ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேணாம்! மாட்டு சாணத்தில் இயங்கும் டிராக்டரை தயாரித்து சாதனை!

இன்று உலகம் முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருளை நோக்கி உலகம் நகர வேண்டும் என்ற நிலையில் இருக்கிறது. கச்சா எண்ணெய்யிலிருந்து தான் பெட்ரோல் டீசல்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அது எத்தனை ஆண்டுகளுக்கு இருக்கும் என்ற எண்ணமும், அதற்காகப் பிற நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணமும், பெட்ரோல் டீசல் பயன்படுத்துவதால் ஏற்படும் மாசு அதிகமாக இருக்கிறது என நிரூபணமானதாலும் இந்த மாற்றம் திட்டமிடப்பட்டுள்ளது.

பல நாடுகள் இப்படியாக மாற்ற எரிசக்தியை நோக்கி தங்கள் கொள்கைகளை மாற்றத் துவங்கிவிட்டனர். உதாரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மற்றும் தயாரிப்பை ஊக்குவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்நிலையில் நியூ ஹாலேண்ட் அக்ரீகல்சர் என்ற நிறுவனம் நியூ ஹாண்ட் டி6 என்ற மீத்தேனில் இயங்கும் டிராக்ரை தயாரித்துள்ளது.

ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேணாம்! மாட்டு சாணத்தில் இயங்கும் டிராக்டரை தயாரித்து சாதனை!

அது என் மீத்தேனில் இயங்கும் டிராக்டர்? இந்த மீத்தேனிற்கு எங்கே போவது என நீங்கள் யோசிப்பது புரிகிறது. மீத்தேனை, விவசாயிகள் கழிவுகள் மற்றும் மாட்டு சாணம் மூலம் விவசாயிகளே உற்பத்தி செய்து கொள்ள முடியும். இதற்காக மாட்டு சாணத்தைப் போட்ட வைக்க டிராக்டரில் 185 லிட்டர் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 75 பசுக்களின் சாணத்தைப் போட்டு வைக்க முடியும். இனி இன்ஜின் 180 எச்பி பவரை வெளிப்படுத்தும்.

இந்த டிராக்டர் இந்த சாணத்திலிருந்து வெளியேறும் மீத்தேன் வாயு மூலம் இயங்குகிறது. இந்த வாகனம் மாசுவாக 62 சதவீத நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் 15 சதவீத கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றை வெளியிடும் எனத் தெரியவந்துள்ளது. இந்த டிராக்டரை ரீஃபில் செய்ய 10 நிமிடங்கள் தான் ஆகும். இதனால் விவசாயிகள் இதற்கு பெட்ரோல்/டீசல் எனச் செலவு செய்ய வேண்டாம். செலவே இல்லாமல் இயங்கும் டிராக்டராக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டிராக்டரை சிஎன்எச் இன்ஸ்ட்ரீயல் நிறுவனமும், பென்னமேன் லிமிடெட் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனமும் சேர்ந்து மீத்தேனில் இயங்கும்படியாக இந்த டிராக்ரை உருவாக்கியுள்ளது இதன் படி மீத்தேன் வாயுவைக் குறிப்பிட்ட அளவிற்குக் குளிர்வித்து அதைத் திரவ வடிவிற்கு மாற்றி அதை இன்ஜினில் பயன்படுத்துகின்றனர். இயற்கையான விவசாயம் செய்ய இயற்கையைக் கெடுக்காத எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.

சிஎன்எச் நிறுவனம் சீஃப் எக்ஸிக்யூட்டிவ் அதிகாரியான ஸ்காட் ஒயின் என்பவர் ஒரு மிடியம் ஃபார்மில் இந்த டிராக்டருக்கு தேவையான அளவை விட அதிக அளவிலான மீத்தேனை தயாரிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். இந்நிறுவனம் தற்போது இந்த டிராக்டர்களை ஐரோப்பாவில் உள்ள பால் உற்பத்தி மற்றும் விவசாயம் ஆகியவற்றைச் சேர்ந்து செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிராக்டர் இந்தியாவிற்கு வந்தால் விவசாயிகளுக்கு இது மிகப் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக பால் மற்றும் நில விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இந்த டிராக்டர் நிச்சயம் உதவியாக இருக்கும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Article Published On: Monday, March 20, 2023, 14:20 [IST]
English summary
Cow dung powered tractor will cost zero expense for fuel for farmers
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+