இனியும் பழைய காரை வாங்குவீங்க! அதிக லாபம்னு நினைச்சா யூஸ்டு வாகனங்களுக்கு பின்னால இவ்ளோ சிக்கல் இருக்கா?

லாபம் அதிகம் என்கிற காரணத்திற்காக நம்மில் பலர் செகண்ட் ஹேண்ட் சந்தையைப் பயன்படுத்தி அவர்களுக்கான கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த பயன்படுத்திய வாகனங்களுக்கு பின்னால் பல்வேறு சிக்கல்கள் மறைந்திருக்கின்றன. அவை என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம்.

ஏற்கனவே அதிக பயன்பாட்டிற்கு உட்பட்ட வாகனம் என்பதால், அதில் இருக்கும் முக்கிய பாகங்கள் அதிக தேய்மானத்திற்கு ஆளாகி இருக்கும். ஆகையால், அதிகளவிலான பராமரிப்பு பழைய வாகனங்களுக்கு தேவைப்படும். அதிக பராமரிப்பு அதிக செலவிற்கு வழிவகுக்கும். சில பாகங்கள் நாம் எதிர்பார்த்திராத அதிக தொகையைக் கொண்டதாக இருக்கும்.

பழைய வாகனம்

வயசு அதிகம்னா சிக்கலும் அதிகம்

பழைய வாகனங்களுக்கான செலவு நம்முடைய ஒரு மாத சம்பளத்தையேகூட விழுங்கக் கூடியதாக இருக்கலாம். மேலும், கார் வயதாக வயதாக அதன் மீதான நம்பகத் தன்மைக் குறைய ஆரம்பித்துவிடும். நடுரோட்டில் காலை வாரிவிடும் சூழலைகூட சில பழைய வாகனங்கள் ஏற்படுத்துவிடுகின்றன. இந்த மாதிரியான நேரங்களில் பெரும் தொகையை நாம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

பாதுகாப்பு குறைவு

பழைய வாகனங்களில் இப்போதைய நவீன கால கார்களில் இடம் பெற்றிருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றிருக்காது. நவீன கால கார்களில் லேன் மாற்றம் பற்றி எச்சரிக்கை விடுக்கும் வசதி, தானியங்கி அவசர கால பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் கண்கானிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், இவற்றை பழைய வாகனங்களில் பார்க்க முடியாது. ஆகையால், பாதுகாப்பு என்பது சற்று கேள்வி குறியே.

பழைய வாகனம்

எரிபொருள் சிக்கனம் திறன்

பெரும்பாலான பழைய வாகனங்கள் எரிபொருள் சிக்கனம் என்றால் என்ன என்று கேட்கும் வகையில் மைலேஜை கொடுக்கும் வகையிலேயே இருக்கின்றன. அதிகப்படியான தேய்மானம் மற்றும் இன்னும் சில காரணங்களால் அவற்றின் மைலேஜ் திறன் குறைந்துக் காணப்படுகின்றது. ஆகையால், எதிர்பார்த்த அளவு மைலேஜ் திறனை பழைய வாகனங்களில் எதிர்பார்க்க முடியாது. இதனால் கூடுதல் செலவே ஏற்படும். யூஸ்டு வாகன பயன்பாட்டாளர்கள் சந்திக்கும் மிக முக்கியமான சிக்கல்களில் இதுவும் ஒன்று ஆகும்.

சிறப்பு கருவிகளின் குறைபாடு

பாதுகாப்பு அம்சங்களைப் போலவே சிறப்பு வசதிகளின் குறைபாடும் பழைய வாகனங்களில் அதிகளவில் தென்படுகின்றது. நவீன கால கார்களில் தொடுதிரை வசதி வழங்கப்படுகின்றது. இந்த திரை வாயிலாக பல்வேறு முக்கிய தகவல்களை பயணிகள் மற்றும் டிரைவர்களால் பெற முடியும். வழி தடம் பற்றிய தகவல், பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றை பெற முடியும். கார் இணைப்பு வசதியையும் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், இந்த வசதிகளை பழைய கார்களில் பெற முடியாது.

பழைய வாகனம்

உதிரி பாகம் கிடைப்பதில் சிக்கல்

கார் பழையதாக ஆக அவற்றிற்கான உதிரிபாகங்கள் கிடைப்பதில் மிகப் பெரிய சிக்கல் ஏற்படும். நாம் சாலையில் செல்லும்போது, ஓரங்களில் பயன்படுத்தா நிலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். அந்த வாகனங்களில் சில உதிரி பாகம் கிடைக்காத காரணத்திற்காக நிறுத்தப்பட்டவை ஆகும். சில அரிய வகை வாகனங்கள்கூட உதிரி பாகம் கிடைக்காத காரணத்தினால் மழை, தூசிக்கு இரையாகும் சூழல் இந்தியாவில் நிலவுகின்றது.

இந்த பிரச்னை பழைய வாகனங்களுக்கு அதிகளவில் நிலவுகின்றது. இதுமட்டுமின்று இவற்றின் பயன்பாட்டால் சூற்றுச் சூழலுக்கும் அதிகளவில் பாதிப்பு ஏற்படுகின்றது. அதிக தேய்மானம் காரணமாக அளவிடப்பட்டதைக் காட்டிலும் அதிக மாசை பழைய வாகனங்கள் வெளிப்படுத்தும். இதனால்தான், மத்திய மற்றும் மாநில அரசுகள் பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றும் பணியில் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது. எனவே பழைய வாகனங்கள் சுற்றுசூழலுக்கு அதிகளவில் கேடை விளைவிக்கக் கூடியதாக இருக்கின்றது.

பழைய வாகனம்

வட்டி விகிதம் அதிகம்

புதிய வாகனத்திற்கு வழங்கப்படுவதைப் போலவே பழைய வாகனங்களுக்கும் வாகன கடன் வழங்கப்படுகின்றது. ஆனால், இரண்டுக்கும் இடையே வட்டி விகிதம் மாறுபடும். புதியதைக் காட்டிலும் பழைய வாகனங்களுக்கு அதிக வட்டி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பழைய வாகனங்களின் வேல்யூ பலமடங்கு குறைவு என்பதே அதிக வட்டிக்கான மிக முக்கியமான காரணம் ஆகும். குறிப்பாக, புதிய வாகனங்களுக்கு இருப்பதைக் காட்டிலும் பழைய வாகனங்களுக்கு ரிஸ்க்கும் அதிகமாக இருக்கின்றது.

இதுவும் அதிக வட்டிக்கான காரணமாக இருக்கின்றது. ஆயுட்காலம் குறைவு, எந்திர கோளாறுகள் அதிகம் ஏற்படும் என்பதே பழைய வாகனங்களில் காணப்படும் மிகப் பெரிய சிக்கல்கள் ஆகும். ஆகையால், காரின் வயதைப் பொருத்து வங்கிகள் யூஸ்டு வாகனங்களுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன.

Article Published On: Thursday, February 23, 2023, 15:13 [IST]
English summary
Disadvantages of used car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X