பார்க்கிங் பிரேக் போடும்போது இந்த குட்டி பட்டனை அழுத்தணுமா? இந்த விஷயம் இவ்ளோ நாளா தெரியாம போச்சே நமக்கு!

காரில் பார்க்கிங் பிரேக்கை போடும் போது அதில் லிவரின் நடுவே உள்ள பட்டனை அழுத்த வேண்டுமா? வேண்டாமா எனக் குழப்பம் பலருக்கு இருக்கிறது. சிலர் அழுத்த வேண்டும் எனச் சொல்கிறார்கள் சிலர் அழுத்த வேண்டாம் எனச் சொல்கிறார்கள். இதில் எது உண்மை? இதன் பின்னால் உள்ள தொழிற்நுட்பம் என்ன? விரிவாகக் காணலாம் வாருங்கள்.

பொதுவாக கார்களில் பார்க்கிங் பிரேக் இருக்கும் விலை உயர்ந்த கார்களில் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் இருக்கும். குறைந்த விலை கார்களில் லிவர் மூலம் இணைக்கப்பட்டு மெக்கானிக்கல் பார்க்கிங் பிரேக் இருக்கும் எலெகட்ரானிக் பார்க்கிங் பிரேக்கில் எந்தப்பிரச்சனையும் கிடையாது. காரை சரியான இடத்தில் நிறுத்திவிட்டு பார்க்கிங் பட்டனை ஆக்டிவேட் செய்துவிட்டால் போதுமானது.

hand brake button

மெக்கானிக்கல் பிரேக் ஆக்டிவேட் செய்ய டிரைவர் சீட்டிற்கு அருகில் உள்ள லிவரை மேலே இருக்க வேண்டும் இதில் எல்லோருக்கும் ஏற்படும் குழப்பம் என்னவென்றால் லிவரில் உள்ள பட்டனை அழுத்திவிட்டு பின்னர் மேலே இழுக்க வேண்டுமா அல்லது அழுத்தாமல் மேலே இழுக்க வேண்டுமா என்ற குழப்பம் இருக்கும்.

இந்த குழப்பத்திற்குத் தீர்வு காண வேண்டுமென்றால் முதலில் இந்த தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். டிரைவர் சீட்டுக்கு அருகே உள்ள லிவர் ஒரு சிறிய ஸ்பிரிங் மூலம் கேபிளில் இணைக்கப்பட்டிருக்கும். அந்த கேபிள் பிரேக் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

hand brake button

பார்க்கிங் லிவரை மேலே இழுக்கும்போது ஸ்ப்ரிங் கேபிளை இழுக்கும். அதன் மூலம் பிரேக் ஆக்டிவேட் ஆகும். அதன் பின் வாகனம் முன்பின் நகராமல் இருந்த இடத்திலேயே நிற்கும். பிரேக் லிவரில் இணைக்கப்பட்ட ஸ்பிரிங் பிரேக் லிவரின் பின்பக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். முன்பக்கத்தில் பற்கள் கொண்ட ஒரு பிளேடு இருக்கும்.

பிரேக்கிங் லிவருடன் ஒரு கொக்கி இணைக்கப்பட்டிருக்கும் அது பல்லில் தொட்டுக் கொண்டிருக்கும். நாம் பிரேக்கிங் லிவரை மேலே இழுக்கும்போது அதன் ஒவ்வொரு பல்லாக மேலே வரும். பிரேக்கிங் லிவரையும் நாம் விடும்போது அது மீண்டும் ஆரம்ப நிலைக்கு செல்லாமல் இருக்க இது உதவும். இந்த கொக்கி நாம் பிரேக்கிங் லிவரிலிருந்து கையை எடுத்த பின்பும் அதன் டென்ஷனை குறைக்காமல் பாதுகாக்கும்.

பிரேக்கிங் லிவருக்கு நடுவே உள்ள பட்டன் இந்த கொக்கியை கண்ட்ரோல் செய்யும் பட்டன் தான். இந்த பட்டனை அழுத்தினால் இந்த கொக்கி பிரேக்கிங் லிவருக்கு கீழே உள்ள பல்லில் படாமல் தூக்கிக் கொள்ளும் இதனால் பிரேக்கிங் லிவரை ரிலீஸ் செய்யும் போது அடுத்தடுத்த பல்லில் படாமல் சுலபமாக ரிலீஸ் செய்ய முடியும் இதற்காகத்தான் அந்த பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

சிலர் பார்க்கிங் பிரேக்கை போடும்போது இந்த பட்டனை அழுத்துகின்றனர், சிலர் அழுத்தாமல் விடுகின்றனர். இரண்டுமே தவறில்லை, இந்த பட்டன் பார்க்கிங் பிரேக்கை ரிலீஸ் செய்வதற்காக வழங்கப்பட்ட பட்டன் தான். பார்க்கிங் பிரேக்கை போடும்போது இதைப் பயன்படுத்துவது நிச்சயம் தவறு கிடையாது.

சிலர் இந்த பட்டனை அழுத்தாமல் பார்க்கிங் பிரேக்கே போட்டால் பல் தேய்ந்துவிடும் எனச் சொல்வார்கள் ஆனால் பல் தேய்மானம் என்பது அவ்வளவு எளிதாக நடக்காது அதே நேரம் பல் தேய்மானம் என்பது பார்க்கிங் பிரேக்கிங் டென்ஷனுக்கு எந்த வித தொந்தரவையும் ஏற்படுத்தாது பிரேக்கின் பெர்பார்மன்ஸ்சையும் பாதிக்காது

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பார்க்கிங் பிரேக்கை போதும் போது பட்டனை அழுத்தவேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் அழுத்தினாலும் தவறு கிடையாது. இந்த இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள். ஆனால் பிரேக்கை ரிலீஸ் செய்யும் போது பட்டனைக் கட்டாயம் அழுத்த வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 31, 2023, 18:36 [IST]
English summary
Do you press the button while pulling the hand brake know the correct detail here
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+