நவீன கார்ல உங்க தகவல்களை எல்லாம் திருடி விற்க கூட வாய்ப்பு இருக்குது! மத்திய அரசு போட்ட திடீர் சட்டம்!

இந்தியாவில் உள்ள பயணிகள் மற்றும் கமர்ஷியல் வாகனங்களுக்கான சைபர் செக்யூரிட்டி சாப்ட்வேரை ஒரே மாதிரியாக உருவாக்க வேண்டும் என மத்திய அரசு புதிய சட்ட வரைவு ஒன்றை தயார் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இன்றைய தொழில்நுட்ப உலகில் சைபர் செக்யூரிட்டி என்ற விஷயம் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் முறையில் தகவல்கள் திருடப்பட்டாலும் அல்லது எளிதாக ஆக்சஸ் செய்யும்படி இருந்தாலும், அது சில ஹக்கர்கள் கையில் சென்று அவர்கள் இதை தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள். இதை தடுக்க சைபர் செக்யூரிட்டியை அதிகப்படுத்த பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.

cyber security system for cars

தற்போது வரை வாகனங்களில் பொருத்தப்படும் தொழில்நுட்ப அம்சங்களில் சைபர் செக்யூரிட்டியை அந்தந்த வாகன தயாரிப்பு நிறுவனமே முடிவு செய்கிறது. அந்த நிறுவனம் வழங்கும் சைபர் செக்யூரிட்டி தான் இனி இப்பொழுது உள்ள வாகனங்களில் இருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு இந்த சைபர் செக்யூரிட்டி விஷயத்தை முக்கியமான பிரச்சினையாக கையில் எடுத்துள்ளது.

அதன்படி கடந்த ஜூலை மாதம் ஆட்டோமொட்டிவ் இண்டஸ்ட்ரி ஸ்டாண்டர்ட் என்ற அமைப்பு மூலம் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் இந்தியாவில் விற்பனையாகும் பயணிகள் மற்றும் கமர்ஷியல் வாகனங்களில் பொதுவான சைபர் செக்யூரிட்டி மற்றும் மேலாண்மை சிஸ்டத்தை பின்பற்ற வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் செயல்படும் எம் மற்றும் என் ரக வாகனங்களில் இந்த செக்யூரிட்டியை பொருத்தினால் தான் இனி அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

cyber security system for cars

அதன்படி தற்போது மத்திய அரசு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் சைபர் செக்யூரிட்டியை கட்டமைக்கும் போது எந்தெந்த விஷயங்களை எல்லாம் கட்டாயம் செய்ய வேண்டும் என்ற விரிவான சட்ட வரைவை தயார் செய்துள்ளது. இதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களும் குறைந்தபட்ச செக்யூரிட்டி அம்சம் கொண்ட வாகனமாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கனெக்டெட் கார் தொழில்நுட்பம் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. இது வெறும் கார் குறித்த தகவல்களை மட்டுமல்லாமல் கார்களில் பயன்படுத்தப்படும் என்டர்டெயின்மென்ட் சாதனங்கள் குறித்த தகவல்கள், மேப் குறித்த தகவல்கள், போன் பேச்சு குறித்த தகவல்களை எல்லாம் டிராக் செய்யும் அம்சம் கொண்டதாக இருக்கிறது. இந்த தகவல்கள் எல்லாம் ஹேக் செய்யப்பட்டால் தனி நபரின் தகவல்கள் எல்லாம் திருடப்பட வாய்ப்புள்ளது.

cyber security system for cars

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் நடந்த ஆய்வின் படி கார் தயாரிப்பு நிறுவனங்களில் 84 சதவீதம் பேர் இந்த தரவுகளை எல்லாம் சேவை வழங்குனர்கள் டேட்டா புரோக்கர்கள் உள்ளிட்ட சிலருக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். அதே நேரம் 76 சதவீதம் பேர் இந்த தரவுகளை வெளியில் உள்ள தரவு மையத்திற்கு விற்பனை செய்கின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.

இதில் காருக்கள் நடக்கும் தனிப்பட்ட விஷயங்களையும் கருவிகள் கண்காணித்து தரவுகளாக சேமித்து வைப்பதாக கூறப்படுகிறது. இதில் முக்கியமாக டெஸ்லா நிறுவனம் தான் மிகப்பெரிய அளவில் இதை செய்து வருவதும் இதில் தெரிய வந்துள்ளது. இரண்டாவது இடத்தில் நிஸான் நிறுவனம் இருக்கிறது. இந்தியாவில் இதுவரை அப்படியான விஷயங்கள் நடப்பதாக தெரியவரவில்லை.

ஆனால் இந்திய நிறுவனங்களும் கார்களில் உள்ள தகவல்களை தனிநபர்களுக்கு விற்பனை செய்தால் அதில் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதால் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தற்போது சட்ட விரைவாக மட்டுமே தயார் செய்யப்பட்டுள்ளது. இதுவரை அமலுக்கு வரவில்லை. இது குறித்த சட்ட நகர்வுகள் தற்போது நடக்கிறது.

இது மத்திய அரசின் ஒப்புதல் அனுப்பப்பட்டு அங்கு ஒப்புதல் பெறப்பட்டவுடன் பின்னர் இது மோட்டார் வாகன சட்டத்தில் இணைக்கப்படும். அப்படி இணைக்கப்படும் பட்சத்தில் வாகன தயாரிப்பாளர்கள் இனி அவர்கள் வாகனங்களுக்கான அனுமதி பெறும் போது சைபர் செக்யூரிட்டி குறித்த சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் மூலம் இந்தியாவில் உள்ள வாகனங்களில் ஒரே விதமான சைபர் செக்யூரிட்டி பாதுகாப்பு இருக்கும். அதே நேரம் கார் வாங்கும் மக்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு உணர்வுடன் கார்களை வாங்க முடியும். கார்களில் உள்ள தொழில்நுட்ப அம்சங்கள் மனிதர்களின் தகவல்களை தரவுகளாக மாற்றி அதை மற்றவர்களுக்கு கொடுப்பது நிச்சயம் ஆபத்தான விஷயம் தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழில்நுட்ப வளர்ச்சியை என்பது எந்த அளவிற்கு மனிதர்களுக்கு தேவையாக இருக்கிறதோ அதே அளவுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு விஷயமாகவும் உள்ளது. இதனால் தகவல் தொழில்நுட்ப அம்சத்தில் சைபர் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. மத்திய அரசு இதை ஆரம்ப கட்டத்திலேயே கையில் எடுத்து இதை ஒழுங்குபடுத்துவதன் மூலம் மிகப்பெரிய பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

Article Published On: Tuesday, November 14, 2023, 10:57 [IST]
English summary
Cyber security system for cars ais propose to protect data privacy
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X