ஹூண்டாய் பிராண்டில் எல்லாரும் போட்டிப் போட்டு வாங்கும் கார்...!! சேல்ஸ் நம்பரை நிறுத்தவே முடியல!

ஹூண்டாய் (Hyundai), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யக்கூடிய 2வது பெரிய நிறுவனம். முதலிடத்தில் மாருதி சுஸுகி உள்ளது. இத்தகைய நிறுவனத்தில் இருந்து தற்சமயம் மொத்தம் 11 விதமான கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் கடந்த மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன என்பது குறித்த விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 11 ஹூண்டாய் கார்களில் வழக்கம்போல் கடந்த அக்டோபர் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தை கிரெட்டா பிடித்துள்ளது. கடந்த மாதத்தில், இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை 55,128 ஆகும். இதில் 13,077 கார்கள் கிரெட்டா ஆகும்.

creta most selling hyundai car

அதாவது, இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் கடந்த மாத மொத்த விற்பனையில் 23.72% கிரெட்டா பங்கு வகிக்கிறது. இத்தனைக்கும் கிரெட்டா கடைசியாக, கடந்த 2020ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில்தான் பெரிய அளவில் அப்டேட் செய்யப்பட்டது. அதன்பின், இத்தனை வருடங்களில் சிறு சிறு அப்டேட்கள் மட்டுமே கிரெட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், கடந்த மாதத்திலும் சுமார் 13,077 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

2022 அக்டோபர் மாதத்தில் 11,880 கிரெட்டா கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த மாதத்தில் 1,197 கிரெட்டா கார்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன. அதேபோல், இதற்கு முந்தைய 2023 செப்டம்பர் மாதத்திலும் 12,717 கிரெட்டா கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இதன்படி, செப்டம்பரை காட்டிலும் அக்டோபரில் 360 கிரெட்டா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

creta most selling hyundai car

கிரெட்டாவுக்கு அடுத்து, கடந்த மாதத்தில் ஹூண்டாய் பிராண்டில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக 2வது இடத்தை பிடித்திருப்பது வென்யூ ஆகும். கடந்த மாதத்தில் மொத்தம் 11,581 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கிரெட்டாவை காட்டிலும் அளவில் சிறியதான, ஹூண்டாயின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான வென்யூ 2022 அக்டோபர் மாதத்தில் 9,585 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தது.

இதன்படி பார்க்கும்போது, கடந்த மாதத்தில் 1,996 வென்யூ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றாலும், 2023 செப்டம்பர் மாதத்தில் வென்யூ கார்களின் விற்பனை எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்திருந்தது. கிரெட்டா, வென்யூ இவை இரண்டிற்கு அடுத்து 3வது இடத்தில் புத்தம் புதிய ஹூண்டாய் காரான எக்ஸ்டர் உள்ளது. வென்யூவை காட்டிலும் அளவில் சிறிய காரான எக்ஸ்டர் கடந்த 2023 ஜூலை மாதத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

creta most selling hyundai car

கடந்த மாதத்தில் மொத்தம் 8,097 எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு முந்தைய 2023 செப்டம்பர் மாதத்தில் இதனை காட்டிலும் 550 எக்ஸ்டர் கார்கள் அதிகமாக 8,647 எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 4வது மற்றும் 5வது இடங்களில் ஐ20 மற்றும் ஐ10 நியோஸ் கார்கள் உள்ளன.

இவை இரண்டை கடந்த மாதத்தில் முறையே 7,212 மற்றும் 6,552 யூனிட்கள் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இவை இரண்டின் விற்பனையும் 2022 அக்டோபரை காட்டிலும் கடந்த அக்டோபரில் கணிசமாக குறைந்துள்ளது என்றாலும், 2023 செப்டம்பரை காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இவற்றிற்கு அடுத்து 6வது, 7வது மற்றும் 8வது இடங்களில் முறையே அவ்ரா (4,096), வெர்னா (2,313) மற்றும் அல்கஸார் (1,837) உள்ளன.

creta most selling hyundai car

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் சற்று உற்று கவனீத்தீர்கள் என்றால், மேற்கூறப்பட்ட லிஸ்ட்டில் முதல் 3 இடங்களை எஸ்யூவி ரக கார்கள் இருப்பதை அறியலாம். இதில் இருந்து இந்திய மார்க்கெட்டில் எஸ்யூவி கார்களுக்கு எந்த அளவிற்கு தேவை உள்ளது என்பதை புரிந்துக் கொள்ளலாம். இதனாலேயே, இந்தியாவின் நம்பர் ஒன் எஸ்யூவி கார் மேக்கராக உருவெடுக்க தொடர்ந்து ஹூண்டாய் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 14, 2023, 23:11 [IST]
English summary
Creta top most selling car in hyundai check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X