நம்ம சரவணா ஸ்டோர் அண்ணாச்சி கிட்டையே ஆட்டத்தை காட்டிய ஆடி நிறுவனம்... தரமான பாடம் புகட்டிய நீதிமன்றம்!..

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடிக்கு நீதிமன்றம் சூப்பரான பாடம் ஒன்றை புகட்டி இருக்கின்றது. பாதிக்கப்பட்ட காரை விற்பனைச் செய்த குற்றத்திற்காக மிகக் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டதோடு, அதிரடி தீர்ப்பையும் நீதிமன்றம் வழங்கி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சரவணா ஸ்டோர்ஸை அறியாதவர்களே நம் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. சின்ன கை குட்டை வாங்குவது என்றாலும் சரி, கல்யாணத்து பட்டுப் புடவை எடுக்கப் போறதா இருந்தாலும் சரி, தமிழக வாசிகளில் பலர் தேடி செல்லும் நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ் டெக்ஸ் -ஆகதான் இருக்கும். இந்த நிறுவனத்தின் பெயரில் கடந்த 2009 ஆம் ஆண்டில் ஆடி நிறுவனத்தின் பிரபல சொகுசு கார் மாடலான க்யூ7-ஐ வாங்கப்பட்டு இருக்கின்றது.

சரவணா ஸ்டோர்

பிரேக்கிங் சிஸ்டத்திலேயே சிக்கல்

இந்த சொகுசு காரிலேயே பல்வேறு பிரச்னைகளை நம்ம அண்ணாச்சி சந்தித்திருக்கின்றது. குறிப்பாக, கடந்த 2014 ஆம் ஆண்டில் மிகப் பெரிய பிரச்னையாக காரின் பிரேக் சிஸ்டத்தில் சில சிக்கல்களை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சந்தித்திருக்கின்றார். இதுகுறித்து பல முறை நிறுவனத்தின் சர்வீஸ் மையத்தில் முறையிட்டும் உரிய தீர்வு எட்டப்படாத நிலையே தென்பட்டு இருக்கின்றது. இதன் விளைவாக சரவணா ஸ்டோர்ஸ் டெக்ஸ் நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கின்றது.

அதிரடி உத்தரவு

இந்த மனுவின்கீழ் பல மாதங்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றது. இதன் தீர்ப்பே இப்போது வெளியாகி உள்ளது. கோளாறுள்ள வாகனத்தை சரி செய்துக் கொடுக்காத காரணத்திற்காக சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடிக்கு கடுமையான அபராத தண்டனையை தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர் ஆணையம் விதித்துள்ளது. நீதிபதி ஆர். சுப்பையா மற்றும் உறுப்பினர் ஆர். வெங்கடேச பெருமாள் அடங்கிய கமிஷனே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சரவணா ஸ்டோர்

இந்த அமர்வு கார் உற்பத்தியாளர்களுக்கு இரண்டு மாதங்கள் வரை அவகாசம் அளித்துள்ளது. கார் வாங்கப்பட்ட முழு தொகையையும் திருப்பு தர உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வழக்கிற்கு ஆகிய செலவு ரூ. 25 ஆயிரத்தையும் சேர்த்து வழங்க ஆடி நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. "வாகனங்களில் பாதுகாப்பு அம்சம் மிக முக்கியமானது. இதிலேயே சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டிருப்பது நுகர்வோர்க்கு பேராபத்தை விளைவிக்கக் கூடியதாக இருக்கின்றது" என்கிற கருத்தை முன் வைத்தே அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

கள்ளக்குறிச்சி பக்கத்துல திடீர்னு பிரேக் பிடிக்கல

சரவணா ஸ்டோர் உரிமையாளர் இந்த காரை 2009 ஆம் ஆண்டிலேயே வாங்கியிருந்தாலும், அதை அவர்கள் பெரிய அளவில் பயன்படுத்தவில்லை என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே 2014 ஆம் ஆண்டில் அவர் குடும்பத்துடன் வெளியில் சென்றிருக்கின்றார். அப்போதே வாகனத்தின் பிரேக்கிங் சிஸ்டத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது. கள்ளக்குறிச்சி அருகில் பயணித்துக் கொண்டிருந்தபோது பிரேக் ஃபெயிலியர் ஆகிய இருக்கின்றது. இதன் விளைவாக பெரும் விபத்து ஏற்படும் சூழல் உருவாகி இருக்கின்றது.

சரவணா ஸ்டோர்

பெருசா பயன்படுத்தவே இல்ல

அந்த நேரத்தில் வாகனத்தை வாகன ஓட்டிய ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு லாவகமாக கையாண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. ஒட்டுமொத்தமாகவே ஆடி க்யூ7 சொகுசு கார் 42,036 கிமீ மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக நீதிமன்றத்தால் சொகுசு கார் பெரியளவில் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரிந்துக் கொள்ள முடிந்திருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே முழு கொள்முதல் தொகையையும் திருப்பு தர உத்தரவிடப்பட்டு இருக்கின்றது.

சர்வீஸ்னு சொல்லிட்டு 2 லட்ச ரூபா பிடிங்கியிருக்காங்க

பிரச்னைக்காக ஆரம்பத்தில் கார் அனுப்பப்பட்டபோது ரூ. 2.4 லட்சம் சர்வீஸுக்காக பெறப்பட்டதாக கூறப்படுகின்றது. இருப்பினும், காரின் பிரேக் பிரச்னை சீர்படவில்லை. இதைத்தொடர்ந்தே, ஆடிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு இருக்கின்றது. ஆடி க்யூ7 சொகுசு கார் இந்தியாவில் இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பிரீமியம் ப்ளஸ் மற்றும் டெக்னாலஜி ஆகியவையே அந்த வேரியண்டுகள் ஆகும். ரூ. 80 லட்சம் அதிகமான விலையில் இந்த கார் விற்பனைச் செய்யப்படுகின்றது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரில் எண்ணற்ற தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், 10.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.6 இன்ச் அளவுள்ள தொடுதிரை, ஆடி விர்ச்சுவல் காக்பிட், 4 ஜோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பிரீமியம் தர சவுண்ட் சிஸ்டம், ஏர் ஐயோனைசர், ஆம்பியன்ட் மின் விளக்கு போன்ற சூப்பரான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

என்ன இருந்து என்ன பலன்

இத்துடன், பார்க் அசிஸ்ட் ப்ளஸ், பனோரமிக் சன்ரூஃப், லேன் டிபார்ச்சர் வார்னிங் வசதி உடன் கூடிய ஸ்டியரிங் அசிஸ்ட், எட்டு ஏர் பேக்குகள், பார்க் அசிஸ்ட் ப்ளஸ் வசதி உடன் கூடிய 360 டிகிரி கேமிரா, க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் ஆடி க்யூ 7 சொகுசு காரில் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சொகுசு காரால் வெறும் 5.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிட முடியும் என்பதும் கவனிக்கத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Court asked to pay audi india rs 60 lakh to saravana stores owner
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X