500 கிமீ ரேஞ்ச்ல கம்மி ரேட் எலெக்ட்ரிக் காரை தயாரிக்கும் டாடா! இதுக்கு முன்னாடி ஒரு ட்விஸ்ட் காத்திருக்குது!
கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டாடா நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது எலெக்ட்ரிக் மிட் சைஸ் எஸ்யூவி கூபே காராக டாடா கர்வ் என்ற காரை அறிமுகப்படுத்தியது. கிட்டத்தட்ட ஓராண்டு ஆன நிலையில் இந்த கார் குறித்த ஏகப்பட்ட அப்டேட்கள் வந்துவிட்டன. இந்த கார் அடுத்தாண்டு விற்பனைக்கே வந்துவிடும்.
இந்நிலையில் ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் கிட்டத்தட்டத் தயாரிப்பு நிலைக்கு வந்துள்ள நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் ஜென்2 இவி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ எக்ஸ்போவில் நமக்கெல்லாம் புதிய செய்தியாகக் கிடைத்தது. இந்த கார் முதலில் எலெக்ட்ரிக் காராக இல்லாமல் கம்பஷன் இன்ஜின் காராக விற்பனைக்கு வரும் என்ற செய்தியைத் தான்.

டாடா நிறுவனம் இந்த காரை டிஜிட்டல் டிசைன் பிலாஸஃபி மூலம் வடிவமைத்துள்ளது. கிட்டத்தட்ட இதே வடிவமைப்பைத் தான் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் காரில் காண முடிகிறது. இந்த கார் எக்ஸ்1 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. தற்போது டாடா கர்வ் கார் குறித்த மேலும் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி டாடா கர்வ் கார் மொத்தம் 4.3 மீட்டர் நீளம் கொண்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் மிட் சைஸ் செடான் கார் என்பதால் இந்த கார் மார்கெட்டில் உள்ள ஹூண்டாய் கிரெட்டா, எம்ஜி அஸ்டர், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது.
டாடா நிறுவனம் இந்த புதிய கர்வ் மிட் சைஸ் எஸ்யூவி காரை சப்-4 மீட்டர் நெக்ஸான் மற்றும் 4.6 மீட்டர் ஹாரியர் ஆகிய கார்களுக்கு இடையே நிலை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் நெக்ஸான் காரை விட 50 மிமீ வீல் பேஸ் அதிகமாகும்.
டாடா கர்வ் கம்பஷனவ் இன்ஜின் காரை பொருத்தவரை டாடா நிறுவனம் தனது புதிய 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு டைரக்ட்- இன்ஜெக்டட் பெட்ரோல் இன்ஜினை பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போக டாடா நிறுவனத்திடம் 1.5 லிட்டர் டர்போ டிஐ 4 பாட் பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இது பொருத்தப்பட வாய்ப்பிருந்தாலும் இது டாடா சியாரா காரில் உள்ள இன்ஜின். இந்த சியாராக காரை டாடா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்டசியபடுத்தியுள்ளது. மேலும் இது ஹாரியர் மற்றும் சஃபாரி காரில் இருக்கும். இந்த இன்ஜின் 160 எச்பி பவரை வெளிப்படுத்தும்.
டாடா கர்வ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் கார் கம்பஷன் இன்ஜின் வெர்ஷன் கார் அறிமுகமான 2 ஆண்டுகளுக்கு பின்னர் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது. மற்றபடி எலெக்ட்ரிக் கார் குறித்த பிற தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் இந்த கார் விற்பனைக்கு வரும் போது 500 கி.மீ ரேஞ்ச் தரும் காராக அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.
இது மட்டுமல்ல இந்த எலெக்ட்ரிக் காரின் உட்பல பல தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக கனெக்டெட் கார் தொழிற்நுட்பத்துடன் கூடிய பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா சிஸ்டம், சன்ரூப் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








