லாரி போன்ற காரை பொது சாலையில் ஓட்டி வந்த கிரிக்கெட் வீரர்.. ரொம்ப ரொம்ப ரேர் கார் இது.. தோனிகூட வச்சிருக்காரு!
முற்றிலும் வித்தியாசமான உருவம் கொண்ட கார் மாடல்களில் நிஸான் நிறுவனத்தின் 1-டன் வாகனமும் ஒன்று. இந்த வாகனத்தை பிரத்யேகமாக மிலிட்டரி பயன்பாட்டிற்காகவே நிஸான் உருவாக்கியது. இப்போது இந்த கார் உற்பத்தியில் இல்லை. அதேவேளையில், ஒரு சில தனிப்பட்ட நபர்களின் பயன்பாட்டில் இப்போதும் இந்த கார்கள் இருக்கின்றன.
அதேவேளையில், நிஸான் 1-டன் காரை இந்தியாவில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக மிக குறைவே. விரல் விட்டு எண்ணும் அளவிற்கு குறைவான நபர்களே நிஸான் 1 டன் காரை தனி நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், மஹேந்திர சிங் தோனியும் இந்த காரை பயன்படுத்தி வரும் நபர்களில் ஒருவர் இருக்கின்றார்.

இவருடன் மற்றுமொரு கிரிக்கெட் விளையாட்டு வீரராக சூர்ய குமார் யாதவ் அண்மையில் இணைந்தார். ஆமாங்க, நிஸான் 1-டன் காரை இவரும் வாங்கி இருக்கின்றார். இந்த காரை அவர் வாங்கி ஒரு சில மாதங்களே ஆகின்றன. வெளியுலகிற்கு இந்த காட்டாமலே இருந்து வந்தநிலையில் தற்போது நிஸான் 1-டன் காருடன் சூர்ய குமார் யாதவ் சாலையில் வலம் வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
இந்த காரில் அவர் பயணிப்பது இதுவே முதல் முறையாகும். இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் லாரி போன்ற உருவம் கொண்ட அந்த காரில் சூர்ய குமார் யாதவ் வலம் வரும் காட்சிகள் வெளியாகுவது இதுவே முதல் முறை ஆகும். அந்த கார் சாலையில் வலம் வரும்போது மற்ற வாகனங்களுடன் ஒப்பிடுகையில், ஹல்க் உடன் பிற சூப்பர் ஹீரோக்கள் வலம் வருவதைப் போல் காட்சியளிக்கின்றது.

குறிப்பாக பிற கார்களை சிறிய தோற்றம் கொண்ட வாகனமாக தன்னுடைய பிரமாண்ட தோற்றத்தின் வாயிலாக நிஸான் 1 டன் மாற்றி இருக்கின்றது. இந்த தோற்றத்தின் காரணமாக சாலையில் இருந்த பலரின் கவனத்தை அந்த கார் சம்பாதித்து இருக்கின்றது. இத்தகைய வாகனத்திலேயே சூர்ய குமார் யாதவ் தற்போது வலம் வந்திருக்கின்றனர்.
ஃப்ளூரசன்ட் பச்சை எனும் கண்ணை பறிக்கும் நிறம் கொண்ட நிஸான் 1-டன் காரையே சூர்ய குமார் யாதவ் பயன்படுத்தி வருகின்றார். இந்த கார் மிகவும் முரட்டுத் தனமான தோற்றம் கொண்டதாக இருக்கின்றது. ஆஃப்-ரோடு பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வாகனம் என்பதால் இந்த மாதிரியான கடுமையான தோற்றம் நிஸான் 1 டன்னிற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.
நிஸான் 1 டன் காரில் 3.9 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 264 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 3 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் வசதி கொண்ட வாகனமாகவும் நிஸான் 1 டன் இருக்கின்றது.
இந்த அம்சங்கள் அனைத்தும் ஸ்டாண்டர்டு அம்சமாக நிஸான் 1 டன்னில் வழங்கப்படுபவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மட்டுமின்றி சூர்ய குமார் யாதவ் இடத்தில் இன்னும் பல சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் போன்ற நவீன மற்றும் சொகுசு வசதிகள் நிறைந்த கார்களும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.
இந்த பென்ஸ் கார் மணிக்கு 238 கிமே வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த சூப்பர் ஃபாஸ்ட் வேகத்திற்காக சொகுசு காரில் 3 லிட்டர் வி6 டர்போசார்ஜட் டீசல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 326 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
இதேபோல் ஆடம்பர அம்சங்களை கொண்டிருப்பதிலும் இந்த வாகனம் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. இத்தகைய அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே சூர்ய குமார் யாதவ் இந்த காரை பயன்படுத்தி வருகின்றார். சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதத்திலேயே இந்த காரை அவர் வாங்கினார். இதன் மதிப்பு ரூ. 2.15 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
நிஸான் 1 டன் மிக மிக அரிய வகை வாகனம் ஆகும். ஆகையால், இதன் விலையும் பல மடங்கு அதிகமாக உள்ளது. ரூ. 1 கோடிக்கும் அதிக மதிப்பைப் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. நீண்ட காலம் உழைக்கும் திறன் கொண்டது. கடந்த காலங்களில் தலாய் லாமா போன்ற உலகின் முக்கிய பிரமுகர்களும் இந்த காரை பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








