மாட்டு சாணத்தில் ஓடும் வாகனம்... விவசாயிகளின் கவலை எல்லாம் தீர போகுது!

பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து தப்பிக்க வைக்கும் விதமாக வெளிநாட்டு நிறுவனம் ஒன்று மாட்டு சாணத்தில் இயங்கும் வாகனம் ஒன்றை உருவாக்கி இருக்கின்றது. இந்த வாகனம் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெட்ரோல், டீசல் விக்கிற விலைக்கு பலர் தங்களுடைய சொந்த வாகனங்களை ஓரமாக ஒதுக்கிவிட்டு பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். ஒரு சிலர் அதிகம் மைலேஜ் தரும் வாகன பயன்பாட்டிற்கு மாறி இருக்கின்றனர். இதுமட்டுமில்லைங்க, பலர் இவற்றின் விலை எப்போது என்கிற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்த நிலையிலேயே இவற்றின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் கவலைப்படாதீங்க, பெருசா பைசாவை செலவழிக்காத வாகனங்களை நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம் என ஓர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாட்டு சாணத்தில் ஓடும் வாகனம்

இங்கிலாந்து நிறுவனம்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பென்னமன் (Bennamann) எனும் நிறுவனமே மாட்டு சாணத்தில் இயங்கும் வாகனத்தை உருவாக்கி இருக்கின்றது. இது ஓர் விவசாயம் சார்ந்த உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இதன் அடிப்படையிலேயே மாட்டு சாணத்தில் இயங்கும் டிராக்டரை பென்னமன் உருவாக்கி இருக்கின்றது. இதுவே, உலகின் முதல் மாட்டு சாணத்தில் இயங்கும் வாகனம் ஆகும். உலகில் வேறு எந்த வாகனமும் மாட்டு சாணத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஃப்யூஜிடிவ் மீத்தேன்

நிறுவனம் மாட்டு சாணத்தில் இருந்து உற்பத்தி ஆகும் ஃப்யூஜிடிவ் மீத்தேனால் இயங்கும் மோட்டாரையே உருவாக்கி இருக்கின்றது. இந்த மோட்டார் 270 பிஎச்பி திறனை வெளியேற்றக் கூடியது. இதனை புதிய ஹாலண்ட் டி7 டிராக்டரில் நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது. தற்போது விவசாய பணிக்கு பயன்படுத்தப்படும் பெரும்பாலான வாகனங்களில் டீசல் மோட்டாரே பயன்படுத்தப்படுகின்றது. அவை அதிக கார்பனை வெளியேற்றக் கூடியதாக இருக்கின்றன. இந்த நிலையை மாற்றி அமைக்கும் விதமாகவே பென்னமன் நிறுவனம் டி7 திரவ மீத்தேனில் இயங்கும் டிராக்டரை உருவாக்கி இருக்கின்றது.

மாட்டு சாணத்தில் ஓடும் வாகனம்

கார்பனே இல்லாத நாடு

இது விவசாய தொழிலை டி-கார்பனைஸ் செய்ய உதவும் என நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்து இருக்கின்றது. இங்கிலாந்து அரசு நாட்டில் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதில் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் விவசாய பிரிவையும் அது மாசற்றதாக மாற்றும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் விவசாய வாகனங்களினால் 2,500 டன்னுக்கும் அதிகமான அளவில் கார்பன் உமிழ்வு ஏற்படுவதாக இங்கிலாந்து அரசு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

500 டன்னாக குறைப்பதே இலக்கு

இதனை 500 டன்களாக குறைக்கும் முயற்சியிலேயே அரசு தற்போது களமிறங்கி அந்நாட்டின் உயர் அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்து உள்ளது. டீசலைக் காட்டிலும் குறைவான அளவே மாசை வெளயேற்றக் கூடியதாக மீத்தேன் இருப்பதாக கூறப்படுகின்றது. எனவேதான் திரவ மீத்தேன் வாயுவால் இயங்கும் வாகனங்களை ஊக்குவிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கிலாந்து அரசாங்கம் நெட் ஜீரோ கார்பன் எனும் திட்டத்தை நோக்கி நகர தொடங்கி இருக்கின்றது.

மாட்டு சாணத்தில் ஓடும் வாகனம்

அதாவது, மாசே இல்லாத நாடாக இங்கிலாந்தை மாற்றும் முயற்சியில் அது களமிறங்கி இருக்கின்றது. 2050 ஆம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்ட அது திட்டம் போட்டு இருக்கின்றது. இங்கிலாந்தில் மட்டுமில்லைங்க இந்தியாவிலும் இதேமாதிரியான ஓர் முயற்சியே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக சிஎன்ஜி, ஆட்டோ எல்பிஜி, மின்சாரம் மற்றும் ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் வாகனங்களை ஊக்குவிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

100 சதவீதம் வரி குறைப்பு

குறிப்பாக, பூஜ்ஜியம் மாசை உமிழும் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு மானியம் போன்ற சிறப்பு சலுகைகளை செயலாற்றி வருகின்றது. இதுமட்டுமின்றி அந்தந்த மாநில அரசுகளும் தங்களின் பங்காக மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு மானியம் மற்றும் வரி சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் சிறப்பு வரி தள்ளுபடி செய்யப்படுகின்றது.

என்ன பலன்?

கடந்த ஆண்டோடு இந்த திட்டம் நிறைவடைந்துவிட்ட நிலையில், சமீபத்திலேயே அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 100 வரி தள்ளுபடியை நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு தெரிவித்தது. இந்த அறிவிப்பினால் மாநிலத்தில் மின்சார வாகனங்களை வாங்க இருப்பவர்களுக்கு சூப்பரான பலன் கிடைக்க இருக்கின்றது. வரி தள்ளுபடியால் புதிய மின்சார வாகனங்களின் விலை 8 சதவீதம் குறைய இருப்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே விரைவில் இன்னும் பலமடங்கு மின்சார வாகனங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cow dung powered tractor
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X