வல்லரசு நாடுகளே மிரள போகுது! நம்ம ஊரில் இத்தன எலெக்ட்ரிக் பஸ்களை களமிறக்க போறாங்களா! டைம் பாத்து அடிக்கறாங்க!

இந்தியாவில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னையை குறைப்பதற்காக, எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து கொண்டிருக்கும் பகுதிகளில் தலைநகர் டெல்லி மிகவும் முக்கியமானதாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன.

இந்த சூழலில் அங்கு மேலும் ஒரு அதிரடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. டெல்லியில் தற்போதைய நிலையில் சுமார் 7,500 பஸ்கள் இயங்கி வருகின்றன. இதில் எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை சுமார் 400 ஆகும். ஏற்கனவே 400 எலெக்ட்ரிக் பஸ்கள் இயங்கி வரும் நிலையில், டெல்லியில் மேலும் 400 எலெக்ட்ரிக் பஸ்கள் வெகு விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.

Electric Bus

இதன் மூலம் தலைநகர் டெல்லியில் இயங்கும் எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை 800 ஆக உயரவுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பானவையாக இருக்கும். ஏனெனில் இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்களில் நிகழ் நேர கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் சிசிடிவி கேமராக்கள் போன்ற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுதவிர வீல்சேரில் வருபவர்கள் எளிதாக ஏறி, இறங்குவதற்கு தேவையான வசதிகளும் இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்களில் செய்யப்பட்டுள்ளன. எனவே மாற்றுத்திறனாளிகளும் இந்த எலெக்ட்ரிக் பஸ்களை தாராளமாக பயன்படுத்த முடியும். இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்கள் எப்போது பயன்பாட்டிற்கு வரும்? என நீங்கள் கேட்பது புரிகிறது.

Electric Buses

டெல்லியில் வரும் செப்டம்பர் 9-10 ஆகிய தேதிகளில் ஜி20 மாநாடு (G20 Summit) நடைபெறவுள்ளது. இதில், அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் கனடா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மிக முக்கியமான தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த ஜி20 மாநாட்டிற்கு முன்பாக டெல்லியில் 400 புதிய எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 400 எலெக்ட்ரிக் பஸ்களில் ஒரு சில எலெக்ட்ரிக் பஸ்கள், ஜி20 மாநாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளன. அதற்கு பிறகு அவை மற்ற எலெக்ட்ரிக் பஸ்களை போலவே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும்.

உலகின் முக்கிய நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வரவுள்ளதால், டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அத்துடன் டெல்லியை அலங்கரிக்கும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாகவே இந்த 400 எலெக்ட்ரிக் பஸ்களும் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து டெல்லியின் போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறுகையில், ''முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வழிகாட்டுதலில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள், டெல்லியில் இருந்து நல்ல நினைவுகளை எடுத்து செல்ல வேண்டும்'' என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெல்லியில் எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து கொண்டே வருவது நல்ல விஷயம்தான். டெல்லி மட்டுமல்லாது, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் உள்பட இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் தற்போது மிக அதிக அளவில் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் தமிழ்நாட்டில் (Tamil Nadu) சென்னை (Chennai) போன்ற பெரு நகரங்களில் கூட இன்னும் எலெக்ட்ரிக் பஸ்கள் பெரிய அளவில் இயக்கப்படவில்லை என்பது வேதனையான விஷயம். தமிழ்நாட்டில் எலெக்ட்ரிக் பஸ்களை அதிகளவில் இயக்க மாநில அரசு விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Monday, August 28, 2023, 17:17 [IST]
English summary
Delhi to get 400 new electric buses all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+