ஓலா ஸ்கூட்டர் உள்ள சிம் கார்டு இருக்குமா? இதுக்கு லைஃப்டைம் வேலிடிட்டி வேற இருக்குதா?

ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணிக்கும் போது. முன்னாள் உள்ள ஸ்கிரீனில் நாம் பயணிக்கும் இடத்தின் மேப் இருக்கும். நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனை இதில் கனெக்ட் செய்யாமலேயே இது வேலை செய்யும். இன்டர்நெட் வசதியே இல்லாமல் எப்படி இந்த ஆப் வேலை செய்கிறது என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது. இதைப் பற்றி தான் இங்கு விரிவாக காணப்போகிறோம்.

இந்தியாவில் தற்போது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம்தான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அதிகமாக விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. கடந்த 9 மாதங்களில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இதனால் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நம்பர் ஒன் இடத்தில் ஓலா நிறுவனம் தான் வருகிறது.

sim card in ola scooter

ஓலா நிறுவனத்திடம் தற்போது எஸ்1 சீரியஸில் மட்டும் எஸ் ஒன் ஏர், எஸ்1, எஸ் 1 ப்ரோ என்ற மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இருக்கிறது. இந்த மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் முன்பக்கம் 7 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இதில் வாகனம் செல்லும் போது அதன் வேகம், ரேஞ்ச், பேட்டரி உள்ளிட்ட பல விஷயங்கள் வருகிறது.

மிக முக்கியமாக நேவிகேஷனிற்காக மேப் வருகிறது. நாம் செல்போனில் எப்படி கூகுள் மேப்பை பயன்படுத்தி நாம் செல்ல வேண்டிய இடத்தை கண்டறிவோமோ அதே போல் இதிலும் மேப் ஒன்று வருகிறது. அதில் நீங்கள் செல்ல வேண்டிய இடம் நீங்கள் இருக்கும் இடம் உள்ளிட்ட தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

sim card in ola scooter

செல்போனில் நீங்கள் இன்டர்நெட்டை ஆப் செய்து விட்டாலோ அல்லது இன்டர்நெட் கிடைக்காத இடத்தில் இருந்தாலும் உங்களது மேப் வேலை செய்யாது, நீங்கள் இருக்கும் இடத்தை காட்டாது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் இது இன்டர்நெட்டை அடிப்படையாக வைத்து இயங்கும் ஒரு ஆப் ஆகும்.

ஆனால் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் செயல்பாட்டில் இருக்கும் மேப் நாம் செல்போனை கனெக்ட் செய்யாமலேயே நாம் இருக்கும் இடம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை மேப்பில் காட்டுகிறது. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி பலருக்கும் வருகிறது. ஸ்கூட்டரில் இன்டர்நெட் இல்லாமல் வரும் மேப் நம் செல்போனில் மட்டும் எப்படி இன்டர்நெட் தேவையுடன் மட்டுமே வருகிறது என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு பதிலை தெரியும் நீங்கள் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் நாம் செல்போன்களில் அதிகம் பயன்படுத்துவது கூகுள் நிறுவனத்தின் மேப் செயலியாகும். ஆனால் ஓலா நிறுவனத்தின் ஸ்கூட்டரில் இருப்பது மேப் மை இந்தியா என்ற நிறுவனத்தின் செயலியாகும். மேப் மை இந்தியா நிறுவனத்திற்கும் ஓலா நிறுவனத்திற்கும் ஒரு கூட்டு உடன்படிக்கையின் கீழ் இந்த மேப் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இது ஒன்றும் இன்டர்நெட் வசதி இல்லாமல் இயங்கும் மேப் கிடையாது, இதற்கும் இன்டர்நெட் வசதி தேவை. ஆனால் இந்த இன்டர்நெட் வசதியை ஓலா நிறுவனம் தன் ஸ்கூட்டருக்குள்ளேயே இருக்கும்படி செட் செய்துள்ளது. அதாவது ஓலா நிறுவனம் ஜியோ நிறுவனத்துடன் கைகோர்த்து தான் தயாரிக்கும் ஒவ்வொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் ஜியோ நிறுவனத்தின் சிம் கார்டுகளை வைத்து அனுப்புகிறது.

அந்த சிம் கார்டுகள் மூலம் தான் இன்டர்நெட் கனெக்ட் செய்யப்பட்டு ஸ்கூட்டரில் உள்ள மற்ற தொழில்நுட்ப தரவுகள் இயங்குகிறது. ஆனால் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்ட இந்த ஜியோ சிம் கார்டை வைத்து நாம் ஃபோன் பேசவோ அல்லது மற்ற இன்டர்நெட் பயன்பாட்டிற்கோ பயன்படுத்த முடியாது.

இது முழுமையாக வாகனத்தின் கம்யூனிகேஷனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் சிம்கார்டு ஆகும். ஓலா ஸ்கூட்டர் வைத்திருக்கும் பலருக்கும் இந்த தகவல் தெரியாது. இந்த ஜியோ சிம் கார்டு ரீசார்ஜ் செய்ய வேண்டிய தேவை இல்லை இது போல நிறுவனத்திற்கு வழங்கும் போதே இது வாழ்நாள் முழுவதும் தனது சேவையை வழங்கும் படி தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளே இருக்கும் இந்த சிம் கார்டு வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக சேவை வழங்குவதற்காக பணத்தையும் சேர்த்து தான் ஸ்கூட்டரின் விலையாக நீங்கள் கொடுத்து ஸ்கூட்டரை வாங்குவீர்கள். இதனால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் தடையில்லா நேவிகேஷன் வசதியை பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக தனி கட்டணம் செலுத்த தேவையில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 28, 2023, 18:10 [IST]
English summary
Do you know there is a sim card in ola electric scooter
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+