சரளமான பயன்பாட்டில் மாட்டு சாணத்தில் ஓடும் வாகனங்கள்... பேசமா இந்த ஊருக்கு கிளம்பி போயிடலாமா!!

உலகமே பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எரிபொருளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் அடுத்ததாக உலக அளவில் மாட்டுச் சாணத்தினால் தயாரிக்கப்படும் மீத்தேன் வாயு வாகன உலகில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக வாகன உற்பத்தியாளர்களும் மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் மீத்தேனில் இயங்கும் வாகனங்களை உருவாக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலில் ஏற்கனவே ஓர் நாட்டில் மாட்டு சாணத்தினால் தயாரிக்கப்பட்ட மீத்தேன் வாயுவில் இயங்கும் வாகனம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாட்டு சாணம்

ஃப்ரான்ஸ் நாட்டில் உள்ள ஓர் தொழுவத்திலேயே மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் மீத்தேனில் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த தொழுவத்தில் பயன்படுத்தப்படும் அனைத்தும் வாகனங்களும் மாட்டுச் சாண மீத்தேனில் மட்டும் இயங்கும் வாகனங்கள் ஆகும். பெர்ட்ரண்ட் குவரின் (வயது 59) என்பவருக்கு சொந்தமானதே இந்த தொழுவம் ஆகும்.

முதியவர் பிரிட்டைன் மற்றும் நெதர்லநாந்தில் இருந்து பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக முழுமையாக மாட்டுச் சாண மீத்தேன் வாகன பயன்பாட்டிற்கு மாறி இருக்கின்றார். இவர் அமைத்திருக்கும் மாட்டு தொழுவம் தானியங்கி முறையில் இங்குகின்றது. இங்கு மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளுக்காக பன்முக வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மாட்டு சாணம்

அந்த வாகனங்கள் அனைத்தும் மாட்டு சாண மீத்தேனில் இயங்கக் கூடியவை ஆகும். இத்தாலியன்-அமெரிக்க நிறுவனமான நியூ ஹாலண்ட் கடந்த ஆண்டே மாட்டு சாணத்தில் இயங்கும், அதாவது, பயோ என்ஜிவி-இல் இயங்கும் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துவிட்டது. இது விவசாயம் மற்றும் விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படக் கூடிய வாகனங்களை பயோ என்ஜிவி ரகத்தில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த வாகனங்கள் டீசலைக் காட்டிலும் குறைவான மாசையே ஏற்படுத்தும். அதுமட்டுமில்லைங்க, டீசலைவிட பல பல மடங்கு குறைவான விலையைக் கொண்டதாக இருக்கின்றது. இத்தகைய நிலையத்தை அந்நாட்டு விவசாயிகள் சங்கம் பிரத்யேகமாக உருவாக்கி தங்களின் வாகனங்களுக்காக அவற்றை பயன்படுத்தி வருகின்றனர். வெகுவிரைவில் ஜாம்பவான் ஆயில் உற்பத்தி நிறுவனங்களான என்ஜீ மற்றும் டோடல் எனெர்ஜீஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இதுமாதிரியான மீத்தேன் விற்பனையில் களமிறங்க இருக்கின்றன.

இதற்கான பணியில் ஏற்கனவே ஜாம்பவான்கள் நிறுவனங்கள் களமிறங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஃப்ரான்ஸில் இயங்கிக் கொண்டிருக்கும் பயோ என்ஜிவி நிலையங்களுக்கான மாட்டுச் சாணங்கள் அருகில் இருக்கும் மாட்டுத் தொழுவத்தில் இருந்து நேரடியாக சேகரிக்கப்படுகின்றது. விவசாயிகள் மற்றும் மாட்டு பண்ண உரிமையாளர்கள் தங்களுடைய தொழுவத்தில் மாட்டுச் சாணங்களை சேகரிப்பதற்கென தனி இடத்தை ஒதுக்கி வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இங்கு தயாரிக்கப்புடம் சுத்தமான மீத்தேன் வாகனங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும், மீதம் உள்ள வாயுவை மின்சாரம் தயாரிக்க எரிக்கப்படுவதாகவும் பெர்ட்ரண்ட் குவரின் கூறிய இருக்கின்றார். ஃப்ரான்ஸ் நாட்டின் குறிப்பிட்ட சில கிராம பகுதிகளில் மட்டும் மாட்டு சாண மீத்தேனில் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன. விரைவில் இதை விரிவாக்கம் செய்ய அரசும், விவாசய கூட்டமைப்புகளும் திட்டமிட்டுளளன.

இப்போதைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டர் ஒன்று ரூ. 100 க்கும் அதிகமான விலையிலும், டீசல் ரூ. 90க்கும் அதிகமான விலையிலும் விற்கப்படுகின்றது. இதன் விளைவாக சிலர் தங்களின் வருமானத்தின் பெரும் பங்கை வாகனங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மாட்டு சாணத்தால் ஓடும் வாகனம் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி அனைவரையும் மூழ்க செய்திருக்கின்றது.

Article Published On: Tuesday, February 28, 2023, 17:45 [IST]
English summary
Cow dung powered vehicle france
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+