ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்டு அம்பாஸிடர் இந்த நடிகையா? இந்த காரை வாங்க கூட்டம் குவிய போகுது!
நடிகை தீபிகா படுகோனே ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்டு அம்பாஸிடராக மாறியுள்ளார். ஏற்கனவே இந்நிறுவனத்திற்கு ஷாருக்கான் பிராண்ட் அம்பாஸிடராக கடந்த 20 ஆண்டுகள் இருந்து வரும் நிலையில் தற்போது அவருடன் கூடுதலாக தீபிகா படுகோனேவும் பிராண்ட் அம்பாஸிடராக மாறியுள்ளார். ஹூண்டாய் நிறுவனத்தின் அடுத்த வெளியீடு இவர் மூலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெரிய பிராண்டுகள் தங்கள் பிராண்டுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க மக்கள் மத்தியில் பிரபலமாஅம்பாஸிடக உள்ள நபர்களை தங்கள் பிராண்டுக்கு அம்பாஸிடராக வைத்திருப்பார்கள். இப்படியாக ஹூண்டாய் நிறுவனம் ஷாருக்கான் கடந்த 20 ஆண்டுகளாக அந்நிறுவனத்தின் அம்பாஸிடராக வைத்துள்ளது. ஒரு நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாஸிடராக மாற வேண்டும் என்றால் அவர்கள் மிகப்பெரிய அளவில் மக்களிடம் பிரபலமாக இருக்க வேண்டும்.

20 ஆண்டுகளாக ஹூண்டாய் கார்களுக்கு ஷாருக்கான் தான் பிராண்ட் அம்பாஸிடராக இருந்துவரும் நிலையில் தற்போது அவரிடம் கூடுதலாக இந்தி நடிகை தீபிகா படுகோனேவும் பிராண்ட் அம்பாஸிடராக மாறியுள்ளார். வரும் ஜனவரி மாதம் 16ஆம் தேதி ஹூண்டாய் நிறுவனம் தனது 2024 கிரெக்டா காரை அறிமுகப்படுத்த உள்ள நிலையில் தற்போது இந்த தீபிகா படுகோனே குறித்த செய்தியும் வெளியாகி உள்ளது.
நாம் முன்னரே சொன்னதுபடி வரும் ஜனவரி மாதம் 16ஆம் தேதி ஹூண்டாய் நிறுவனம் தனது 2024 அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த காரில் கவனிக்கத்தக்க பல்வேறு மாற்றங்களை நிறுவனம் செய்துள்ளது. முக்கியமாக இதன் வெளிப்புறத் தோற்றத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக இந்த காரில் அடாஸ் தொழில்நுட்பம் பொருத்தப்படுகிறது. இதனால் இந்த காரின் விலை தற்போது விற்பனையாகும் விலையை விட சற்று அதிகமான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்நிறுவனத்தின் சிஓஓ தருண் கார்க்கு கூறும் போது: " நாங்கள் இந்தியாவின் திறமையான சர்வதேச இந்திய ஐகானாக இருக்கும் தீபிகா படுகோனே எங்கள் பிராண்ட் அம்பாஸிடராக சேர்ப்பதில் பெருமை கொள்கிறோம். அவரது கவனிக்கத்தக்க ஈர்ப்பு தன்மை மற்றும் அவரது இமேஜ் எங்கள் ஹுண்டாய் மோட்டார்க்கு சரியாக தேர்வாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.
திரைப்படம் மட்டுமல்லாமல் பல்வேறு விதமான மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தீபிகா படுகோனே சமூகத்தில் செயல்பட்டு உள்ளா.ர் முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறா.ர் இதன் மூலம் எங்கள் நிறுவனத்தின் சிறப்பான தயாரிப்புகளை இளைஞர்களுக்கு எடுத்து செல்ல தீபிகா மிக முக்கியமான கருவியாக இருப்பார்.

தீபிகா படுகோனே மூலம் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை எளிதாக சென்றடைய முடியும். முக்கியமாக நன்கு எதிர்காலத்தை நினைத்து செயல்படும் வாடிக்கையாளர்களை தேடி சென்று எங்கள் தயாரிப்புகள் அடைய தீபிகா படுகோனே மிக முக்கியமான காரணமாக இருப்பார். அடுத்த தலைமுறை ஆட்டோமொபைல் விரும்பிகளுக்கு தீபிகா படுகோனே மூலம் எங்கள் தயாரிப்புகளை கொண்டு செல்ல மிக வசதியாக இருக்கும்." என்று கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் தனது எக்ஸ்டர் எஸ்யூவி காருக்கு பிராண்ட் அம்பாஸிடராக கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியாவை நியமனம் செய்திருந்தது. தற்போது தீபிகா படுகோனே கை கொடுத்துள்ளது. இவர் வரும் ஜனவரி மாதம் அறிமுகமாக உள்ள ஹூண்டாய் கிரெக்டா ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

இந்தியாவில் சிறப்பான கார்கள் தயாரித்து வரும் நிறுவனமாக இருக்கிறது.மாருதி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்திற்கு என்று மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. இதனால் ஹூண்டாய் கார்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தீபிகா படுகோனே போன்ற சினிமா பிரபலங்கள் அந்த பிராண்டுக்கு அம்பாஸிடராக மாறியுள்ளது அந்த பிராண்டுக்கு நல்ல இமேஜை கொடுக்கும்.
ஹூண்டாய் கிரெக்டா அறிமுகமான பெட்டு அந்த செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகும் காராக இது மாற வாய்ப்புள்ளது. மக்கள் பலர் இந்த புதிய அப்டேட்டிற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தார்கள். ஹூண்டாய் கிரெட்டா கார் அறிமுகமாகும் போது நிச்சயம் அது மக்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து அதிக மக்கள் இந்த காரை வாங்க தூண்டுதலை ஏற்படுத்தும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு வாகனம் வைக்க வேண்டும் என்றால் அதற்கு விளம்பரம் முக்கியம். விளம்பரத்திலும் மக்களுக்கு பிடித்த நபர்கள் குறிப்பிட்ட வாகனத்தை விளம்பரம் செய்தால் சுலபமாக மக்கள் மத்தியில் அந்த வாகனம் நல்ல பெயரை பெரும். இப்படித்தான் ஹூண்டாய் நிறுவனம் தீபிகா படுகோனேவை தனது பிராண்ட் அம்பாசராக பற்றி தனது விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது.


Click it and Unblock the Notifications









