இந்திய நிறுவனத்தின் கை வண்ணத்தால் ரோல்ஸ் ராய்ஸையே மிஞ்சும் அழகிற்கு மாறிய இன்னோவா! காரா இல்ல கப்பலா!..

பிரபல கார் மாடிஃபிகேஷன் நிறுவனமான டிசி டிசைன் (DC Design), அதன் கை வண்ணத்தில் மாடிஃபை (Modification) செய்யப்பட்ட கார் ஒன்றின் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு இருக்கின்றது. இந்த படங்கள் கார் காதலர்களைக் குறி வைக்கும் வகையில் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.

அப்படி என்ன சிறப்பு மாற்றங்களை இந்த காரில் டிசி டிசைன் செய்திருக்கின்றது என்கிற விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம். இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் முன்னணி கார் மாடிஃபிகேஷ் நிறுவனமே டிசி டிசைன் ஆகும்.

Modified toyota innova interior

இந்த நிறுவனம் மிக மிக விலை குறைவான கார்களைக் கூட சொகுசு வசதிகள் நிறைந்த கார்களுக்கு இணையானதாக மாற்றும் திறன் கொண்டது. இதன் தனித்துவமான திறனால் கடந்த காலங்களில் பட்ஜெட் விலை கார்கள் பல ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் மாற்றப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையிலேயே சமீபத்தில் அந்நிறுவனம் மிக மிக விலை உயர்ந்த கார்களுக்கு இணையாக மாடிஃபை செய்யப்பட்ட வாகனம் ஒன்றின் படம் இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. அது தற்போது மாடிஃபை செய்திருப்பது டொயோட்டாவின் இன்னோவா (Toyota Innova) ஆகும். இந்தியாவின் புகழ்பெற்ற எம்பிவி ரக கார்களில் இதுவும் ஒன்றாகும்.

Modified toyota innova rear seat

இந்த எம்பிவி காரையே டிசி டிசைன் தற்போது சொகுசு கப்பலையே மிஞ்சும் வகையில் வேற லெவலுக்கு மாடிஃபை செய்து இருக்கின்றது. இதை வெளிக்காட்டும் விதமாகவே மாடிஃபிகேஷன் செய்யப்பட்டு இருக்கும் இன்னோவாவின் படங்கள் தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றன. நிறுவனத்தின் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக முன் பக்கத்தை வேறு பகுதியாகவும், பின் பக்கத்தை வேறு பகுதியாகவும் பிரித்திருப்பது இருக்கின்றது.

ஓர் வழக்கமான டொயோட்டா இன்னோவா காரில் டிரைவருடன் சேர்த்து முன் பக்கத்தில் இருவரும், நடு வரிசை இருக்கையில் மூவர் மற்றும் கடைசி (மூன்றாவது) வரிசை இருக்கையில் இருவர் (தேவைப்பட்டால்) மூவர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். இத்தகைய ஓர் இட வசதிக் கொண்ட காரையே வெறும் நான்கு பேர் மட்டுமே பயணிக்கும் காராக டிசி டைசின் மாடிஃபை செய்திருக்கின்றது.

Modified toyota innova mini fridge

முன்னதாக நாங்கள் கூறியதை போல் முன்பக்கம் மற்றும் பின் பக்கம் இரண்டு அரைகளாக இந்த கார் பிரிக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், அதிக பிரைவேசி தற்போது பின்பக்கத்திற்கு கிடைத்து இருக்கின்றது. இவ்வாறு பிரிப்பதற்காக டிசி டிசைன் ஓர் பெரிய திரையை சேர்த்து இருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, இந்த பின் பக்க பயணிகள் மிகவும் லக்சூரிய பயண அனுபவத்தை வழங்கும் விதமாக மிருதுவான இருக்கைகள், ஜன்னல்களை முழுவதுமாக அடைத்துக் கொள்ளும் வசதி என ஏகப்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, பயணத்தின்போது ஜாலியாக கூல் ட்ரிங்கை என்ஜாய் செய்துக் கொண்டே பயணிப்பதற்கு ஏதுவாக சிறிய குளிர்சாதன பெட்டி இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Modified toyota innova screen

இதில், நான்கு டின் பானங்களை வைத்துக் கொள்ள முடியும். மேலும், இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் இருக்கையை மெத்தையைபோல் நன்கு சாய்த்துக் கொள்ள முடியும். குட்டி தூக்கம் என்ன பெரிய தூக்கமே இந்த இருக்கைகளில் போட்டுக் கொள்ள முடியும். இத்துடன், பிரீமியம் டிராவல் அனுபவத்தை வழங்குவதற்காக தரை மற்றும் ரூஃப் ஆகிய இரண்டிலும் எல்இடி லைட்டுகளை டிசி டிசைன் இந்த காரில் வழங்கி இருக்கின்றது.

இந்த லைட்டுகள் பார்ட்டி செய்துக் கொண்டே டிராவல் செய்யும் அனுபவத்தை வழங்கும். இதுபோன்று இன்னும் பல தரப்பட்ட அம்சங்களை இந்த டொயோட்டா இன்னோவா காரில் டிசி டிசைன் வழங்கி இருக்கின்றது. லக்சூரி கார் பிரியர்களை இந்த வெகுவாக கவரும் வகையில் இந்த மாற்றங்கள் அமைந்திருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிசி டிசைன் டொயோட்டா காரின் உட்பக்கத்தில் மட்டுமே மாடிஃபிகேஷன் வேலைகளை செய்திருக்கின்றது. அதன் வெளிப்புறத்தில் பெரிய அளவில் மாற்றங்களை செய்யவில்லை. இதேபோல் எஞ்ஜின் விஷயத்திலும் எந்த மாற்றத்தையும் நிறுவனம் செய்யவில்லை என கூறப்படுகின்றது. இருப்பினும், நிறுவனத்தின் மாடிஃபிகேஷனால் இன்னோவா தற்போது லக்சூரி கப்பலையே மிஞ்சும் அளவிற்கு மிக சூப்பரானதாக மாறி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 5, 2023, 8:29 [IST]
English summary
Dc design modified toyota innova like luxury car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X