என்னடா நடக்குது இங்க! கார்ல போகும் போது என்னென்ன பண்ணுறாங்கனு பாருங்க! வைரலாகும் வீடியோ
மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் மிகவும் பிரபலமான கார். இந்த காரை வாங்க ஏராளானோர் ஆண்டுக் கணக்கில் கூட காத்திருக்கின்றனர். இந்த காரின் லுக், பாதுகாப்பு அம்சங்கள், வசதிகள் எனப் பல விஷயங்கள் மக்களை ஈர்த்துள்ளது. இந்த கார் அடிக்கடி பல்வேறு காரணங்களுக்காகச் செய்திகளில் வந்துள்ளது. ஆனால் தற்போது இந்த கார் மீண்டும் வைரலாகியுள்ளது. ஆனால் இந்த முறை தவறான காரணங்களுக்காக வைரலாகியுள்ளது.
சமீபத்தில் இஸ்டாகிராமில் afsar_ghudasi44 என்ற பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று பகிரப்பட்டிருந்தது. இந்த வீடியோவில் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவர் காரை ஓட்டாமல் தன் காலை எடுத்து பயணிகள் சீட்டிலிருந்தவர் மீது போட்டுக்கொண்டு அதில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கொஞ்சி குலாவி விளையாடிக்கொண்டிருந்தார்.

அந்த பெண் இவரின் மனைவியாகவோ அல்லது காதலியாகவோ இருக்கலாம். அப்பொழுது கார் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்தது. இந்த வீடியோ வைரலாக பரவிக் கொண்டிருந்தது. பலருக்கு இந்த கார் டிரைவர் ஆக்ஸிலரேட்டரை மதிக்காமல் எப்படி ஓடுகிறது என்ற சந்தேகம் இருந்தது.
சிலர் இதை கிராஃபிக்ஸ் காட்சிகள் என்று கூறினார். ஆனால் இந்த காரில் உள்ள வசதிகளை வைத்துப் பார்த்தால் இப்படி கார் ஓடுவது சாத்தியம் தான். கார் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் செல்லும் போது க்ரூஸ் கண்ட்ரோலை ஆன் செய்துவிட்டால் அதன் பின் டிரைவர் ஆக்ஸிலரேட்டரை மதிக்க வேண்டிய தேவையில்லை.
மேலும் காரை அடாஸ் தொழிற்நுட்பமே எளிதாகக் கையாளும், ஆனால் அந்த நேரத்தில் டிரைவர் எப்பொழுது வேண்டுமானாலும் ஆக்ஸிலரேட்டர் கண்ட்ரோலை எடுக்கத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் இந்த வீடியோவில் டிரைவர் அசால்டாக விளையாடிக்கொண்டிருக்கிறார். இந்த வீடியோ பார்க்கும் எல்லோருக்கும் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.
அடாஸ் தொழிற்நுட்பம் என்பது டிரைவர் காரை ஓட்டவில்லை என்றால் தானாக ஓடும் தொழிற்நுட்பம் எல்லாம் கிடையாது. இது டிரைவருக்கு ஒரு பாதுகாப்பான டிரைவிங்கை வழங்கும் தொழிற்நுட்பம் தான். இந்த தொழிற்நுட்பத்தில் கார் தானாக இயங்கினாலும் டிரைவர் எப்பொழுதும் விழிப்புடனும், எப்பொழுது வேண்டுமானாலும் காரின் கண்ட்ரோலை எடுக்கும் நிலையில் இருக்க வேண்டும்.

இப்படியாக அடாஸ் தொழிற்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவது இது ஒன்றும் முதல் முறையில்லை. இதற்கு முன்பு ஒருவர் அடாஸ் தொழிற்நுட்பத்தை காரை ஓட்ட விட்டுத் தூங்கிக்கொண்டிருக்கும் வீடியோ, சிலர் செல்போனை நோண்டிக்கொண்டிருக்கும் வீடியோ எல்லாம் வெளியானது. இதற்கெல்லாம் முக்கியமான காரணம் மக்கள் அடாஸ் தொழிற்நுட்பத்தை தவறாகப் புரிந்து கொண்டது தான்.
கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் அடாஸ் தொழிற்நுட்பம் குறித்து நிச்சயம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஒரு வகுப்பையே எடுக்க வேண்டும். அப்பொழுது தான் அவர்களுக்கு அதன் சிரீயஸ் புரியும். சிலர் இதை ஆட்டோமெட்டிக் டிரைவிங் மோட் என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் ஆட்டோமெட்டிக் கார்கள் பயன்பாடு இன்னும் வரவில்லை.

தற்போது வைரலாகி வரும் இந்த இளைஞர் பெண்ணுடன் கொஞ்சி குலாவும் வீடியோவிற்கு சமூகவலைத்தளங்களில் பலர் எதிர்ப்புகளையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்த இளைஞர் ஆபத்தான முறையில் காரை ஓட்டுவதாகக் குற்றச்சாட்டி வருகின்றனர். பலர் போலீசார் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
அடாஸ் தொழிற்நுட்பம் கொண்ட கார்கள் வரிசையாகப் பல களம் இறங்கவுள்ளன. டாடா நிறுவனம் தனக்கென அடாஸ் தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. 2023 ஹோண்டா சிட்டி கார் அடாஸ் தொழிற்நுட்பத்துடன் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் விலை குறைந்த அடாஸ் தொழிற்நுட்பம் கொண்ட கார் இது தான்.


Click it and Unblock the Notifications








