பழைய வண்டி வச்சிருக்கீங்களா? உங்க வீட்டு பீரோவை பணத்தை நிரப்ப ரெடி பண்ணி வைங்க! பழைய வண்டிக்கு இவ்வளவு மவுசா?

பழைய பாடாவதியான வாகனங்களை ஸ்கிராபிருக்கு போடுவது மூலம் லட்சக்கணக்கில் கூட பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பலருக்கு இப்படியான ஒரு வசதி இருப்பதே தெரியாது. ஸ்கிராப்பிற்கு போட்டால் எப்படி பணம் கிடைக்கும்? ஸ்கிராப் செய்யும் காரின் மதிப்பை எப்படி கணக்கிடுகிறார்கள்? இது குறித்து விரிவாக காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு பசுமை தீர்ப்பாயம் இந்தியாவில் உள்ள பழைய கார்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது என அறிவித்தது. இதனால் 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பழைய டீசல் வாகனங்களின் பதிவை ரத்து செய்ய அறிவுறுத்தி இருந்தது.

vehicle scrap valuation method

இந்நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த பழைய வாகனங்களை ரத்து செய்யும் முறை நடைமுறையில் இருக்கிறது. பழைய வாகனங்களின் பதிவு எண் ரத்து செய்யப்பட்டால் அந்த வாகனங்களை என்ன செய்வது என்ற கேள்வி பலருக்கு இருக்கும். நிச்சயம் அந்த வாகனங்களை சாலையில் ஒட்டி பயன்படுத்த முடியாது.

இந்த வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்போது ஸ்கிராப் சென்டர்களை அமைத்துள்ளது. தற்போது இது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த ஸ்கிராப் சென்டர்களில் பழைய வாகனங்களை தனித்தனியாக பிரித்து அதை முழுவதுமாக ஸ்கிராப் செய்து விடுவார்கள். இந்த ஸ்கிராப்கள் மறு சுழற்சி செய்யப்படும்.

vehicle scrap valuation method

இப்படியாக பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்யும்போது கிடைக்கும் பொருட்களை வைத்து அதற்கு ஒரு மதிப்பு வைத்து அதற்கான பணத்தையும் வழங்குவார்கள். பொதுமக்கள் மத்தியில் இப்படியான ஸ்கிராப் சென்டர் இருப்பது குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை.இந்தியாவைப் பொறுத்தவரை மாருதி, டொயோட்டா, டாடா போன்ற நிறுவனங்களே ஸ்கிராப் சென்டர்களை திறந்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள ஸ்கிராப் சென்டர்களில் ஒரு வாகனத்திற்கு எப்படி மதிப்பீடு செய்வார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. போக்குவரத்து துறை கமிஷனர் வெங்கடேஸ்வர்லு என்பவர் இந்து தகவலை தற்போது தெரிவித்துள்ளார்.வாகனங்கள் எல்லாம் எண்ட் ஆஃப் லைஃப் வெஹிகில் (End-of-Life-Vehicle)-ELV என்ற முறையில் தான் ஸ்கிராப் செய்யப்படுகிறது.

vehicle scrap valuation method

ஒரு வாகனத்தை ஸ்கிராப் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஷாப்பிங் சென்டரில் புக் செய்ய வேண்டும். இதற்கான புக்கிங்கை https://vscrap.parivahan.gov.in என்ற லிங்கில் ஆன்லைனில் கூட செய்யலாம். அல்லது 1800-419-3530 என்ற டோல் ஃப்ரீ என்னை தொடர்பு கொண்டு புக்கிங் செய்யலாம் உங்கள் வீட்டின் அருகே உள்ள ஸ்கிராப் சென்டரையும் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்க்ராப்பிங் சென்டருக்கு போன பின்பு உங்களின் பழைய கார் மதிப்பிடப்படும். காரை மதிப்பிடுவதற்கு என்று ஒரு நடைமுறை இருக்கிறது. அதாவது காரில் உள்ள இரும்பு மெட்டல் பாகங்களுக்கு மட்டும் தான் மதிப்பு. அதனால் காரில் உள்ள டயர் இன்ஜின் எல்லாம் தனித்தனியாக கழட்டப்படும் காரில் உள்ள சீட்களும் தனியாக காட்டப்படும்.

ஆனால் அதற்கு முன்பே கார் மதிப்பிடப்பட்டு விடும். அதாவது காரின் மொத்த எடையில் 65 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடிய அளவிலான இரும்பு மெட்டல் இருக்கும். அதனால் காரின் மொத்த எடையில் 65 சதவீதத்தை கணக்கிடப்பட்டு அது மறுசுழற்சி செய்யக்கூடிய பாகங்களாக கருதப்படும்‌.

இந்த மறுசுழற்சி செய்யக்கூடிய பாகங்களின் எடை மதிப்பில் இருந்து 90% க்கு பணம் வழங்கப்படும். நீங்கள் ஸ்கிராப் செய்யும் தேதியில் என்ன விலையில் பழைய இரும்புகள் விற்பனை ஆகிறதோ அதே விலையில் இந்த 90 சதவீதமான இரும்புகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும். இது ஒத்து வந்தால் நீங்கள் உங்கள் வாகனத்தை ஸ்கிராப் செய்ய அனுப்பலாம்.

ஸ்கிராப் செய்யும் போது வாகனத்தில் உள்ள டயர் இன்ஜின் மற்றும் சீட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்படும். இதில் உங்கள் வாகனத்தின் டயர் நன்றாக இருந்தாலோ இன்ஜின் நன்றாக இருந்தாலும் அதை தனியாக விற்பனை செய்ய முடியும். இது போக பேட்டரி சிஎன்ஜி,கிட் உள்ளிட்டவற்றிற்கும் தனித்தனியாக பணம் வழங்கப்படும் அதற்கான விலையும் தனியாக முதலிலேயே உங்களுக்கு வழங்கப்படும்.

உங்கள் வாகனத்தில் எடையை பொறுத்து அது ஸ்கிராப் செய்யும் போது வழங்கப்படும் பணத்தின் அளவு மாறுபடும். கனரக வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்படும் போது அதற்கான வழங்கப்படும் பணம் லட்சக்கணக்கில் கூட செல்ல வாய்ப்பு இருக்கிறது. இவ்வளவு இருந்தும் பெரும்பாலான வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்படாததற்கு பல காரணங்கள் இருக்கிறது.

பலருக்கு இதுபோன்ற ஸ்கிராப் சென்டர் குறித்த விழிப்புணர்வுகள் இல்லை, அது மட்டுமல்ல பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்யப்படும் முன்னர் அதன் பதிவு எண்ணை நீக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதற்கு அந்த வாகனத்தின் ஆர்சி புக் தேவை. பலர் பழைய வாகனத்தின் ஆர்சி புக்கை தொலைத்து விட்டனர். இதனால் பழைய வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியாத நிலை இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பழைய வாகனங்களை ஓட்டுவது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. மேலும் அதை இயக்குவதற்கான பெட்ரோல், டீசல் செலவுகளும் அதிகமாக இருக்கும். இதனால் புதிய வாகனங்களை நீங்கள் மாற்றிவிட்டால் பழைய வாகனங்களை அப்படியே கிடப்பில் போடாமல் அதை ஸ்கிராப் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும். இது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகம் கொண்டு வர வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 27, 2023, 14:45 [IST]
English summary
Determining prices of used vehicles at scrap centers from evaluation to payment
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X