எங்கேயோ சென்று விடுகிறது. ஓரளவிற்கு அதிக திறன் கொண்ட காரை தயாரிக்க ரூ100 கோடி வரை செலவாகும். இது மட்டுமல்ல இப்படியான காரை தயாரிக்கும் ஒரு ஆலையைக் கட்டமைக்கவே ரூ800 கோடிக்கு மேல் செலவாகும்.
இந்த காரின் இன்ஜின் முதல் ஒரு ஸ்கரூ வரை எந்த பொருளில் செய்ய வேண்டும் என ஆய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்படுகிறது. எந்த சிறிய தவறும் இந்த காருக்கு களத்தில் பிரச்சனையை ஏற்படுத்திவிட கூடாது என்பதற்காக இது ஆய்வு செய்யப்படுகிறது. ஒரு காரை தயாரிக்க சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான உதிரிப் பாகங்கள் பயன்படுத்தப்படுகிறது.
எஃப் ரேஸில் ஒரு நிறுவனம் கலந்து கொள்ள வேண்டும் என்றால் அந்நிறுவனம் 2 எஃப்2 கார்களை பதிவு செய்ய வேண்டும். இந்த 2 கார்களை தயாரிக்கவே செலவு ரூ200 கோடி ஆகிடும். மேலும் ரேஸில் நடக்கும் விஷயங்கள் போக்குவரத்து எனக் கணக்கிட்டால் சிறிய நிறுவனங்களால் இதில் கலந்து கொள்ளவே முடியாது. அதனால் இந்த துறையில் மிகப்பெரிய பண முதலை நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொள்ளும்.
இன்ஜின் - Engine
பொதுவாக எஃப் 1 கார்களில் 1.6 லிட்டர் வி6 டர்போ ஹைபிரிட் இன்ஜின் தான் பயன்படுத்தப்படுகிறது. இதுதான் அதிக பெர்ஃபாமென்ஸை வழங்குகிறது. இந்த இன்ஜினை தயாரிக்க ரூ50 கோடி வரை செலவாகிறது. சில இன்ஜின்களுக்கு ரூ75 கோடி கூட செலவாகும். ஒவ்வொரு காருக்கும் தகுந்தார்போல் இன்ஜினில் மாடிஃபிகேஷன் இருக்கும்.
இந்த கார் 1000 குதிரை திறனை வெளிப்படுத்தும். இது மணிக்கு 300-400 கி.மீ வேகத்தில் சீறிப் பாயும். கார் தயாரிக்க பெரும் செலவு இன்ஜின், டர்போ மற்றும் ஹைபிரிட் சிஸ்டத்தை கட்டமைப்பதற்காகத் தான் செலவாகும். உலகிலேயே அதிக மைலேஜ் தரும் எஃப்1 கார் என்றால் 136 லிட்டர் பெட்ரோலில் 305 கி.மீ பயணித்து சாதனை படைத்தது அதாவது ஒரு லிட்டருக்கு 2.2 கி.மீ தான் மைலேஜ்
மைலேஜ் - Mileage
இந்த காரில் நம் கார் போல் சராசரி மைலேஜ் இருக்காது. இந்த கார் 80 கி.மீ மைலேஜ் வரை சாதாரண கார் போலத் தான் மைலேஜ் வழங்கும், அதன் பின்னர் 150 கி.மீ வரை சாதாரண காரை விடச் சற்று அதிகமாக பெட்ரோலை குடிக்கும். ஆனால் 250 கி.மீ மேல் வேகம் செல்லும் போது மிக அதிகமான அளவு எரிபொருளைக் குடிக்கும்.
எஃப் 1 ரேஸில் 250 கி.மீ வேகத்திற்கும் அதிகமான வேகத்தில் தான் பெரும்பாலான நேரங்களில் கார் பயணிக்கும் என்பதால் குறைவான மைலேஜ் தான் தரும். இந்த எஃப்1 கார் இன்ஜினை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஆய்வு குறித்த தகவல்கள் கர்ஷியல் வாகனங்களுக்கான இன்ஜினை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் என்பதால் இந்த ஆய்விற்கு அதிகமான பணத்தைச் செலவு செய்ய நிறுவனங்கள் தயாராக இருக்கிறது. இந்த எஃப்1 ரேஸ் கார் குறித்த வேறு ஏதாவது சுவாரஸ்யமான விஷயங்கள் உங்களுக்குத் தெரிந்தால் கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications