டெஸ்ட் டிரைவிற்கு பயன்படுத்தப்படும் டெமோ கார்களை காசு கொடுத்து வாங்கலாமா? இது நமக்கு லாபமா இருக்குமா?

கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்க விளம்பரங்களை முக்கிய கோளாக பயன்படுத்துகின்றன. அத்துடன், தங்களின் வாகனங்கள் தரமானவை என்பதை நிரூபிக்கவும், வாங்கும் முன்னரே ஓட்டும் அனுபவத்தை (டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸை) வழங்க வேண்டும் என்பதற்காகவும் டெஸ்ட் டிரைவ் வசதியை அவை வழங்குகின்றன.

அனைத்து ஷோரூம்களிலும் இந்த டெமோ கார் (Demo Car)-கள் பயன்பாட்டில் இருக்கும். குறைந்தபட்சம் ஒரு யூனிட்டையாவது விற்பனையாளர்களிடம் வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும். ஷோரூம்களில் காட்சிப்படுத்த அல்லது டெஸ்ட் டிரைவ் செய்ய அவை பயன்படுத்தப்படும். இந்த வாகனங்கள் கடைசி காலம் வரை டெஸ்ட் டிரைவிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுமா என கேட்டால் இல்லை என்பதே எங்களின் பதில் ஆகும்.

Demo car

குறிப்பிட்ட காலம் வரை அவை டெஸ்ட் டிரைவிற்கு வழங்கப்படும். அதாவது குறிப்பிட்ட அந்த கார் மாடல் சந்தையில் விற்பனையில் இருக்கும் வரை மட்டுமே டெஸ்ட் டிரைவிற்காக வழங்கப்படும். அதற்கு பின்னர் அந்த டெமோ கார்கள் விற்பனைக்கு வழங்கப்பட அதிகம் வாய்ப்புகள் இருக்கின்றன.

இத்தகைய டெமோ கார்களை வாங்கிப் பயன்படுத்தலாமா? இதனால் கிடைக்கும் பலன் என்ன? மற்றும் தீமைகள் என்ன? என்பது போன்ற டெமோ கார்கள் விஷயத்தில் நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டெமோ கார்களை வாங்குவது எப்படி? புதிய கார்களை வாங்குவதைப் போலவேதான் இந்த டெமோ கார்களை நாம் வாங்க வேண்டும். கார் புதிய காரை வாங்க எப்படி டீலர்ஷிப்பை தொடர்பு கொள்ள வேண்டும். அதுபோலவே இதை வாங்கவும் கார் டீலரை அணுக வேண்டும்.

மேலும், புதிய வாகனத்தை வாங்குவதைப் போல பல ஆவணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். இதுதவிர, இந்த வாகனங்களுக்கு ஃபைனான்ஸிங்கையும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். அதேவேளையில், டெமோ கார்கள் விற்பனைக்கு வருவது அபூர்வமான ஒன்றாகும். ஆகையால், அனைத்து ஷோரூம்களிலும் இந்த டெமோ கார்கள் விற்பனைக்குக் கிடைத்துவிடாது என்பது கவனிக்கத்தகுந்தது.

எனவே மிகப் பெரிய தேடலை இதற்காக நாம் வழங்க வேண்டி இருக்கும். இந்த கார் டெஸ்ட் டிரைவ் காராக இருந்தாலும், நீங்கள் அதை ஒரு சோதித்து பார்த்தே வாங்க வேண்டும். இதை வைத்து விலையை இன்னும் கூடுதலாக குறைத்துக் கொள்ள முடியும். ஏதேனும், பாதிப்பு அல்லது சிக்கல் இருப்பின் அதனை கையோடு சரி செய்து வாங்கிக் கொள்ளவும் அது உதவும்.

டெமோ கார்களை வாங்குவதனால் கிடைக்கும் நன்மைகள்? டெமோ கார்கள் பல நேரங்களில் தற்காலிக பதிவெண்ணுடனேயே பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால், அவற்றை வாங்கச் செல்லும்பட்சத்தில் முதல் ஓனராகவே நீங்களே இருப்பீர்கள். விற்பனையாளரும் புதிய காருக்கு வழங்கும் அனைத்து சிறப்பு சலுகைகளையும் இந்த டெமோ கார்களுக்கு வழங்குவர்.

ஆனால், புத்தம் புதிதுபோல் இருக்காது. சில நூறு அல்லது ஆயிரம் கிமீ தூரம் வரை இயங்கி இருக்கும். ஆகையால், அந்த கார்கள் லேசாக தேய்மானம் அடைந்திருக்கும். இதனாலேயே அவை மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். ஓர் பயன்படுத்தப்பட்ட காரின் விலையில் முதல் ஓனராக ஓர் காருக்கு மாற முடியும்.

மேலும், தயாரிப்பு நிறுவனத்தின் வாரண்டி, குவாரண்டி உள்ளிட்டவையும் கிடைக்கும். டெமோ கார்கள் என்பதால், அந்த கார்களை பொதுவாகவே டீலர்கள் அதிகம் கவனம் செலுத்தி பராமரிப்பார்கள். ஆகையால், அதில் குறைகள் பெரிய அளவில் இருக்காது. டெமோ கார்களில் உள்ள சிக்கல்: நாம் நினைத்த மாடலை வாங்கிக் கொள்ள முடியாது.

நினைத்த மாடல் கிடைத்தாலும், எதிர்பார்த்த அம்சங்கள் கொண்ட வேரியண்ட் கிடைக்காது. மேலும், பரந்த தேர்வுகளில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் மிகக் குறைவு. டெஸ்ட் டிரைவிங்கின்போது சிறு சிறு சிராய்ப்புகள் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கும் ஆனால், அவை நமக்கு பெரிய அளவில் தெரியாது. பெரிய கஸ்டமைசேஷன் செய்துக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்காது.

புதிய காருக்கும், டெமோ காருக்கும் இடையில் இருக்கும் விலை வித்தியாசம்: பிராண்ட நியூ காருக்கும், டெஸ்ட் டிரைவிற்கு பயன்படுத்தும் டெமோ கார்களுக்கும் இடையில் மிகப் பெரிய விலை வித்தியாசம் எல்லாம் இருக்காது. சுமார் 10சதவீதம் முதல் 20சதவீதம் வரை மட்டுமே விலை வித்தியாசம் இரண்டிற்கும் இடையில் இருக்கும். இதில், கூடுதலாக சில டிஸ்கவுண்டுகளை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், அதை பெறுவதற்குள் அவர்களுடன் மிகப் பெரிய போராட்டமே செய்ய வேண்டியிருக்கும்.

டெமோ காரை வாங்கும் முன் இதை எல்லாம் நினைவில் வச்சுக்கோங்க: வாரண்டி, வாகனத்தின் வரலாறு, மைலேஜ், வாகனத்தின் நிலை, விலையை அடிமட்டத்திற்கு குறைத்து கேட்க வேண்டும், புதிது மற்றும் டெமோவிற்கும் இடையில் உள்ள விலை வித்தியாசத்தை பிரித்து பார்த்தல் மற்றும் மறு விற்பனை வேல்யூ எப்படி இருக்கும்? இவை அனைத்தையும் பார்த்து காரை வாங்குவதே நல்லது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புதிய வாகனங்களைப் போலவே பயன்படுத்திய கார்களுக்கும் மிக அதிகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில், பெரிய அளவில் பயன்படுத்தப்படாத வாகனங்கள் என்பதால் டெமோ கார்களுக்கும் நல்ல வரவேற்பு மக்கள் சிலரிடையே கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான், கணிசமான அளவில் டிஸ்கவுண்டுடன் வாகன உற்பத்தியாளர்கள் டெமோ கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதனால் கணிசமான அளவு பலன் கிடைப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 20, 2023, 9:10 [IST]
English summary
Demo car pros and cons
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+