டீசல் கார்களையும், நம் இந்தியர்களையும் பிரிக்கவே முடியாது போலயே!! மாருதி சுஸுகி இந்த விஷயத்தில் ஜீரோ!

புது புது எலக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வந்தாலும், டீசல் கார்களுக்கு நம் மக்களிடத்தில் எப்போதுமே ஓர் தனி கிரேஸ் உள்ளது. டீசல் கார்களின் செயல்படுதிறன் மற்றும் பிக்அப்பை இதற்கு முக்கிய காரணமாக சொல்ல வேண்டும். இதற்கு சான்றாக, கடந்த 3 மாதங்களில் (2023 ஏப்ரல் - ஜூன்) அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 டீசல் கார்களை பற்றி இனி பார்க்கலாம்.

இந்தியாவில் டீசல் என்ஜின் உடன் பலர் விரும்பி தேர்வு செய்கின்ற காராக மஹிந்திரா பொலேரோ விளங்குகிறது. அதாவது, கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையில் டீசல் என்ஜின் உடன் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக மஹிந்திரா பொலேரோ முதலிடம் வகிக்கிறது. மேற்கூறப்பட்ட 3 மாதங்களில், பொலேரோ டீசல் கார்கள் 25,910 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

diesel cars sales report 2023 april-june

பொலேரோவுக்கு அடுத்து 2வது இடத்திலும் மற்றொரு பிரபலமான மஹிந்திரா காரான ஸ்கார்பியோ உள்ளது. ஸ்கார்பியோ கார்கள் தற்சமயம் இரு விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் ஆகும். நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோ மாடலை சிறிது பட்டி, டிங்கரிங் பார்த்து ஸ்கார்பியோ கிளாசிக் என மஹிந்திரா அறிமுகப்படுத்தியது. இந்த கார் டீசல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்கார்பியோ என் ஆனது முற்றிலும் புதிய தோற்றத்திலான அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ ஆகும். இந்த கார் பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த இரு ஸ்கார்பியோ கார்கள் டீசல் என்ஜின் உடன் கடந்த ஏப்ரலில் இருந்து ஜூன் மாதம் வரைக்குள் 25,804 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தில் ஹூண்டாய் கிரெட்டா உள்ளது.

diesel cars sales report 2023 april-june

இந்தியாவில் அதிக பேர் வாங்கும் ஹூண்டாய் காராகவும், எஸ்யூவி ரக கார்களுள் ஒன்றாகவும் விளங்கும் கிரெட்டா டீசல் உடன் கடந்த 3 மாதங்களில் 18,628 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கிரெட்டாவுக்கு அடுத்து, டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டாவை டீசல் என்ஜின் உடன் வாங்க பலர் விரும்புகின்றனர். மேற்கூறப்பட்ட காலக்கட்டத்தில், 12,614 பேர் டீசல் என்ஜின் உடன் இன்னோவா கிரிஸ்ட்டாவை வாங்கியுள்ளனர்.

இதற்கடுத்து இந்த வரிசையில், மீண்டும் இரு மஹிந்திரா கார்கள் உள்ளன. மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் மஹிந்திரா தார் என்பவை அவை ஆகும். இதில் எக்ஸ்யூவி700 டீசல் என்ஜின் உடன் 10,802 யூனிட்களும், தார் டீசல் வாகனங்கள் 10,703 யூனிட்களும் இந்த 3 மாதங்களில் விற்பனையாகி உள்ளன. இவை இரண்டிலும் ஒரே மாதிரியான டீசல் என்ஜினையே மஹிந்திரா நிறுவனம் பொருத்துவது குறிப்பிடத்தக்கது.

diesel cars sales report 2023 april-june

கியா செல்டோஸ் இந்த வரிசையில் அதற்கடுத்த நிலையில் உள்ளது. கியா செல்டோஸை டீசல் என்ஜின் 8,828 பேர் கடந்த 3 மாதங்களில் வாங்கியுள்ளனர். செல்டோஸ் காரை சமீபத்தில்தான் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடில் கியா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது இங்கு நினைவுக்கூரத்தக்கது. செல்டோஸிற்கு அடுத்து 8வது இடத்தில் மீண்டும் மஹிந்திரா தயாரிப்பாக எக்ஸ்யூவி300 உள்ளது.

மஹிந்திராவின் காம்பெக்ட் எஸ்யூவி காராக விளங்கும் எக்ஸ்யூவி300 கடந்த 3 மாதங்களில் டீசல் என்ஜின் உடன் 8,606 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த லிஸ்ட்டில் 9வது இடத்தில் டொயோட்டாவின் மற்றொரு ஐகானிக் காரான ஃபார்ச்சூனர் உள்ளது. டீசல் என்ஜின் உடன் ஃபார்ச்சூனர் காரை 3 மாதங்களில் 8,279 பேர் தேர்வு செய்துள்ளனர். இந்த வரிசையில் கடைசி 10வது இடத்தில் டாடா ஹெரியர் கார் உள்ளது. ஹெரியர் காரின் டீசல் வேரியண்ட்கள் கடந்த 3 மாதங்களில் 7,126 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவை தான் கடந்த ஏப்ரலில் இருந்து ஜூன் மாதம் வரையில் அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்ட டீசல் கார்களாகும். இதில் நீங்கள் கவனித்தீர்கள் என்றால், ஒரு மாருதி சுஸுகி கார் கூட இல்லை. ஏனெனில், இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டாக விளங்கும் மாருதி சுஸுகி தற்சமயம் அதன் எந்த காரிலும் டீசல் என்ஜினை பொருத்துவது இல்லை. பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளினால் இத்தகைய முடிவை மாருதி சுஸுகி எடுத்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 27, 2023, 11:07 [IST]
English summary
Diesel cars sales report for 2023 april june
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X