பழைய கார்களை பயன்படுத்தினால் இனி அபராதம் கிடையாது! நேரடியா அடிச்சு நொறுக்க முடிவு பண்ணீட்டாங்க!
டில்லியில் நீண்ட ஆண்டுகளாகக் காற்று மாசு பிரச்சனை இருக்கிறது. இதைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை தான் காற்று மாசுக்கு மிகப்பெரிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு அரசு தடைவிதித்தது.
இருந்தாலும் தடை செய்யப்பட்ட வாகனங்கள் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டு வந்தது. மத்திய அரசும் ஸ்கிராப்பிங் பாலிசியை கொண்டு வந்தது. இப்படியாக ஸ்கிராப்பிங் பாலிசியை கொண்டு வந்த பிறகும் மக்கள் தங்கள் வாகனங்களை ஸ்கிராப் செய்யாமல் தொடர்ந்து பழைய வாகனங்களைப் பயன்படுத்தி வந்தனர்.

இதற்காக பல்வேறு யுக்திகளையும் பயன்படுத்தினர். இந்நிலையில் கடந்தாண்டு சுப்ரீம் கோர்ட் டில்லியில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், மற்றும் 15 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் பதிவெண்களைப் பதிவிலிருந்து நீக்க உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் அவர்கள் தங்கள் காரின் பதிவு எண்ணை இழப்பார்கள்.
ஆர்சி புத்தகத்தை புதுப்பிக்க முடியாது. வெளிமாநிலத்திற்கு விற்பனை செய்ததாகக் கணக்குக் காட்டவும், முடியாது. டில்லியில் இயங்கி வரும் பல கார்கள் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்ததாகக் கணக்குக் காட்டப்பட்டுத் தொடர்ந்து டில்லியிலேயே இயக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுக்கவே கோர்ட் இப்படியாகப் பதிவை ரத்து செய்யும் உத்தரவைப் போட்டது.
இந்நிலையில் வாகன தணிக்கையில் பழைய வாகன மாட்டினால் அதன் பதிவு ரத்து செய்திருப்பதை போலீசார் உடனடியாக தெரிந்து கொள்ள முடியும் என்பதை இதைச் செய்தனர். இந்நிலையில் தொடர்ந்து பழைய வாகனங்கள் இயங்கப்பட்டு வந்து கொண்டே இருக்கிறது. அரசிடம் உள்ள பதிவின்படி மொத்தம் 53,78,514 வாகனங்கள் தகுதியிழந்த வாகனங்கள் டில்லியில் இயங்கி வருகிறது.
இதில் 80 ஆயிரம் வாகனங்கள் அரசுக்குச் சொந்தமான வாகனங்கள் அதை மாற்றப்பட்டு விட்டன. அல்லது பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் இப்படியாகப் பழைய வாகனங்களைத் தொடர்ந்து டில்லியில் பயன்படுத்துபவர்களைத் தடுக்க போலீசார் ஒரு புதிய யுக்தியைக் கையாண்டு வருகின்றனர்.
அதன்படி அவர்கள் வாகன சோதனையில் ஈடுபடும் போது இப்படியாகத் தகுதியிழந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதைப் பார்த்தால் உடனடியாக அந்த வாகனத்தை ஸ்கிராப்பிங் சென்டருக்கு கொண்டு சென்று ஸ்கிராப் செய்து விடுகின்றனர். முன்னர் இப்படியான வாகனத்தைப் பயன்படுத்தியதற்காக அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இனி தகுதியிழந்த வாகனங்களை இயங்கினால் அபராதம் எல்லாம் கிடையாது. அந்த வாகனம் உடனடியாக ஸ்கிராப்பிங் சென்டருக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்கிராப் செய்யப்பட்டு அதற்கான பணம் மற்றும் சான்று வாகனத்தின் உரிமையாளருக்கு வழங்கப்படும். வாகனம் போலீசாரிடம் சிக்கிய இடத்திலிருந்து ஸ்கிராப்பிங் சென்டருக்கு கொண்டு செல்லும் செலவை வாகனத்தின் உரிமையாளரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த செய்தி டில்லி வட்டார வாகன ஓட்டிகளிடையே பெரிய ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஷாக்கிங்கான தகவல்களைப் பார்த்ததும் தற்போது பழைய வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் அந்த காரை தங்கள் வீட்டிலிருந்தே வெளியே எடுக்கத் தயங்கி வருகின்றனர்.
டிரைவ் ஸ்பார்க் நினைப்பது என்ன?: பழைய வாகனங்களை தகுதியிழப்பு செய்தது டில்லி மக்களின் வாழ்கையைச் சுலபமாக்கத் தான். இப்படியாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களால் காற்று மாசு அதிகமாகிறது. இதைப் பழைய வாகன உரிமையாளர்கள் உணர்ந்து உடனடியாக அவர்களே அவர்களது வாகனங்களை ஸ்கிராப் செய்து விடுவது தான் சிறந்தது.


Click it and Unblock the Notifications








