"இவ்வளவு கேவலமாவா சர்வீஸ் பண்ணுவீங்க?" ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ20 ஆயிரம் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு!

அறைகுறையாக சர்வீஸ் செய்து ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரின் பிக்கப்பை கெடுத்ததால் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் காரின் உரிமையாளருக்கு ரூ20 ஆயிரம் நஷ்ட ஈடும் காரை இலவசமாக சர்வீஸ் செய்தும் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் சமீபத்தில் தான் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். 35 வயதான இவர் மைலசந்திரா ரோட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டுஒசூர் ரோடு சிங்க சந்திரா பகுதியில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டீலரான எலைட் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஃபோக்ஸ்வேகன் வென்டோ 1.5 லிட்டர் டீல் ஹைலைன் எம்7 2015 மாடல் காரை வாங்கினார்.

இவ்வளவு கேவலமாவா சர்வீஸ் பண்ணுவீங்க? ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ20 ஆயிரம் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு!

இவர் இந்த காரை வாங்கியதிலிருந்து கிட்டத்தட்டத் தினமும் இந்த காரை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் குமாருக்குக் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி குறிப்பிட்ட டீலரிடமிருந்து போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் அவர்கள் ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரில் எமிஷன் கட்டுப்பாட்டிற்கு சில சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் அப்டேட் செய்ய வேண்டும் எனக் கூறி காரை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

அவரும் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று காரை விட்டுவிட்டுத் திரும்ப 2 நாட்கள் கழித்து காரை டெலிவரி எடுத்துள்ளார். அதன் பின் காரை அவர் ஓட்டி பார்க்கும் போது கார் பழையபடி ஃபெர்பாமென்ஸ் செய்யவில்லை. பிக்கப் மிக மோசமான அளவில் குறைந்துள்ளதை உணர்ந்தார். இது போக காரின் இன்ஜினிலிருந்து வித்தியாசமான சத்தம் ஒன்று வருவதையும் உணர்ந்தார். உடனடியாக இந்த பிரச்சனையைச் சரி செய்ய கார் டீலரிடம் மீண்டும் காரை கொண்ட சென்றார்.

ஆனால் அங்குள்ள டெக்னீஷியன்களால் காரில் ஏற்பட்ட இந்த பிரச்சனையைச் சரி செய்ய முடியவில்லை. பல முயற்சிகள் செய்ததும். இந்த பிரச்சனையைச் சரி செய்ய முடியவில்லை. இதனால் தரமில்லாத சேவையைக் குறிப்பிட்ட டீலர் வழங்குவதாக உணர்ந்த தினேஷ் குமார் உடனடியாக இந்த பிரச்சனைக்குத் தீர்வு கேட்டு ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். ஆனால் அவர்களும் சரியாகப் பதிலளிக்கவில்லை.

இதனால் இவர் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கார் தயாரிப்பாளர் மற்றும் டீலர் ஷிப் மீது முறையாகப் புகார் ஒன்றைப் போலீசில் பதிவு செய்தார். அதற்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திலிருந்து பதில் வரவில்லை. இதற்காக சிறிது காலம் காத்திருந்த அவர் இறுதி முயற்சியாக இந்த பிரச்சனைக்குத் தீர்வு கேட்டு கோர்ட் வாசல் கதவைத் தட்ட முயற்சி செய்தார். கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர் பெங்களூரு 3வது கூடுதல் நகர்ப்புற நுகர்வோர் விவகார கமிஷனில் இது ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்திற்கு எதிராகப் புகார் அளித்தார்.

ஒரு வழியாக இந்த பிரச்சனைக்கு இந்த நேரத்தில் தனது முதல் பதிலை ஃபோக்வேகன் நிறுவனத்தின் சார்பில் வந்தது. அவர் அளித்த பதிலில் ஸ்கோடா நிறுவனம் தினேஷ் குமார் அளித்த புகார் முற்றிலும் தவறானது மற்றும் அடிப்படை ஆதாரமற்றது என்றும், அவர் சர்வதேச அளவில் பெயர் பெற்ற ஒரு நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதற்காகவே இதைச் செய்துள்ளதாகக் கூறினர்.

தினேஷ் குமாரும் தான் கார் வாங்கியது முதல் அதை எமிஷன் கண்ட்ரோல் செய்தது, பிக்கப் குறைந்ததது, மோசமான சர்வீஸ் உள்ளிட்ட பல சம்பவங்களுக்கான விளக்கம் மற்றும் ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பித்து தன் தரப்பு வாதத்தை முன் வைத்தார். ஃபோக்ஸ்வேகன் தரப்பில் தினேஷ் குமார் காரின் இன்ஜினில் வரும் சத்தத்திற்கும் சாஃப்ட்வேர் அல்லது ஹார்டுவேரை அப்டேட் செய்ததற்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது முற்றிலும் உண்மைக்கு மாறானது என வாதாடினர்.

சுமார் 6 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் ஒரு தீர்வு கடந்த ஜனவரி 20ம் தேதி வழங்கப்பட்டது. அதில் தினேஷ் குமார் சாஃப்வேர் அப்டேட் அல்லது ஹார்டுவேர் அப்டேட் மூலமாகத் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டார். இதற்காக ஒரு துறை வல்லுநரின் சான்றைப் பெற்றிருக்கலாம். இது ஒருபுறம் இருக்க தினேஷ் குமார் சொல்லிய புகாரின்படி இந்த ரிப்பேர் பிரச்சனையைச் சரி செய்ய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தவறிவிட்டது. இதன் மூலம் தினேஷ்குமாருக்கு டீலர்ஷிப்பிலிருந்து மோசமான சர்வீஸ் வழங்கப்பட்டது உறுதியாகிறது.

இதனால் ஸ்கோடா ஆட்டோ. ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் பெங்களூருவில் உள்ள அதன் சர்வீஸ் சென்டர் மூலம் தினேஷ் குமார் காருக்கு ஏற்பட்ட அந்த பிரச்சனையை உடனடியாக இலவசமாகச் சரி செய்து கொடுக்க வேண்டும். மேலும் இதனால் குமாருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பாதிப்பிற்கு நஷ்டஈடாக ரூ10 ஆயிரமும், இந்த வழக்கிற்கான செலவிற்காக ரூ10 ஆயிரமும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், இந்த நஷ்டஈடை 30 நாட்களுக்குச் செலுத்த வேண்டும். கோர்ட் வழிகாட்டுதலின்படி இதுவே நடக்கவில்லை என்றால் கோர்ட் எதிர் தரப்பினருக்கு அபராதம் விதிக்கும் எனவும் உத்தரவிட்டது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 15, 2023, 12:20 [IST]
English summary
Court fined Volkswagen for owners complaints about the poor pickup in vento car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+