உசுரே போனாலும் சரி எஃப்1 ரேஸ் கார்களில் ஏர்பேக் பொருத்தமாட்டாங்க... ஏன் தெரியுமா?
டிராக்களில் 300-400 கி.மீ வேகத்தில் சீறிப் பாயும் எஃப்1 ரேஸ் கார்கள் விபத்தில் சிக்க அதிகமான வாய்ப்புகள் இருந்தும் அந்த கார்களில் ஏர் பேக் பொருத்தமாட்டார்கள் ஏன் தெரியுமா? இது பின்னாடி இப்படி ஒரு காரணம் கூட இருக்குது!
இன்று நாம் ரோட்டில் நடந்து செல்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள் அங்கு ஏராளமான கார்கள் இருக்கும். குறைந்த விலை கார்கள் முதல் அதிக விலை கொண்ட சொகுசு கார்கள் வரை ஏராளமான கார்கள் இருக்கும். ஒரு காருக்கு எது முக்கியமோ இல்லையே பாதுகாப்பு அம்சம் மிகவும் முக்கியம் கார் சாலையில் செல்லும் போது அது விபத்தில் சிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இப்படி அந்த கார் விபத்தில் சிக்கினாலும் காருக்குள் இருக்கும் பயணிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கப் பாதுகாப்பு அம்சங்கள் காரில் வழங்கப்படுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்
பாதுகாப்பு அம்சங்களை கார் விபத்தில் சிக்கும் முன், சிக்கிய பின் என 2 விதமாகப் பிரிக்கலாம். சிக்குவதற்கு முன்பாக விபத்தில் சிக்க வாய்ப்புள்ளதை அறிந்து எச்சரிக்கை செய்யும் கருவிகள் ஒரு பக்கம் மற்றொரு பக்கம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினாலும் அதற்கான பாதுகாப்பைக் குறைக்கும் கருவிகள் ஒரு பக்கம், இதில் கார் விபத்தில் சிக்கினால் பயணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் கருவி ஏர் பேக்.
சாதாரணமாக ஒரு காரில் குறைந்தபட்சம் டிரைவர் மற்றும் முன் சீட் பயணிகளுக்காகவாவது ஏர்பேக் இருக்கும். சாலையில் செல்லும் ஒரு கார் அதிகபட்சமாக காலியான ரோட்டில் 200 கி.மீ வேகம் வரை செல்ல முடியும். இந்த காருக்கே இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் ஏர் பேக் எல்லாம் இருக்கிறது. ஆனால் ஃபார்முலா 1 ரேஸ் கார் டிராக்கில் தான் போகிறது என்றாலும் 300-400 கி.மீ வேகத்தில் சீறி பாயும் தன்மை கொண்டது.
இந்த கார் விபத்தில் சிக்க அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. இவ்வளவு இருந்தும் இன்று வரை எஃப்1 கார்களில் ஏர்பேக் என்பது கிடையாது. இப்படி ஒரு அம்சத்தை ரேஸ் காரில் வைக்க வேண்டும் என யாரும் யோசிக்கவும் இல்லை. இப்படி ஒரு அம்சம் எதிர்காலத்திலும் வராது இது ஏன் தெரியுமா? இதற்கான காரணத்தைக் காணலாம் வாருங்கள்.

ஏன் ஏர்பேக் இல்லை?
ரேஸ் காரில் ஏன் ஏர்பேக் இல்லை எனத் தெரிந்துகொள்ளும் முன்பு ஏர்பேக் எதற்காக வழங்கப்படுகிறது எனத் தெரிந்து கொள்ள வேண்டியது. அவசியம். ஒரு கார் விபத்தில் சிக்கும் போது காருக்குள் இருக்கும் மனிதர்கள் விபத்து நடந்த இம்பேக்டில் அவர்களது உடன் காரின் முன்பக்கம் போய் மோதும். மிக வேகமாக மோதுவதால் இந்த சம்பவத்தில் குறிப்பிட்ட நபரின் உயிரே போய்விடும்.
அதனால் விபத்து ஏற்படும் பட்சத்தில் காருக்குள் இருப்பவர் முன்னே வந்து மோதுவதற்கு முன் அடுத்த நொடியிலேயே காரின் உள்ளே உள்ள பலூன் ஓப்பன் ஆகிவிடும் இதனால் அவர் முன்னே வந்து மோதினாலும் பெரிய அளவில் அடி படாமல் இருக்கும். இதற்காகத் தான் ஏர் பேக்கை பயன்படுத்துகின்றனர். சாலையில் செல்லும் கார்களில் சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே ஏர் பேக் வேலை செய்யும்.
சீட் பெல்ட்
ஒரு கமர்சியல் காரில் 2 பாயிண்ட் அல்லது 3 பாயிண்ட் சீட் பெல்ட் தான் வழங்கப்பட்டிருக்கும். இது தான் பொருத்துவதும், கழட்டுவதும் எளிதானது. இந்த ரக சீட் பெல்ட் விபத்து ஏற்படும் போது பயணிகள் முன்னே சென்று மோதுவதை தடுக்காது. மாறாக எஃப்1 போன்ற கார்களில் டிரைவர் மட்டுமே பயணிப்பார். அவரும் காருக்குள் காலை நீட்டி அமர்ந்து பயணிக்க வேண்டும் கிட்டத்தட்ட நாம் தரையில் காலை நீட்டி அமர்ந்தால் எப்படி அமர்வோமோ அந்த நிலையில் தான் அமர வேண்டும்.
அதனால் விபத்து ஏற்பட்டால் முதலில் அடிபடுவது கால் தான். இது மட்டுமல்ல, எஃப்1 கார்களில் 5-6 பாயிண்ட் சீட் பெல்ட் கட்டாயம் இருக்கும். இந்த சீட் பெல்ட் அணிந்த பின்பு தான் காரை ஓட்ட அனுமதியளிக்கப்படும். இந்த சீட் பெல்ட் டிரைவரை சீட் உடன் பசை போட்டு ஒட்டியது போல ஒட்ட வைத்துவிடும். அதனால் அவர் எப்படிப்பட்ட விபத்து ஏற்பட்டாலும் டிரைவர் முன்பக்கம் சென்று மோத வாய்ப்பே இல்லை இதனால் எஃப்1 கார்களுக்கு ஏர்பேக்கே தேவையில்லை.

6 பாயிண்ட் சீட் பெல்ட்
ஒரு காருக்கு 2 பாயிண்ட் சீட்பெல்ட், 3 பாயிண்ட் சீட் பெல்ட் என பாதுகாப்பு அம்சங்களில் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்திருப்போம் இதற்கு என்ன வித்தியாசம் எனப் பலருக்குத் தெரியாது. இதில் பாயிண்ட் என்பது சீட் பெல்ட் காருடன் இணைக்கப்பட்டுள்ள பகுதியாகும். 2 பாயிண்ட் சீட்பெல்ட் என்றால் 2 பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட் என்றால் 3 பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும். எஃப்1 கார்களில் 5-6 பகுதிகளில் இணைக்கப்பட்டுள்ள சீட் பெல்ட் பயன்படுத்தப்படுகிறது.
எஃப்1 கார் விலை
எஃப் 1 கார்களை பார்க்க சிறியதாகவும் ஒரு நபர் மட்டுமே பயணிக்கும் படி உள்ளதால் பலர் இதன் விலை குறைவாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் எஃப்1 கார்களின் விலை மிகவும் அதிகம் நீங்கள் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு விலை அதிகமாகும். சராசரியாக ஒரு எஃப்1 காரின் விலை ரூ100 கோடி வரும் எனக் கூறப்படுகிறது.
ஆனால் இந்த ரக கார்களை கார் நிறுவனங்களே ரேஸ் விஷயங்களுக்காகத் தயாரிப்பதால் அதை வெளியில் விற்கவில்லை ஒரு காரை தயாரிக்க ஒரு நிறுவனம் செலவு செய்யும் தொகையைத் தான் அந்த காரின் விலையாக நிர்ணயம் செய்கின்றனர். இதில் உங்களுக்கு புதிய தகவல்கள் கிடைத்தால் அதை நண்பர்களுடன் பகிருங்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications